என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதம மந்திரி தொழில் பழகுனர் மேளா
    X

    பிரதம மந்திரி தொழில் பழகுனர் மேளா

    • 9-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்டத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப் புகளை கொண்டு நடத்தப்படுகிறது.

    முகாமில் தகுதியுடைய ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற பயிற்சியா ளர்கள் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை அணு கலாம்.ranipetdsto@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித் துள்ளார்.

    Next Story
    ×