search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    65 கிராமங்களை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்
    X

    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடந்தது.

    65 கிராமங்களை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 கிராமங்களை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
    • கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். 2022-23-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 65 வருவாய் கிராமங்கள் காப்பீட்டு தொகை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மேலும் பயிர்க்கடன் மற்றும் பயிர் காப்பீடு நெல் கொள்முதல் செய்ய அடங்கல் வழங்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் வலியு றுத்தினர்.

    வரத்து கால்வாய் சீரமைத்தல், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்தல், கருவேல மரங்களை அப்புறப் படுத்துதல், விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரிசெய்தல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பா கவும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அவர்க ளது கோரிக்கைகளை பரிசீ லனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.

    இதில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×