search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

    • ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் நடந்தது
    • பெண் கவுன்சிலர் வாயில் பிளாஸ்டிக் ஒட்டிக்கொண்டு எதிர்ப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் தலைவர் சுஜா தாவினோத் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை களை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் குடும்ப தலை விகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட் டத்தினை செயல்படுத்தியுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராணிப் பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத் திற்கு தேவையான நூல்கள் கொள்முதல் செய்ய விலை நிர்ணயக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பதிப்பகத்தாரர்கள், வெளியீட்டாளர்கள் மூலம் புத்தகங்கள் வினியோகம் செய்ய ரூ.10 லட்சம் செலுத்துவது, நகராட்சிக்கு சொந்தமான 16 கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாததால் வருவாய் ஆய்வாளர் மூலம் சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்து பொது ஏலம் விடவும், கடை வாடகை செலுத்தாதவர்கள் மீது கோர்ட்டு மூலம் வழக்கு தொடர்ந்து வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    26-வது வார்டு அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் ஜோதி சேதுராமன், தனது வார்டில் நீண்ட நாட்களாக வைக்கப்படும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை என கூறி தனது வாயில் துணியை வைத்து, அதன்மீது பிளாஸ் டிக்கால் ஒட்டிக் கொண்டு கூட்டத்தில் பங்கேற்று நூதன முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    அப்போது எங்கள் வார்டில் மின்விளக்கு எரிவதில்லை, நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள 30 வார்டுகளிலும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்துத் தரப்படும் எனவும் மற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×