என் மலர்
ராமநாதபுரம்
- ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
- சேகர், பூப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம்
ஆசிரியர், அரசு ஊழியர்களின் கூட்ட மைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் இருந்து ரோமன் சர்ச் வரையும், பரமக்குடியில் பஸ் நிலையத்தில் இருந்து ஓட்டப்பாலம் வரையும் மனிதச்சங்கிலி நடந்தது.
மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் முரு கேசன், சிவபாலன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். சேகர், பூப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பா ளரும், ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான முருகேசன் பேசியதாவது:-
எங்களது கோரிக்கைகளை இதுநாள் வரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்ற மன சங்கடத்தில் பணி செய்து வருகிறோம். இந்த நிலையில் கல்வித்துறையில் கற்றல்-கற்பித்தல் பணியை செய்து வரும் ஆசிரியர்களை மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் எமிஸ் போன்ற கற்றல்-கற்பித்தல் பணிக்கு சம்மந்தமில்லாத அலுவலகப்பணியை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் திணித்து வருகிறார்கள். கல்வி அமைச்சர் இதில் தலையிட்டு ஆசிரியர்கள் சுதந்திரமாக கற்றல்-கற்பித்தல் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் காளிராஜ், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச்செயலாளர் கிருஷ்ணன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முனியசாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் லாரன்ஸ், கால்நடைத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்சாமி மற்றும் ஜாக்டோ-ஜியோ உறுப்பு சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாள குமார் நன்றி கூறினார்.
- 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
- “பசுமை ராமநாதபுரம்” உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியம் தேவிபட்டினம் ஊராட்சியில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். அவர் நாற்றங்கால் பண்ணையில் தென்னை மற்றும் பல்வேறு வகை மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டு பேசியதாவது:-
வேளாண்மை துறையின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தேவையான தென்னங்கன்று களை வாங்கி பயன்பெற வேண்டும். தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்து "பசுமை ராமநாதபுரம்" உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படையில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மகோகனி, வில்வம், கொடுக்காபுளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25லட்சம் கன்றுகளும், பள்ளி கல்வித்துறையின் மூலம் 10லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 லட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும் என பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப் பாண்டில் 1 கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு செய்யப்படுகின்றன. நடவு செய்வது மட்டுமின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் பராமரித்தல், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரித்தல் என திட்ட மிட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு "பசுமை ராமநாதபுரம்" உருவாக செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தோட்ட கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- கச்சத்தீவில் புத்தர் கோவில்கள் அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
ராமேசுவரம்:
தமிழகம்-இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்ச் 3, 4 தேதிகளில் திருவிழா நடத்தப்படும். இதில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பக்தர்களின்றி விழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள தமிழக மற்றும் இலங்கை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கடலோர பாதுகாப்பு படை போலீசார் சோதனைக்கு பின்னர் விழாவில் கலந்து கொண்டு திரும்பினர்.
இந்த நிலையில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு சென்ற தமிழக மீனவர்கள் அங்கு 2 புத்தர் கோவில்கள் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கச்சத்தீவில் புத்தர் கோவில் அமைக்கப்பட்டது மதமோதலை ஏற்படுத்த வழி வகுக்கும், எனவே அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் சார்லஸ் நிர்மலநாதன் எம்.பி. பேசி உள்ளார். அப்போது அவர், "அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ள கச்சத்தீவில் இலங்கை கடற்படை அமைத்த புத்தர் கோவில் களை உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
ராமேசுவரம் அருகே உள்ள வேர்க்கோடு பங்கு தந்தை தேவசகாயம் கூறும்போது, "கச்சத்தீவில் புத்தர் கோவில்கள் அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதனால் அந்தோணியார் ஆலய திருவிழா நடத்து வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.
- மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
- இதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் வெண்ணத்தூர் ஊராட்சி, சம்பை கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு அந்த கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள்.
மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக்க ளுக்கு அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம். அதேபோன்று தற்போது இணையதளம் மூலம் அரசின் அனைத்து துறை களின் திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஸ்மார்ட்போன் மூலம் அறிந்து பயன்பெறலாம். தனிநபர் பொருளாதர முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதை தகுதியுடையோர் பயன்பெற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து 68 பயனாளிகளுக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் சுரேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பரமக்குடியில் கார் டிரைவர் அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் தென்காசி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.
- இந்த தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய கோவிந்தராஜ், முனீஸ்வரியை கைது செய்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தேவராஜ் (வயது29).
