என் மலர்
ராமநாதபுரம்
- பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வருகை தென் தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அமையும் என தேனி.சை.அக்கீம் கூறினார்.
- மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா ஏற்பாடு செய்கிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 116-வது ஜெயந்தி விழாவிற்கு முதல் முறையாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்த வருவது தென்தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமையும் என்று ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் தேனி.சை.அக்கீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் 'மாலை மலர்' நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
பசும்பொன் தேவர் திருமகனாரின் 116-வது ஜெயந்தி விழாவிற்கு முதல் முறையாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருவது ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்ல, தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் அதேபோல் பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. ஏனென்றால் அன்புமணி ராமதாஸ் 5 ஆண்டு காலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பொழுது மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளார்.
கிராமப்புற சுகாதார திட்டம், 108 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு போன்ற எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாத, மாற்றம் செய்ய முடியாத பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வருவது தென் மாவட்ட கட்சியினர், பொதுமக்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் இதுபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது அனைவருடைய ஆவல். அதனை தலைவர் இரவு, பகல் பாராமல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர் என்பதை நிரூபிக்கும் வகையில் பணியாற்றி கொண்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
நாளை (30-ந்தேதி) தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவிற்கு தலைவர் தரைவழி போக்குவரத்து மூலமாக வருகிறார். வரும்பொழுது தென் தமிழகத்தின் முதன்மை நகரமாக திருச்சி மாவட்ட செயலாளர் உமாநாத் தலைவரை வரவேற்கிறார். சிறப்பான முறையில் வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்தி அவருடன் மதுரை வரை உடன் வருகிறார். அவருடன் திருச்சி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் திலீப் குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் பிரின்ஸ் ஆகியோர் உடன் வருகின்றனர்.அதேபோல் மதுரையில் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.கே.தேவர் தலைமையில், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன், சமூக நீதிப் பேரவை மாநில துணைச்செயலாளர் ராஜ்குமார், மாநில பசுமைத்தாயத்தின் துணைச்செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் வரவேற்று சிறப்பான முறையில் வழிநடத்தி செல்கின்றனர்.
இன்று (29-ந்தேதி) தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் வந்து தங்கி நாளை காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.கே.தேவர் தலைமையில் மதுரை மாவட்ட செயலாளர்கள் ராஜா, அழகர்சாமி, செல்வம் ஆகியோரின் முன்னிலையில் மதுரை வன்னியர் சங்க தலைவர் நடராஜன், மாநில பசுமைத்தாயத்தின் துணைச்செயலாளர் சண்முகநாதன் ஆகியோரின் முன்னிலையில் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து தென் மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், பரமகுரு, சின்னத்துரை (தூத்துக்குடி), ஜோதி முத்து, சிவகுமார், கென்னடி (திண்டுக்கல்) மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர்கள் வைரமுத்து, திருப்பதி மற்றும் சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் டேனியல் ஆகியோருடைய சிறப்பான ஏற்பாட்டில் மதுரையில் இருந்து புறப்பட்டு சரியாக 11 மணிக்கு திருப்புவனம் வருகிறார்.
திருப்புவனத்தில் சிவகங்கை மாவட்ட செயலாளர் ராஜசேகர் வரவேற்பு கொடுக்கிறார். அதை தொடர்ந்து அங்கிருந்து தென் மாவட்டத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரும் மாநில பொருளாளர் திலகபாமா மேற்பார்வையில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமையில் மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், மாநில பசுமை தாயக துணைச் செயலாளர் பொறியாளர் கர்ண மஹாராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட துணைத்தலைவர் திருப்பாலை அலி,
மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், மாணவர் சங்க தலைவர் கபில்தேவ், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், இளைஞர் சங்க அமைப்பாளர் லட்சுமணன், சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம், சிறுபான்மை பிரிவு செயலாளர் வாப்பாசா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சகுபர் சாதிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் மற்றும் ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலகுமாரன், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன்,
ராமேஸ்வரம் நகர செயலாளர் முருகன், மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஷெரீப், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் ஜிந்தா, திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், ராமநாதபுரம் நகர தலைவர் ராஜா ரபீக், கீழக்கரை நகர தலைவர் லத்தீப், ராமநாதபுரம் அமைப்பு செயலாளர் பாலா, நகர துணை செயலாளர் கார்த்திக், மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளிக்கின்றனர்.
