என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம், பொருட்களில் முத்திரை பார்த்து வாங்க வேண்டும்
    X

     வாலாஜா நகராட்சி சீனிவாச ெபருமாள் கோவில் தெருவில் உள்ள ரேசன் கடையில் பொருட்களின் தரத்தினை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    தங்கம், பொருட்களில் முத்திரை பார்த்து வாங்க வேண்டும்

    • தள்ளுபடி இலவசம் என ஏமாறாதீர்கள்
    • கலெக்டர் அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி, தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக் கூட்டம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    நுகர்வோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தள்ளுபடி, இலவசம் என்று ஏமாறா தீர்கள். எந்த பொருள் வாங்கினாலும் ரசீது கேட்டு வாங்கவும், எந்த பொருளையும் அதன் தரத்தை பார்த்து வாங்க வேண்டும். மலிவு விலையில் கிடைக்கிறது என்று ஏமாந்து விடக்கூ டாது. பட்டுச்சேலைகள் வாங்கும் பொழுது சில்க் மார்க் முத்திரை பார்த்து வாங்க வேண்டும்.

    தங்க நகைகள் வாங்கும் போது ஹால்மார்க் முத்திரை இருக்கின்றதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் அக்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்களை வாங்குவது மிகச் சிறந்தது. அதேபோல சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொரு ட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அன்றாடம் கடைகளுக்கு செல்லும் பொது கையில் துணி பைகளை எடுத்துச் சென்று பொருட்களை வாங்கி வர வேண்டும்.நுகர்வோர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட குறை தீர்வு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவ லர்களை அணுகலாம்.

    ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை பெற்று விநியோகம் செய்ய அறிவுரை வழங்கப்ப ட்டுள்ளது. இது குறித்த புகார்கள் இருந்தால் மாவட்ட குறைதீர்வு அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம்.

    இந்த புகாரின் மீது உரிய விசாரணை செய்து நட வடிக்கை மேற்கொள்ள ப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், மாவட்ட நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் குமரேசன் மற்றும் அலுவ லர்கள். நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×