என் மலர்
ராணிப்பேட்டை
பிரபல பாலிவுட் நடிகை, ராணி முகர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியது, பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை திரையுலகம் என்றாலே அதிரடிக்குக் கொஞ்சமும் குறைவிருக்காது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். பல சம்பவங்களை திரையுலகினர் வெளியில் சொல்வதில்லை. இப்போது ராணி முகர்ஜி தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

முஜ்சே தோஸ்தி கரோகே படத்திற்குப் பிறகு வேலை இல்லாமல் 8 மாதங்கள் சும்மா இருந்தேன். என் கெரியர் முடிந்துவிட்டது, ராணி அவ்வளவு தான் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்தார்கள்.

அந்த நேரத்தில் தான் சாத்தியா பட வாய்ப்பு வந்தது. சாத்தியாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்க என் பெற்றோர் யஷ் சோப்ராவைச் சந்திக்கச் சென்றார்கள். யஷ் சோப்ராவோ தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களை வெளியே விடுவேன் என்றதால் நான் சாத்தியாவில் நடித்தேன் என்றார். ராணி முகர்ஜியின் இந்தக் கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொன்னை ஆற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொன்னை, மேல்பாடி தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை:
ஆந்திர மாநிலம், கலவகுண்டா அணையில் இருந்தும் மற்றும் கிளை ஆறுகளில் இருந்தும் சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் பொன்னை ஆற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் பெய்து வருகிறது. இதனால் பொன்னை ஆற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு மிக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பொன்னை அருகே ஆற்றில் வெள்ளம் செல்வதை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பொன்னை ஆற்றை ஆய்வு செய்தார்.
பொன்னை ஆற்றிலிருந்து 60 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் நேற்று அதிகாலை சுமார் 1 மணி முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொன்னை ஆற்றின் கரையோரம் 100 நபர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கால்நடைகளும் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக, நேற்று அதிகாலை பொன்னை அருகே உள்ள பொன்னையாற்றின் தரைப்பாலத்தின் மீது சுமார் 2 அடி உயர அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் பொன்னை போலீசார் பாலத்தின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கு தடை விதித்தனர். மேலும் இத்தரை பாலத்தின் 5-வது கண்ணுக்கு அருகில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது..
மேலும் மேல்பாடி அருகே உள்ள பொன்னையாற்று பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றை கடக்க உதவும் மேல்பாடி தரைப்பாலத்தின் மீதும் பாலமே தெரியாத அளவில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பாலத்திலும் வெள்ளப் பெருக்கு காரணமாக, உடைப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்னை அருகே இரும்புக் கூரை போட்ட பழைய இரும்பு கடை சாய்ந்து விழுந்தது. இதேபோல் பொன்னை- லாலாபேட்டை சாலையில், கீரைசாத்து அருகே சென்ற ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அமைச்சர் துரைமுருகன் நேற்று திருவலம் அருகே பொன்னை ஆற்றில் வெள்ளம் செல்வதை நேரில் ஆய்வு செய்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி அருகே பி.எட்.மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள அபிராமி நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவருடைய மகள் சோனிகா (வயது 22). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். மழையின் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அவரது அப்பா மாணிக்கராஜ், சோனிகாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் மாணிக்கராஜ் தூத்துக்குடிக்கு சென்றார். மதியம் 3 மணிக்கு அவர் வீட்டிற்கு திரும்பியபோது, குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். அனைவரும் ஏன் சாப்பிடாமல் இருந்தீர்கள்? என அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சோனிகாவிற்கு வயிற்று வலி உள்ளதாக கூறி அறையில் தூங்க சென்றுள்ளார். நீங்கள் வந்த பின்பு அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று இருக்கிறோம் என்று கூறினர்.
உடனே அவர் சோனிகாவை சாப்பிடுவதற்கு அழைக்க அவரது அறைக்கு சென்றார். அப்போது அவரது அறையின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. மாணிக்கராஜ் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு சோனிகா சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக சோனிகாவை மீட்டு தூத்துக்குடியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணத்தில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா கோவில் காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் ராஜாளி கடற்படை தளம் எதிரே உள்ளது. குருத்வாரா கோவில் முன்பு மரத்தாலான உண்டியல் உள்ளது.
