என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
100 ஆண்டுக்கு பின் வாலாஜா பாலாற்றில் 1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
Byமாலை மலர்19 Nov 2021 12:31 PM IST (Updated: 19 Nov 2021 1:57 PM IST)
பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றினை கடக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து 1,05,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் பாலாற்றின் கரையோரங்களில் உள்ள 30க்கும் அதிகமான கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் கனமழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் சுமார் 100 வருடங்களுக்கு பின்பு வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு பொன்னை மற்றும் பாலாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்து தற்போது தடுப்பணைக்கு 1,05,000 கன அடி நீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள சாதம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, சுமைதாங்கி உள்ளிட்ட 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது, ஆற்றினை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
வாலாஜா அடுத்த சாதிக்பாட்சா நகர் பாலாற்றை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 1200-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலாறு அணைக்கட்டில் அதிகாலை 3 மணியளவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையும் படியுங்கள்...உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி-முதல்வர் மு.க. ஸ்டாலின்
Next Story
×