search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி
    X

    மனித சங்கிலியில் பங்கேற்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி

    • ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
    • சேகர், பூப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம்

    ஆசிரியர், அரசு ஊழியர்களின் கூட்ட மைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் இருந்து ரோமன் சர்ச் வரையும், பரமக்குடியில் பஸ் நிலையத்தில் இருந்து ஓட்டப்பாலம் வரையும் மனிதச்சங்கிலி நடந்தது.

    மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் முரு கேசன், சிவபாலன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். சேகர், பூப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பா ளரும், ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான முருகேசன் பேசியதாவது:-

    எங்களது கோரிக்கைகளை இதுநாள் வரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்ற மன சங்கடத்தில் பணி செய்து வருகிறோம். இந்த நிலையில் கல்வித்துறையில் கற்றல்-கற்பித்தல் பணியை செய்து வரும் ஆசிரியர்களை மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் எமிஸ் போன்ற கற்றல்-கற்பித்தல் பணிக்கு சம்மந்தமில்லாத அலுவலகப்பணியை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் திணித்து வருகிறார்கள். கல்வி அமைச்சர் இதில் தலையிட்டு ஆசிரியர்கள் சுதந்திரமாக கற்றல்-கற்பித்தல் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் காளிராஜ், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச்செயலாளர் கிருஷ்ணன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முனியசாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் லாரன்ஸ், கால்நடைத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்சாமி மற்றும் ஜாக்டோ-ஜியோ உறுப்பு சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாள குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×