search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது
    X
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது

    கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்அகிலாண்டேஸ்வரி கோவிலில் சொக்கப்பனை நேற்று ஏற்றப்பட்டது.
    ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று கார்த்திகை தீப சொக்கப்பனை ஏற்றப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு நேற்று சொக்கப்பனை ஏற்றப்பட்டது. முன்னதாக சுவாமி சன்னதியில் தீப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன்பின் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மாலை 6 மணிக்கு உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 7 மணியளவில் கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தனர். சுவாமி, அம்பாளுக்கும் முன்னதாக விநாயகரும், முருகனும், சண்டிகேஸ்வரரும் வந்தனர். அங்கு கோபுரத்திற்கும் நாலுகால் மண்டபத்திற்கும் நடுவே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அதனை கண்டருளினர்.

    அதன் பின் சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் 4-ம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து மேல வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு ஏற்றப்பட்ட சொக்கப்பனையை கண்டருளினர். தொடர்ந்து தெற்கு வாசல் வழியாக சங்கமேஸ்வரர் சன்னதிக்கு வந்தனர். அங்கு சொக்கப்பனையை கண்டருளிய பின் வீதி உலா வந்து மேலவாசல் வழியாக கோவில் உள்ளே சென்று உற்சவ மண்டபத்தை அடைந்தனர்.

    கார்த்திகை தீப திருநாளையொட்டி நேற்று கோவிலில் 3 இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவ என்ற பக்தி கோஷத்துடன் வழிபட்டனர்.
    Next Story
    ×