என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது இக்பால் தலைமையில், சென்னை கிளை ஜமாத் தலைவர் நஜீம் அகம்மது முன்னிலையில் நடந்தது.

    பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    பள்ளியின் தாளாளரும், பேரூராட்சி சேர்மனுமான ஷாஜஹான் வரவேற்றார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் தலைமை ஆசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காதர் ஷா, லியாகத் அலி, காதர்முகைதீன், வரிசைமுகம்மது, மாவட்ட கல்வி அலுவலர் ரவி முன்னாள் ஜமாத் தலைவர் இக்பால், பாசில்அமீன், கல்வி குழு தலைவர்காதர் முகைதீன், முகமது மீரா, சீனிமுகம் மது உள்பட பலர் பங்கேற்றனர்.

    • ராமநாதபுரத்தில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.
    • இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சொர்ண கணபதி (வயது 36). இவர் ராமநாதபுரம் சபாநடேச ஐயர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு மாமியார் மற்றும் மனைவி குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பொருட்களை திருடிச் சென்றனர். நேற்று வீடு திரும்பிய சொர்ண கணபதி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பீரோவை பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் 9 பவுன் மற்றும் வெள்ளியிலான சாமி பொருட்கள், சாமி விளக்குகள், 2 பஞ்சாத்திர ருத்திரயாணி, ஒரு சந்தனபேழை, ஒரு குங்கும சிமில் ஆகியவை திருடு போயிருந்தது.

    இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது ஆண்கள் பிரிவில் பெரியபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பனைக்குளம் பகுர்தீன் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள், 14, 17 வயது பெண்கள் பிரிவில் வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 19 வயது பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன.

    இந்த அணிகள் நாமக்கலில் டிசம்பர் 5 முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ள மாநில போட்டியில் கலந்து கொள்கின்றன. 19 வயது பிரிவு ஆடவர் பிரிவில் மாநில போட்டிக்கு தகுதி பெற்ற பனைக்குளம் பகுர் தீன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஜமாஅத் தலைவர்கள் ஜெய்னுல் அஸ்லாம் (மேற்கு), ஹம்சத் அலி (கிழக்கு) மற்றும் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் ரவி, உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

    • தொண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் ஒட்டகத்தை வைத்து வசூல் செய்து வருகின்றனர்.
    • இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிப்பகுதியில் உள்ள கடைகளில் ஒட்டகத்தை வைத்து வசூல் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தொண்டி அருகே நம்புதாளையில் கந்தூரி விழா நடந்தது. அதில் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வருவதை எதிர்பார்த்து ஒட்டகத்தை காண்பித்து வசூல் செய்தனர். சிலர் ஒட்டகத்தை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சிறுவர்களை ஒட்டகத்தின் மேல் ஏற்றி சிறிது தூரம் சவாரி செய்ததற்கு தனியாக கட்டணம் வசூலித்தனர். கந்தூரி விழா முடிந்தும் தொடர்ந்து முகாமிட்டு கடைகளில் வசூல் செய்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • பனைக்குளத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா நடந்தது.
    • இதில் ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் மைதீன், செயலாளர் தாஹிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் ஆண்டு தோறும் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா நடைபெறும். முஸ்லிம் நிர்வாக சபை, வாலிப முஸ்லிம் சங்கம் சார்பில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா சிறப்பு மவுலிது ஓதப்பட்டு இன்று காலை நடந்தது. ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் தலைமையில் சிறப்பு துவா ஒதப்பட்டு சட்டி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சுப்ஹூ தொழுகை நிறைவடைந்ததும் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

    பேஷ் இமாம்கள் அபுதாகிர், சேக் அப்துல்லா ஆகியோர் உலக மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டி சிறப்பு துவா ஒதப்பட்டது. முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி தலைமையில் பொதுமக்களுக்கு தேங்காய் சோறு நேர்ச்சி வினியோகம் நடந்தது. இதில் முஸ்லிம் நிர்வாக சபை செயலாளர் சாகுல் ஹமீது, முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஜெய்னுல் அஸ்லாம், செயலாளர் முகமது ரோஸ் சுல்தான், வாலிப முஸ்லிம் சங்கம் தலைவர் சீனி அன்வர் அலி, செயலாளர் சீனி ரிஜாஸ் கான், ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் மைதீன், செயலாளர் தாஹிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 22 பவுன் நகைகள் மீட்டக்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. குற்றவாளிகளை பிடிக்க ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர ரோந்து சுற்றி வந்தனர்.

    சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

    அவர்க ளிடம் விசாரணை நடத்திய போது பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பாண்டி மகன் தங்கராஜ் (வயது 33), கருமலையான் மகன் செல்லமுத்து (24) என தெரியவந்தது. இவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து நகை திருடியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 14 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    பரமக்குடி அருகே நயினார்கோ விலை அடுத்துள்ள மும்முடி சாத்தானை சேர்ந்த ரோஜா என்பவரது வீட்டில் கடந்த வாரம் 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு திருடு போனது. இது தொடர்பாக நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அந்த பெண்ணை கைது செய்து 8 பவுன் நகையை மீட்டனர்.

    • ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • மருத்துவ குழுவினர் 100-க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் மதுரை குரு மருத்துவமனை, ராமநாதபுரம் வர்ஷா பல் மருத்துவமனை மற்றும் பனைக்குளம் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி இணைந்து குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்தியது. கட்சியின் செயலாளர் அனஸ் தலைமை தாங்கினார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஜெமிலுன்னிஸா முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் கல்பனா, ஜெமிலுன்னிஸா தலைமையில் மருத்துவ குழுவினர் 100-க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுசெயலாளர் அப்துல் ஜமீல், மாவட்டச் செயலாளர் அபுல் கலாம் ஆசாத், நஜிமுதீன், மாவட்ட மீனவரணி தலைவர் பஹ்ருதீன், திருவாடானை தொகுதி தலைவர் முகமது ஹனீப், தொகுதி செயலாளர் நூர் முகமது, தொகுதி இணைச் செயலாளர் அஸ்லம், ஊராட்சி மன்ற உறுப்பினர் சித்தி நிஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது80). இவர் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரியில் நடந்த உறவினர் வளைகாப்பு நிழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் கார் வந்த போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கி சேதமானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணிமேகலை, நிர்மலா, கார் டிரைவர் செல்வகுமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் நான்கு வழிச்சாலையில் பரமக்குடி ஊருக்குள் செல்வதற்காக எதிர் திசையில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் காயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பகைவென்றி கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கேசவன் (53) என்பவர் குறுக்கு வழியில் சென்றபோது இந்த விபத்து நடந்திருப்பது தெரிய வந்தது. கேசவன் மீது ஏற்கனவே இரு விபத்து வழக்கு உள்ளது. போக்குவரத்து விதியை மீறி சென்றதால் இந்த ஏற்பட்டுள்ளதால் கேசவனை போலீசார் கைது செய்தனர்.

    கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பரமகுடி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.

    கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிமேகலை, ரஞ்சனி மற்றும் டிரைவர் செல்வகுமார் ஆகியோர் ராமேஸ்வரத்திற்கு சென்ற போது விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அமெரிக்காவை சேர்ந்த ஆண்களிடம் போனில் பெண் குரலில் பேசி, அவர்களை மயக்கி பணம் செலுத்த வைக்க வேண்டும்.
    • ஆயிரக்கணக்கான தமிழக வாலிபர்கள் அந்த கும்பலிடம் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்:

    செல்போன் பயன்பாடு என்பது தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பள்ளி-கல்லூரி படிக்கும் மாணவ-மாணவிகள், வேலை பார்க்கும் இளைஞர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மட்டுமின்றி சிறு குழந்தைகள் கூட செல்போன் பயன்படுத்துகின்றனர்.

    இதனால் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களை அனைவரும் சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற சமூக வலைதளங்களை நட்புக்காக பலர் பயன்படுத்தினாலும், அதன் மூலம் மோசடி செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    ஆள்மாறாட்டம், ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிக்குகிறார்கள். சமூக வலைதளங்களை பயன்படுத்தி சில கும்பல் பணம் பறிப்பு செயலை பிரதானமாக செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.

    அதுபோன்ற ஒரு கும்பலிடம் சிக்கி, அழகிபோல் பேசி நடிக்கும் வேலை பார்த்து வந்த தமிழக வாலிபர் ஒருவர், அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்துள்ளார். ஆயிரக்கணக்கான தமிழக வாலிபர்கள் அந்த கும்பலிடம் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் நீதிராஜன் (வயது 28). டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ள அந்த வாலிபர், வேலையில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கம்போடியா நாட்டில் அதிக ஊதியத்துக்கு கம்ப்யூட்டர் தொடர்பான வேலை வாங்கி தருவதாக கொழுந்தூரை சேர்ந்த மகாதீர் முகம்மது என்பவர் கூறி உள்ளார்.

    இதனை நம்பிய நீதிராஜனின் குடும்பத்தினர், அவர் கேட்டபடி ரூ.2.50 லட்சம் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் வாலிபர் நீதிராஜனை சுற்றுலா விசாவில் கம்போடியாவுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் கூறியபடி நீதிராஜனுக்கு வேலை வாங்கி தரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு மாறாக சீனா நாட்டு கம்பெனி ஒன்றிற்கு அவரை 3 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்றுவிட்டார்.