இவர் சென்னை மேட்டுகுப்பம் பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் தனது உறவினரான பன்னீர் என்பவருக்கு ரூ. 3 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். அதனை அவர் திருப்பி கொடுக்காததால் பன்னீர் வைத்திருந்த காரை, தேவராஜ் சென்னைக்கு எடுத்துச்சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் ஆஜராக தேவராஜ் பரமக்குடி வந்தார். பின்னர் ராமநாத புரம் கோர்ட்டில் ஆஜராகி விட்டு பரமக்குடி வந்தார். இதுபற்றி அறிந்த பன்னீர், தமிழ், வினித், கோவிந்தராஜ், முனீஸ்வரி ஆகிய 5 பேர் தேவராஜை சந்தித்து அவர் எடுத்துச் சென்ற காரை திருப்பித்தரும்படி கேட்ட னர். அப்போது பணத்தை தந்தால் காரை தருவதாக தேவராஜ் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பன்னீர் உள்பட 5 பேரும் தேவராஜை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலை யாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. வசந்தகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண் ணன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய கோவிந்தராஜ், முனீஸ்வ ரியை கைது செய்தனர்.
இந்தநிலையில் கொலை யாளி வினித் தென்காசி கோர்ட்டில் சரணடைந் துள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ரம்ஜான் நோன்பை தொடங்கிய இஸ்லாமியர்கள் தொடங்கினர்.
- பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
ராமநாதபுரம்
இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் நோன்பு நோற்பது முக்கிய மானதாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
ரம்ஜான் மாதத்தில் முதல் பிறை பார்த்த பின்னர் நோன்பு உறுதி செய்யப்படும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று (24-ந் தேதி) முதல் நோன்பு நோற்கும்படி இஸ்லாமிய மக்களுக்கும், அனைத்து பேஷ் இமாம்க ளுக்கும் மாவட்ட அரசு சலாஹூத்தீன் தகவல் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்க ளிலும் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல்களிலும், அரபி மதராசக்களிலும் நடை பெற்றன.
ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று முதல் நோன்பு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். பின்பு மாலையில் தொழுகை செய்து பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி உட்கொண்டு விர தத்தை முடித்துக் கொள் வார்கள். இதே போல் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு விரதத்தை இஸ்லா மியர்கள் கடைப்பிடிப்பார்கள்.
- பேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண விழா நடந்தது.
- முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் பேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ஜெயலட்சுமி-மாரிமுத்து ஆகியோரது மகன் முதுகலை பட்டதாரி சரண்குமா ருக்கும், பாப்பா குடி முருகன்-செல்வராணி ஆகியோரது மகள் பட்டதாரி ஷார்மிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.
இவர்களது திருமணம் நேற்று ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் நடந்தது. இதில் அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள்,முக்கிய பிரமுகர்கள், உற்றார்-உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பரக்கத் மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை மாரிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய லட்சுமி, சரத்குமார் ஆகியோர் வரவேற்றனர். மணவிழாவில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.
- கடலாடி யூனியனுக்குட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
- தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உலக தண்ணீர் தினம் கொண்டா டப்பட்டது. இதையொட்டி வாலிநோக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பீர்முகமது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முகமது பனத்வாலா, ஊராட்சி செயலர் முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தனர். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது.
இதே போல் கண்டிலானில் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம் தலைமையிலும் ஏ.புன வாசலில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், காணிக்கூரில் ஊராட்சித் தலைவர் தென்னரசி செல்ல பாண்டியன் தலை மையிலும், பெரியகுளத்தில் ஊராட்சி தலைவர் முத்துமாரி தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.கன்னிராஜபுரத்தில் ஊராட்சி தலைவர் சுப்பிர மணியன் தலைமையிலும், நரிப்பையூரில் ஊராட்சித் தலைவர் நாராயணன் தலைமையிலும், செவல்பட்டியில் ஊராட்சி தலைவர் சொரிமுத்து தலைமையிலும், எஸ். தரைக்குடியில் ஊராட்சி தலைவர் முனியசாமி தலைமையிலும்,
டி.வேப்பங்குளத்தில் ஊராட்சி தலைவர் முருகன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.
