என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Various demands were emphasized"

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி அளித்தனர்
    • மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கூட்டமைப்பு சார்பிலும், சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் சார்பிலும் நேற்று கலெக்டர் வளர்மதியிடம் மனுக்களை அளித்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    இந்த நிறுவனங்களின் பொதுவான கோரிக்கையாக புதிய மின் கட்டணத்தை ரத்து செய்து, பழைய மின் கட்டணம் செயல்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

    மின்நுகர்வோர்களுக்கு பீக் ஹவர் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    மேற்கூரை, சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு மல்டி டாரிப்பை உடனடியாக ரத்து செய்வதுடன், 2 ஆண்டுகளுக்கு மின்சார மற்றும் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

    பின்னர் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதான மின் கட்டண உயர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க மாவட்ட செயலாளர் முரளி தெரிவித்தார்.

    ×