என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He gave free bicycles to the students"

    • ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கோ. வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நிர்வாக குழு செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இதில் நிர்வாக குழு துணைத் தலைவர் பி.என்.பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.சாந்தி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

    இதில் ஆற்காடு நகர தி.மு.க. நகர செயலாளர் ஏ.வி சரவணன், நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் கோபு, சிவா, நகரத் துணைச் செயலாளர்கள் சொக்கலிங்கம், ருக்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    ×