என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He said that the cost of inputs is reduced and the cost of production is greatly reduced"

    • வட்டார வேளாண் உதவி இயக்குநர் அறிவுரை
    • மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் விஷமாக மாறி வருகிறது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட வேகமங்கலம் கிராமத்தில் இயற்கை வேளாண்மை குழுவிற்கு திறன் மேம்பாட்டு குழுவிற்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் அங்கக சான்று ஆய்வாளர் தனசேகர் கலந்து கொண்டு இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது பயன்படுத்த கூடிய இடுபொருட்கள் பற்றி விவசாயி களுக்கு எடுத்துரைத்தார்.

    இதை தொடர்ந்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் பேசியதாவது:- தற்போது நிலவும் வேளாண் இடுபொருள் விலையானது விவசாயிகள் எளிதில் வாங்கி உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை.

    மேலும் மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் விஷமாக வேகமாக மாறி வருகிறது. இதனால் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    மேலும் இயற்கை விவசாயத்தில் இடுபொருட்கள் சுயமாக விவசாயிகளே பண்ணையில் தயாரித்து பயன்படுத்துவதால் இடுபொருட்கள் செலவு குறைந்து உற்பத்தி செலவு வெகுவாகக் குறைகிறது என்றார். இந்ந பயிற்சி முகாமில் 30-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×