என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒட்டகத்தை காண்பித்து கடைகளில் வசூல்
- தொண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் ஒட்டகத்தை வைத்து வசூல் செய்து வருகின்றனர்.
- இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிப்பகுதியில் உள்ள கடைகளில் ஒட்டகத்தை வைத்து வசூல் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தொண்டி அருகே நம்புதாளையில் கந்தூரி விழா நடந்தது. அதில் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வருவதை எதிர்பார்த்து ஒட்டகத்தை காண்பித்து வசூல் செய்தனர். சிலர் ஒட்டகத்தை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சிறுவர்களை ஒட்டகத்தின் மேல் ஏற்றி சிறிது தூரம் சவாரி செய்ததற்கு தனியாக கட்டணம் வசூலித்தனர். கந்தூரி விழா முடிந்தும் தொடர்ந்து முகாமிட்டு கடைகளில் வசூல் செய்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Next Story