அஞ்சடைநாதபுரத்தில் ஊராட்சி தலைவர் லிங்க ராஜ் தலைமையிலும், டி.கரிசல்குளத்தில் ஊராட்சி தலைவர் அப்பனசாமி தலைமையிலும், எஸ்.கிரந்தையில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், எஸ்.வாகைக்குளத்தில் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி வடமலை தலைமையிலும், பிள்ளையார் குளத்தில் ஊராட்சி தலைவர் வீர பாண்டியன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
கடுகு சந்தையில் ஊராட்சித் தலைவர் காளிமுத்து தலைமையிலும், மேல செல்வனூரில் ஊராட்சி தலைவர் மகர ஜோதி கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், கீழ செல்வனூரில் ஊராட்சித் தலைவர் இப்பால் தலைமையிலும், மேல கிடாரத்தில் ஊராட்சி தலைவர் கவிதா தலைமை யிலும், கொத்தங்குளத்தில் ஊராட்சித் தலைவர் கணேசன் தலைமையிலும், சிக்கலில் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன் தலைமையிலும், இதம் பாடலில் ஊராட்சி தலைவர் மங்களசாமி தலைமையிலும், பீ.கிரந்தையில் ஊராட்சி தலைவர் ஆனந்தம்மாள் அற்புதராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
டி.மாரியூரில் ஊராட்சித் தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் தலைமையிலும், ஏனாதியில் ஊராட்சி தலைவர் பாரதி ராஜா தலைமையிலும், ஒருவானேந்தலில் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் தலைமையிலும் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டங்கள் நடந்தன.
- தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
- ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 850 பெண் ஆசிரியர்கள், 620 ஆண் ஆசியர்கள் என மொத்தம் 1470 ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றோம்.
ராமநாதபுரம்
தூத்துக்குடி மாவட்டம் கீழ்நம்பிபுரம் இந்து தொடக்கபள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியரை மாணவரின் பெற்றோர் பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றனர். இதுகுறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கீழ்நம்பிபுரத்திலுள்ள இந்து தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தவறு செய்த மாணவனை கண்டித்தார். இதையொட்டி அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியுள்ளனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியரை பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த செயல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆசிரியர் மீது தவறு இருந்தால் கூட அவருக்கு தண்டனை கொடுக்க பள்ளிக்கல்வித்துறை இருக்கிறது. அதைவிடுத்து புனிதமாக கருதும் பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்குவது அராஜக செயல் இப்படிப்பட்ட செயலுக்கு காவல்துறை தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
பள்ளியில் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தலைவர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 850 பெண் ஆசிரியர்கள், 620 ஆண் ஆசியர்கள் என மொத்தம் 1470 ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பத்திர பதிவு கட்டணம் குறைப்பு கண்துடைப்பு என்று ராமநாதபுரம் தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பயனடைய போவதில்லை.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பட்ஜெட்டில் பத்திர பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு ஆகும். காரணம், சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பயனடைய போவதில்லை. இந்த சலுகை உண்மையில் மக்களை சென்றடைய வேண்டும் என்று அரசு எண்ணியிருந்தால் வழிகாட்டு மதிப்பீட்டை உயர்த்தி இருக்கமாட்டார்கள். திராவிட கட்சிகளின் கை வந்த கலைகளில் இதுவும், இதுபோன்ற பலவும் உண்டு. மக்களை முட்டாளாக்கும் இத்தகைய முயற்சிகளை வாக்காளர்கள் அறிவார்கள் என்பதை காலம் நிச்சயம் உணர்த்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுதிறனாளி கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் களமிறங்கும் வீரருக்கு அமைச்சர் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது.
- தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கீழசெல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு(29). இவர் சிறுவயது முதல் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலியில் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் கொண்டு தமிழக அளவில் விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். வருகிற 26-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா சார்பில் வினோத்பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது. வறுமையில் வாடும் வினோத்பாபுவுக்கு லண்டன் செல்ல முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் உதவி கேட்டார்.
உடனடியாக அவர், முதுகுளத்தூர் சட்ட மன்ற அலுவலகம் மூலம் வினோத்பாபுவின் ஊருக்கு சென்று நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்பாபுவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதியுதவியை தி.மு.க. கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் வழங்கி விளையாட்டில் வெற்றி பெற வாழ்த்தினார். அப்போது முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.
- ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது.
- ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி, கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் ஆகியோர் பங்கேற்று பேசினர். தொகுதி தலைவர் அப்துல் வஹாப் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சோமு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி பொக்கனாரேந்தல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் சேருவதற்கான படிவத்தை மாவட்ட துணை தலைவர் சோமு வழங்கினார். அதனை தொடர்ந்து அனைத்து நகர நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் கீழக்கரை, திருப்புல்லாணி,பெரியபட்டினம் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.