அதோடு தொடர்ந்து 10 ஆண்டு காலம் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் சட்டமன்ற குழு தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கோ.க.மணி, சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தருவதால் இந்த வருட தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா பாட்டாளி மக்கள் கட்சியின் திருவிழா போல் நடைபெறும். தேவர் திருமகனாரின் மண்ணில் பசும்பொன்னில் சுமார் 2000 கொடிக்கம்பங்கள் நடப்பட்டு அதோடு மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் மக்களுக்கு அன்னதானம் சிறப்பாக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா ஏற்பாடு செய்கிறார்.
ஆகவே இந்த வருடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை மதுரை, ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் சுவரொட்டி மற்றும் வண்ண ஒளி பதாகைகள், அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வருகை தென் தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.
- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்தில் நிரந்தர மேற்கூரையை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
- முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் மற்றும் கமுதி வட்டத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் விழாவை–யொட்டி மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டப்பணி களை பார்வையிடுதல் மற் றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப் பினர் முருகேசன் முன்னி லையில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புதிய திட்டப்பணிகளை பார்வையிட்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத் தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச் சர் ராஜகண்ணப்பன் பர மக்குடி வட்டம், பார்த்திப னூர் பகுதியில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையிலி ருந்து கமுதி புறவழிச்சாலை ரூ.35.24 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினை பார்வை யிட்டு, நாளை (30.10.2023) பசும்பொனில் நடைபெறு கின்ற பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பொதுமக்க ளுக்கு பயன்பெறும் வகை யில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன், இந்த புறவழிச்சாலையின் மூலம் பசும்பொன்னிற்கு வரக்கூடியவர்கள் பார்த்தி பனூர் நகர் பகுதிக்குள் வராமலும் எந்த ஒரு இடையூ றுமின்றி பசும்பொன் செல் வதற்கு ஏதுவாக பயனுள்ள தாக இருக்கும் என தெரி வித்தார்.
பின்னர் அபிராமம் அருகே உள்ள மார்னிங் ஸ்டார் பெண்கல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணி கள் நிழற்குடை மற்றும் பசும்பொன்னில் முதுகுளத் தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட் டப்பட்ட பயணிகள் நிழற்கு டையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் சென்று வரும் வழியில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் நிரந் தர மேற்கூரை அமைக்கப் பட்டுள்ளதை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் பசும்பொன்னில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுப்புறத் தார்சா லையினை பார்வையிட்ட துடன், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மருத் துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளை போதியளவு அமைத்து செயல்படுத்திட வேண்டுமென அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரெத்தினசாமி, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜா, கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ் செல்வி, கமுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாசு தேவன், வட்டாட்சியர் சேது ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
- கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.
- அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் மகான் பாதுஷா நாயகம் கண்ட பல்லாக்கு ஒலியுல்லா
100- வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி மஸ்தான் சாகிபு தர்காவில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கொடி பல்லாக்கு ஒலியுல்லா தர்கா சென்று கொடியேற்றம் நடந்தது. இதில் கிழக்கு பள்ளி தலைவர் சேகுதாவது, மேற்கு பள்ளி தலைவர் பக்கீர் அலி, அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
- அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது
ராமநாதபுரம்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் சென்னை தமைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் தமிழக அரசின் அச்சாணி யாக இருந்து வரும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணை யான 4 சதவீத அகவிலைப் படி உயர்வு ஜுலை 1 முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு 16 லட்சம் அரசு ஊழியர் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளார்.
கடந்தாண்டில் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர் பார்த்த நிலையில் 3 சதவீத உயர்வு வழங்கி முதல்-அமைச்சர் ஆச்ச ரியத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்ேபாது 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்ததுடன் ஜூலை- அக்டோபர் இடையிலான 4 மாதங் களுக்கான நிலுவைத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத் திட்டம், சரண்டர் விடுப்பு ஒப் படைப்பு, உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு போன்ற எங்களின் கோரிக் கைகளையும் படிப்படியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
முதல்-அமைச்சரை, எங்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளருமான தியாகராஜனுடன் தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது.
- ராமநாதபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலா ளர் வி.கே.சுரேஷ் ஏற்பாட் டில் உற்சாக வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது. ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் வைகோ, முதன் மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டு அஞ் சலி செலுத்துகின்றனர். அவர்களுக்கு ராமநாதபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலா ளர் வி.கே.சுரேஷ் ஏற்பாட் டில் உற்சாக வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலா ளர் வி.கே.சுரேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலா ளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், புதூர் பூமி நாதன் எம்.எல்.ஏ., சாத்தூர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செய லாளர்கள் செல்வரா கவன் (திண்டுக்கல்), பசும்பொன் மனோகரன் (சிவகங்கை) முனியசாமி (மதுரை மாந கர்), மாரநாடு (மதுரை புறநகர் வடக்கு), ஜெயரா மன் (மதுரை புறநகர் தெற்கு), ராமகிருஷ்ணன் (தேனி), கலியமூர்த்தி (புதுக் கோட்டை), ரமேஷ் (தூத்துக் குடி வடக்கு), செல்வம் (தூத் துக்குடி தெற்கு), வேல்முரு கன் (விருதுநகர் தெற்கு), கம்மாப்பட்டி ரவிச்சந்திரன் (விருதுநகர் வடக்கு),
தலைமைக்கழக நிர்வாகி கள் கே.ஏ.எம்.குணா (மாநில தணிக்கை குழு உறுப்பினர்), மாநில இளைஞரணி செய லா ளர் ஆசைத்தம்பி, மாநில தொண்டரணி செய லாளர் பாஸ்கர சேதுபதி, சட்ட, திட்ட திருத்தக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில மீனவரணி செயலா ளர் பேட்ரிக் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
எனவே ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வா கிகள் அதிக அளவில் வாகனங்களில் வந்து கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்ட எல்கையான பார்த்திபனூர் மருச்சுக்கட்டி யில் நாளை காலை 9 மணி அளவில் தேவர் திருமகனா ருக்கு அஞ்சலி செலுத்த வருகை தரும் ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்கி றேன்.இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
- ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
- ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மூன்று நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடை பெறுகிறது. குருபூஜை விழாவை முன்னிட்டு ராம நாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி யில் இருக்கும் வகை யில் பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு சுமார் 12,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் காவல்துறையில் உரிய அனுமதி பெற்று தங்க ளது சொந்த வாகனங்க ளில் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டும், வாடகை வாகனங்கள் மற் றும் இருசக்கர வாகனங்க ளில் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
குருபூஜைக்கு வருபவர்க ளின் வசதிக்கென தேவைப் படும் கிராமங்களிலி ருந்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவ்வாறு வந்து செல்பவர்கள் விபத்து களை தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தின் வெளிப்பு றத்தில் தொங்குவது, மேற்கூ ரையில் அமர்வது, வெடி வெடிப்பது போன்ற விதி மீறல்களிலும் ஈடுபடக் கூடாது. குருபூஜைக்கு வந்து செல்பவர்கள் தேவையில் லாத பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு, சமு தாய ரீதியிலான கோஷங் களை எழுப்பக்கூடாது.
ராமநாதபுரம் மாவட்டத் தில் நடைபெற உள்ள தேவர் குருபூஜையை முன் னிட்டு கலந்து கொள்ள வரும் நபர்கள் 144 தடை உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள் ளப்படுகிறது. மேலும் விதி மீறல்களில் ஈடுபடும் நபர் களை கண்காணித்து நடவ டிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 37 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் பேருந்துகளில் வருபவர்களின் நடவடிக்கை களை கண்காணிக்க ஒவ் வொரு கூடுதல் பேருந்திலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு பயணம் செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்கா ணிக்கும் வகையில் 300 உடையில் அணிந்து கொள் ளும் பிரத்யேக கேமராக்கள், பேருந்துகளில் பாது காப்பு பணியில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளில் முக்கிய இடங்களில் குருபூஜைக்கு வந்து செல்லும் நபர்களின் விதிமீறல் செயல்களை கண் காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, டிரோன் கேமராக்கள் 3, மொபைல் கேமரா வாக னங்கள் 5, மொபைல் கேமராக்கள் 9 இடங்களிலும் மற்றும் கமுதி மற்றும் பசும் பொன் பகுதிகளில் முக்கிய இடங்களில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.