அந்த மர உண்டியலை மர்ம நபர்கள் யாரோ உடைத்து, அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதில் ரூ.10 ஆயிரம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
குருத்வாரா கோவில் நிர்வாகி அமர்துசிங் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.
ஐதராபாத்:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெற்று வந்தது. அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார்.
இதனால் ஆவேசமடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூச்சலிட்டனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமான சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.
வெளிநடப்பு செய்தன் பின் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு, “கடந்த 2 ஆண்டுகளாக ஆளும் கட்சியினால் நான் அவமானப்படுத்தப்பட்டு வந்தாலும் பொறுமையுடன் இருந்தேன். இன்றைக்கு அவர்கள் எனது மனைவியை விமர்சித்துள்ளனர். நான் எனது வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றார்.
இதையும் படியுங்கள்... திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றினை கடக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து 1,05,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் பாலாற்றின் கரையோரங்களில் உள்ள 30க்கும் அதிகமான கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் கனமழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் சுமார் 100 வருடங்களுக்கு பின்பு வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு பொன்னை மற்றும் பாலாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்து தற்போது தடுப்பணைக்கு 1,05,000 கன அடி நீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள சாதம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, சுமைதாங்கி உள்ளிட்ட 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது, ஆற்றினை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
வாலாஜா அடுத்த சாதிக்பாட்சா நகர் பாலாற்றை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 1200-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலாறு அணைக்கட்டில் அதிகாலை 3 மணியளவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையும் படியுங்கள்...உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி-முதல்வர் மு.க. ஸ்டாலின்
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்அகிலாண்டேஸ்வரி கோவிலில் சொக்கப்பனை நேற்று ஏற்றப்பட்டது.
ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று கார்த்திகை தீப சொக்கப்பனை ஏற்றப்படும்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று சொக்கப்பனை ஏற்றப்பட்டது. முன்னதாக சுவாமி சன்னதியில் தீப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன்பின் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மாலை 6 மணிக்கு உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 7 மணியளவில் கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தனர். சுவாமி, அம்பாளுக்கும் முன்னதாக விநாயகரும், முருகனும், சண்டிகேஸ்வரரும் வந்தனர். அங்கு கோபுரத்திற்கும் நாலுகால் மண்டபத்திற்கும் நடுவே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அதனை கண்டருளினர்.
அதன் பின் சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் 4-ம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து மேல வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு ஏற்றப்பட்ட சொக்கப்பனையை கண்டருளினர். தொடர்ந்து தெற்கு வாசல் வழியாக சங்கமேஸ்வரர் சன்னதிக்கு வந்தனர். அங்கு சொக்கப்பனையை கண்டருளிய பின் வீதி உலா வந்து மேலவாசல் வழியாக கோவில் உள்ளே சென்று உற்சவ மண்டபத்தை அடைந்தனர்.
கார்த்திகை தீப திருநாளையொட்டி நேற்று கோவிலில் 3 இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவ என்ற பக்தி கோஷத்துடன் வழிபட்டனர்.

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க.வினர் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் எம்.கே.முரளி தலைமையில் இதுகுறித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த அமேசான் வெளியிட்ட திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் 1995 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படமெடுத்த நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோரை கைதுசெய்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.
அப்போது பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், சமூக நீதிப்பேரவை மாநில துணை செயலாளர் வக்கீல் ஜானகிராமன், வாலாஜா மத்திய ஒன்றிய செயலாளர் சபரி கிரீசன் உள்பட பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதேபோல் ஜெய்பீம் படத்தை கண்டித்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் சோளிங்கர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ம.க.முன்னாள் மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், சமூக சமூக நீதிப் பேரவை துணைச் செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் சென்று சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.
பாணாவரம் போலீஸ் நிலையத்திலும் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மனு அளித்தனர். அப்போது போலீஸ் நிலையம் எதிரில் நடிகர் சூர்யா உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ேபாலீசார் அதனை தடுத்து பா.ம.க.வினரிடமிருந்து உருவபொம்மையை பிடுங்கிச்சென்றனர்.
இதே பிரச்சினையை கண்டித்து அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திரைப்படத்தில் நடித்த சூர்யா தயாரிப்பாளர் ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கூறி மனு அளித்தனர்.
