search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water facility"

    • கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றை சோதனை
    • ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இயங்குகிறது.

    வாலாஜா ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள், நகர்புற மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து ஏற்படுபவர்கள் என தினந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் தேசிய சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல் வாலாஜா அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் மருத்துவமனையின் கோப்புகள், நோயாளிக்களுக்கான தனி பிரிவுகள் உள்ளதா, கழிப்பறை வசதி, சிகிச்சை முறை, தண்ணீர் வசதி போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உள்நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தவர்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்டு அங்கு பணிபுரியும் செவிலியர்களிடம் பணிபுரியும் நேரம், பணி சுமை குறித்த ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், சுகாதார இணை இயக்குனர் டாக்டர். விஜயா முரளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.உஷா நந்தினி, மற்றும் செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • காட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை
    • 10 ஹக்டேர் பரப்பளவில் காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் மொத்தம் 10 ஹக்டேர் பரப்பளவில் காடுகள் பராமரிக் ப்பட்டு வருகின்றன. இங்கு, பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது, கோடை காலத்தில் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக, மான்கள் காடுகளை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது தொடர்கிறது. கோடை காலத்தில் வனவிலங்குகளின் மேலும், மான்கள் கூட்டம்வெளியேறுகிறது.

    பாணாவரம் காப்புக் காட்டில் வன விலங்குகள் தாகத்தை தீர்க்க, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சின்னசேங்கலில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கிருஷ்ணராயபுரம்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சேங்கல் ஊராட்சி சின்னசேங்கலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து நீர் எடுத்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நிரப்பி, குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து போனதால் குடிநீர் வினியோகம் செய்யமுடியவில்லை என கூறி மாற்று ஏற்பாடாக காவிரி கூட்டு குடிநீர் செல்லும் குழாயிலிருந்து குடிநீர் பெற குழாய் அமைத்து கொடுத்தனர். அதிலும் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமையால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்து பயன் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் மிகவும் சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை சேங்கல்- உப்பிடமங்கலம் சாலையில் ஒன்று திரண்டு அனைவருக்கும் குடிநீர் கிடைக்கவும், காவிரி நீரை மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் நிரப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சேங்கல்-உப்பிடமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    கோபி அருகே குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோபி:

    கோபி ஊராட்சி ஒன்றியம் அளுக்குழி ஊராட்சி கோபி பாளையம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்தனர். இது குறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

    இதன் காரணமாக அந்த பகுதி பெண்களும், ஆண்களும் இன்று கலை திடீர் போராட்டத்தில் குதித்தனர். ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் கோபிபாளையம் பிரிவில் அவர்கள் திரண்டனர்.

    பெண்கள் காலி குடங்களுடன் வந்திருந்தனர். திடீரென ரோட்டில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வசதி கேட்டு அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தால் ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது. முக்கியமான சாலை என்பதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றன.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×