என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He tried to cross the tracks."

    • பசு மாட்டை தேடி சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    பேரணாம்பட்டு அடுத்த நரியனேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). கார் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி உஷா என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது பசு மாட்டை வீட்டின் அருகே கட்டியிருந்தார். அந்த மாடு திடீரென காணாமல் போனது. இரவு முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை சரவணன் தனது மனைவியிடம் அருகில் உள்ள பகுதிக்கு சென்று மாட்டை தேடச்செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    வடபுதுப்பட்டு பகுதியில் கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பசுமாடு அங்கு சென்றிருக்கும் என கருதிய சரவணன் அந்தப்பகுதிக்கு செல்ல ஆம்பூர்- பச்சகுப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது சென்னை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாகுப்பம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புன்னியகோடி.

    இவரது மகன் வெற்றிவேல் (வயது 34). இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துவிட்டு அப்பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வந்தார்.

    நேற்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் ஆம்பூர் அருகே பச்சகுப்பம் ரெயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக பெங்களூரில் இருந்து தானாப்பூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில் வெற்றி வேலுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும், மேலும் வருகிற கார்த்திகை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக இருந்ததும் தெரியவந்தது.

    • ரெயில்வே போலீசார் உடலை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே இன்று காலை உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்தனர்.

    விசாரணையில் அரக்கோணம் கிரிவல்ஸ் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(வயது 43). என்பதும், இவர் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

    இவர் வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக இன்று காலை தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×