ஆற்காடு நகர பா.ம.க. சார்பில் நகர செயலாளர் அறிவுச்சுடர் தலைமையில் மாநில பசுமை தாயகம் பொறுப்பாளர் டி.டி.மகேந்திரன், நகர தலைவர் சஞ்சீவிராயன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஏ.வி.டி.பாலா நகர துணை செயலாளர் ராமன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆற்காடு டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
வாலாஜா போலீஸ் நிலையத்தில் பா.ம.க. நகர செயலாளர் ஞானசேகர் தலைமையில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர்் ஞானவேல் ஆகியோரை கைது செய்ய கோரி புகார் மனு அளித்தனர்.
அப்போது நகர தலைவர் சுரேந்தர், ஒன்றிய செயலாளர்கள் ரவி, ரஜினிசக்ரவர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பூண்டி மோகன், மாநில நிர்வாகி ஞானசவுந்தரி உள்பட பலர் உடனிருந்தனர்.
கல்பாக்கம் அருகே பாலாற்றில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 35). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வாயலூர் பாலாற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தூண்டிலில் மீன் சிக்கிவிட்டதாக நினைத்து இழுத்தபோது, எதிர்பாராதவிதமாக தூண்டில் அறுந்து விழுந்ததில் அவர் பாலாற்றில் தவறி விழுந்தார். இதனால், ஆற்றில் இருந்த புதருக்குள் அவர் சிக்கி மூச்சுத் திணறி இறந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
வாலாஜா அருகே மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வயல்வழியாக மூதாட்டியின் உடலை எடுத்து சென்றனர்.
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த எடையந்தாங்கல் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் விவசாய நிலங்களின் வழியாக உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் மயானத்திற்கு பாதை அமைத்து தர பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன், கிராமநிர்வாக அலுவலர் விஸ்வநாதன் ஆகியோர் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் மூதாட்டியின் உடலை நெற்பயிர்கள் விளைந்துள்ள விவசாய நிலத்தின் வழியாகவும், ஓடைக்கால்வாய் வழியாக இடுப்பளவு நீரிலும் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணியின்போது காட்டுயானைகள் வழித்தடம் அழிக்கப்பட்டதா? என்பது குறித்து கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி நேரில் ஆய்வு செய்தார்.
ஊட்டி:
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று வனத்துறை மூலம் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே அந்த சாலையில் ஒருசில வளைவுகள் குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்களை திருப்ப முடியாத நிலை இருந்தது. அந்த வளைவுகளை கண்டறிந்து விரிவுபடுத்தி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ராதாகிருஷ்ணன் பாலம் அருகே பழைய தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு, சாலையை விரிவுபடுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அந்த இடம் வழியாக காட்டுயானைகள் சென்று வருவதால், அவை இடம் மாறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு யானை வழித்தடம் அழிக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார். காட்டுயானைகள் கடந்து செல்வதற்கு இடையூறு இல்லாமல் சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வலதுபுறம் பாறை இருப்பதால், வாகனஙகள் இடதுபுறம் ஒதுங்கி செல்லும்போது விபத்தில் சிக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வன், குன்னூர் வனச்சரகர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து கோட்ட பொறியாளர் செல்வன் கூறியதாவது:-
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறிப்பிட்ட இடம் குறுகலாக இருந்ததால் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காட்டுயானைகள் கடந்து செல்வதற்கு வசதியாக சிறிது இடம் விடப்பட்டு, நிலையான இடத்தை ஏற்படுத்தி அகலப்படுத்துவது குறித்து நீலகிரி வன கோட்ட அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த பிறகு யானைகள் கடக்க வழிவிட்டு சாலை அகலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது அங்கு சாலையை அகலப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரனின் மகன் ஸ்ரீதர் (வயது 21), துரித உணவகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அரக்கோணம் அசோக் நகரைச் சேர்ந்தவர் மதன். நண்பர்களான இருவரும் நேற்று மதியம் மதுபானம் குடித்து விட்டு, போதையில் சித்தேரி பகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றனர்.
ஏரியில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் ஸ்ரீதர் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி விட்டார். உடனே மதன், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் ஓடி வந்து ஏரியில் இறங்கி தேடி ஸ்ரீதரை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார், ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.