    அமெரிக்காவை சேர்ந்த ஆண்களிடம் போனில் பெண் குரலில் பேசி, அவர்களை மயக்கி பணம் செலுத்த வைக்க வேண்டும் என்று அவரிடம் அந்த கம்பெனி கூறியிருக்கிறது. அதற்கு மறுத்த நீதிராஜனை அறையில் அடைத்து வைத்து உணவு வழங்காமலும், உடலில் மின்சாரம் பாய்ச்சியும் சித்ரவதை செய்துள்ளனர்.

    இதனால் வேறுவழியின்றி அந்த நிறுவனம் கூறியது போல் மாடல் அழகி போல் பேசி அமெரிக்க வாலிபர்களை மயக்கும் வேலையை அவர் செய்து வந்துள்ளார். ஆனால் அந்த வேலை பிடிக்காத நீதிராஜன், எப்படியாவது சொந்த ஊருக்கு தப்பி சென்றுவிட வேண்டும் என்று கருதினார்.

    அதன்படி கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தை நாடி உள்ளார்.அவர்களின் மூலம் வாலிபர் நீதிராஜன் கம்போடியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து நீதிராஜனிடம் வேலை மோசடி செய்த மகாதீர் முகம்மது மற்றும் அவரது தாய் மீது ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர்.

    அதன்பேரில் அவர்கள் இருவர் மீதும் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். மோசடி புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்போடியா நாட்டில் மோசடி நிறுவனத்திடம் சிக்கி சித்ரவதைக்குள்ளானது குறித்து நீதிராஜன் கூறியதாவது:-

    கம்போடியா நாட்டில் நல்ல ஊதியத்துக்கு டேட்டா எண்டரி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக கூறி எங்களிடம் கொழுந்தூரை சேர்ந்த மகாதீர் முகம்மது மற்றும் அவரது தாய் ரூ.2.50 லட்சம் வாங்கினர். மேலும் என்னை மகாதீர் முகம்மது கம்போடியாவுக்கு சுற்றுலா விசாவில் அழைத்து சென்றார்.

    அங்கு அவர் முதலில் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. மேலும் என்னை சீன நிறுவனம் ஒன்றில் 3 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்று விட்டார். சமூக வலைதளங்களில் போலி ஐ.டி.யை உருவாக்கி, அதன் மூலம் அமெரிக்க வாலிபர்களை தொடர்பு கொண்டு பேசி மயக்கி பணம் பறிப்பதே அந்த வேலை.

    என்னை அதேபோன்று அமெரிக்க வாலிபர்களிடம் பேசி மயக்கி, அவர்களை குறிப்பிட்ட நிதி நிறுவனங்களில் பணம் டெபாசிட் செய்ய வைக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த என்னை உணவு வழங்காமல் அறையில் அடைத்து வைத்தனர். மேலும் உடலில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தனர்.

    இதனால் வேறு வழியின்றி அவர்கள் கூறிய வேலையை பார்த்து வந்தேன். ஆனால் அந்த வேலையை பார்க்க எனக்கு மனம் இல்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பிவர இந்திய தூதரகத்தை நாடினேன். சட்ட விரோதமாக தங்கி இருந்ததால் கம்போடியா நாட்டுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் செலுத்தி விட்டு இந்திய தூதரக உதவியால் சொந்த ஊருக்கு திரும்பினேன்.

    கம்போடியா நாட்டில் உள்ள அந்த நிறுவனத்தில் என்னை போன்று சுமார் 1,500 தமிழக வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அந்த கும்பலிடம் சிக்கி அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் தினமும் பல்வேறு சித்ரவதையை அனுபவிக்கிறார்கள். ஆகவே என்னை போன்று அவர்களையும் மீட்டு கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
    • வயல்களில் தண்ணீர் இல்லததால் பயிர்கள் கருகிவிட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள விளை நிலங்களில் நெல், மிளகாய், உளுந்து, பருத்தி உள்ளிட்ட சாகுபடி பணிகள் தொடங்கி தற்போது களை எடுப்பு, பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன் பெய்த பருவமழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் உரமிடும் பணிகள் நடக்கிறது. பயிர்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் மழை இல்லாததால் அபிராமம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து நரியன், உடையநாதபுரம், முத்தாதிபுரம் விவசாயிகள் கூறுகையில், பருவமழையை நம்பி வயல்களில் உரமிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. வயல்களில் தண்ணீர் இல்லததால் பயிர்கள் கருகிவிட்டது.

    இந்த நிலையில் வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மழை பெய்யும் என்று நம்புகிறோம். மேலும் பருவமழை நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவு பெய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றனர்.

    • சாலையில் குவிந்த மணல் அகற்றப்பட்டது.
    • தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மணல் குவிந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மணல்களை அகற்றி சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலை வரை மணல் குவியலை அகற்றி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.

    இதே போல் நகராட்சியில் மற்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் மணல் குவியலை அகற்றி சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    ×