அத்துடன் மாவட்டம் முழுவதிலும் 57 இருசக்கரம் மற்றும் 53 நான்கு சக்கர வாகன ரோந்து தனிப்படை கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விதிமீ றல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த வருடங்களில் நடை பெற்ற தேவர் குருபூஜையில் விதிமீறலில் ஈடுபட்டோர்மீது 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
- மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.
- அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி பசும்பொன் வருகை தருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல் அமைச்சர் தனிப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகை யில்:-
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்திற்கு வந்து செல்லும் வரை இருவழியி லும் பணி மேற்கொள்ளும் அலுவலர்கள் திட்டமிட்ட படி கவனமுடன் செயல்பட வேண்டும். மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் முன் கூட்டியே தலைமை அலு வலர்களுக்கு தகவல் தெரி வித்து, ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். முதல் அமைச்சர் நினைவிடத்திற்கு வருகை தந்து செல்லும் வரை திட்டமிட்டபடி பணி களை மேற்கொண்டு எந்த இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக 14 மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைதுசெய்தது.
- மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்:
எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருதுபாண்டியர் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் மரியாதை செலுத்தினர்.
- வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பரமக்குடி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் 222-வது குருபூஜையையொட்டி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர்கள் வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் மேற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கார்த்தி, கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், துணைச் செயலாளர் பசும்பொன் சௌந்தர், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராமு உட்பட சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 கிராமங்களை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
- கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். 2022-23-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 65 வருவாய் கிராமங்கள் காப்பீட்டு தொகை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மேலும் பயிர்க்கடன் மற்றும் பயிர் காப்பீடு நெல் கொள்முதல் செய்ய அடங்கல் வழங்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் வலியு றுத்தினர்.
வரத்து கால்வாய் சீரமைத்தல், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்தல், கருவேல மரங்களை அப்புறப் படுத்துதல், விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரிசெய்தல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பா கவும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அவர்க ளது கோரிக்கைகளை பரிசீ லனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.
இதில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
- மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ராமேசுவரம்:
கடந்த 14-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 27 பேர் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
படகுகளை பறிமுதல் செய்த அவர்கள் மீனவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்தாக வழக்குப்பதிவு செய்து மன்னார் மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு வவுனியா மற்றும் யாழ்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் செயலை கண்டித்தும், மீனவர்கள் படகுகளை மீட்டு கொண்டு வர வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தினசரி ரூ.1 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறிய ரக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பெரிய விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 12 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்தது. இதனால் அவர்கள் நவம்பர் 8-ந் தேதி வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையிலும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையிலும் வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.
மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தரவும் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் அச்சமின்றி கடலில் மீன்பிடித்து வரும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.
- தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- தென்மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயர் தலைமையில் பசும்பொன்னில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
பசும்பொன்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாள் இன்று ஆன்மிக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழாவாகவும் நடைபெறும்
ஆன்மிக விழாவை முன்னிட்டு இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் மற்றும் அவரது சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் முன்னிலையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் கணபதி யாக பூஜைகள் நடந்தது. பின்னர் அங்குள்ள பால முருகன், தேவர் திருமகனார் கோவிலுக்கு வருடாபிஷேகம் நடந்தது. இன்று மாலை 1008 திருவிளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
தேவர் நினைவிட வளாகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை இன்று மாலை கலெக்டர் திறந்து வைக்கிறார்.
நாளை (29-ந்தேதி) நடைபெறும் அரசியல் விழாவில் அரசியல் சொற்பொழிவுகள் நடைபெறும். மேலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பால்குடம் மற்றும் முளைப்பாரி, வேல் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
முக்கிய நிகழ்ச்சியான தேவர் ஜெயந்தி விழா வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றயை நாளில் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் மத்திய அமைச்சர்கள், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலா மற்றும் முக்கிய அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயர் தலைமையில் பசும்பொன்னில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. ராமநாதாபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






