என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குறைதீர்க்கும் அமர்வு
- நாளை நடக்கிறது
- கலெக்டர் அறிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு குறைதீர்க்கும் அமர்வு நாளை 12-ந்தேதி காலை ஆற்காடு - ஆரணி சாலையில், விலாரி கூட் ரோட்டில் உள்ள கே.பி.ஜே மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த அமர்வில் கலந்து கொண்டு குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணலாம்.
மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story






