என் மலர்
ராமநாதபுரம்
- பரமக்குடியில் நடந்த சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
- விசாலாட்சி அம்பிகா-சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தராஜபெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த விசாலாட்சி அம்பிகா-சமேத சந்திரசேகர சுவாமி ஈஸ்வரன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் உட்பட பஞ்ச மூர்த்திகள் வீதி வலம் வருகின்றனர்.
கடந்த 30-ந்தேதி இரவு திக்குவிஜயம் நடந்தது. 1-ந்தேதி கமல வாகனத்தில் விசாலாட்சி அம்மன் தபசு கோலத்தில் அருள் பாலித்தார். நேற்று காலை சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளை கோலத்தில் ரத வீதிகளில் உலா வந்தார்.
தொடர்ந்து ஈஸ்வரன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சுவாமி-அம்பாள் வீற்றிருந்தனர். சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் முன்னி லையில் விசாலாட்சி அம்பிகை-பிரியாவிடையுடன் சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தை கோவிலில் புதுப்பித்து அணிந்து கொண்டனர். மகா தீபாராதனைக்கு பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. பரமக்குடி சுந்தராஜ பவனத்தில் அன்னதான குழுவினரால் பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
பரமக்குடி மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது. பின்னர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சிக்கும்-சுந்தரே சுவரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு மீட்கப்பட்டது.
- அதனை ஊருக்கு வெளிப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அய்யனார். இவர் கமுதி பஸ் நிலையம் நோக்கி செல்லும் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையோரத்தில் சிறிய பாம்பு இவரது மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்தது. இதனை கண்ட அய்யனார் உடனே நிதி நிறுவனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன் மற்றும் பார்த்திபன் தலைமையில் வீரர்கள் உடனடியாக வந்து மோட்டார் சைக்கிளின் பாகங்களை பிரித்து உள்ளே இருந்த 3அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை ஊருக்கு வெளிப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் கொண்டு விட்டனர்.
- கீழக்கரை வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்குமாறு பா.ம.க. பிரசாரம் நடந்தது.
- இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்றனர்.
கீழக்கரை
கொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆணைக்கிணங்க கீழக்கரையில் நகரச்செயலாளர் லோகநாதன் தலைமையில் வணிக வளாகங்களில் அதன் உரிமையாளர்களை சந்தித்து கடையின் பெயர் பலகை மற்றும் விளம்பர பதாகைகளில் தமிழில் பெயர் வைக்கக்கோரி துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அக்கீம், தலைவர் சந்தனதாஸ் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட பசுமை தாயகத்தின் செயலாளர் கர்ண மகாராஜன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், தலைவர் செரிப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பரமக்குடி அருகே புதிய டிரான்ஸ்பார்மர்களை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- நீண்ட நாட்களாக குறைந்த மின்னழுத்தம் இருந்தது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோமநாதபுரத்தில் நீண்ட நாட்களாக குறைந்த மின்னழுத்தம் இருந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனிடம் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் மின்வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சோமநாதபுரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தெளிச்சத்த நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மங்களேசுவரி சேதுபதி, செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி முன்னிலை வகித்தனர்.
அதேபோல் கமுதக்குடி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரையும் முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கமுதக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா மோகன் வரவேற்றார்.
- ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- இந்த விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரை சேர்ந்த சித்ராதேவி(35). இவரது தந்தை குண்டு (63). இவர் காலையில் டீ குடிக்க சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த முத்தையா மகன் பிருதிவிராஜ்(48) மோட்டார் சைக்கிளில் சென்றவர், முதியவர் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த முதியவர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிரிதிவிராஜூம் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- ராமநாதபுரத்தில் கர்ப்பிணி பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
- ஸ்கேன் எடுக்க சென்றபோது அந்த பெண் அணிந்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த முனியசாமி மனைவி சித்ராதேவி(35). கர்ப்பிணியான இவர் கமுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது ரத்தஅழுத்தம் கூடுதலாக இருக்கும் என்று கூறி இரவு தங்க வேண்டும் என்றதால் சித்ராதேவி அங்கேயே தங்கிவிட்டார். ஸ்கேன் எடுக்க சென்றபோது அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.
- ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக வி.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
- நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளுக் கான அமைப்பு தேர்தல் நடந்தது. தேர்தல் ஆணை யாளர் மகபூப்ஜான், பார்வையாளர்கள் வக்கீல் ஆசைத் தம்பி, பாஸ்கர சேதுபதி ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக வி.கே.சுரேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக், ஆலோசனை குழு உறுப்பினர் குணா, மாநில இளைஞரணி துணை செயலாளர் கராத்தே பழனிச்சாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர் வாகிகள் சால்வை அணி வித்து வாழ்த்து தெரி வித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்வு செய் யப்பட்டுள்ள வி.கே.சுரேஷ் ம.தி.மு.க. தொடங்கப் பட்ட காலத்தில் இருந்தே அந்த கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட இளைஞரணி செய லாளர், மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் பெருவாரியான இளைஞர்கள் ம.தி.மு.க. வில் இணைவதற்கு முக்கிய பங்கு வகித்த வர்களில் இவர் குறிப்பி டத்தக்கவர். இவரது திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டு தலை மையேற்று நடத்தி வைத்தார்.
இவர் கட்சி பணியை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவதால் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பல முறை இவரை பாராட்டி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொண்டியில் பிரதமரின் ‘மனதின் குரல்’ பேச்சு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
- விவசாய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை நெற்களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பிரதமரின் ''மனதின் குரல்'' ஒலிபரப்பு நிகழ்ச்சி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தலைமையில் நடந்தது. நெற்களஞ்சியத்தின் முதன்மை அலுவலர் வெள்ளிமலர் முன்னிலை வகித்தார்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த கமலா வரவேற்றார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில் நுட்ப அலுவலர் வெங்கடேசுவரி மொழிபெயர்த்தார். இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட விவசாய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- உத்திரகோசமங்கையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு பங்கேற்று ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ''நம்ம ஊரு சூப்பரு'' குறித்த விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
- ராமநாதபுரத்தில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைக்கிறார்
- அனைவரும் விரும்பி கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கல்வி பயின்ற ஸ்வார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் 7 வருட நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரம்மாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட் காட்சி இன்று தொடங்கு கிறது.
நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்று மாலை 6 மணிக்கு பொருட்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.
ஏராளமான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இப்பொருட்காட்சியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
4 D ஷோ,பேய் வீடு,பன் சிட்டி, ஸ்டால்கள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள
இப்பொருட்காட்சிக்கான ஏற்பாடுகளை பொருட் காட்சி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
- கமுதி அருகே கிராம சபை கூட்டம் நடந்தது.
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.
இளநிலை உதவி யாளர் நிறைபாண்டியன் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் ராஜேசுவரி கதிரேசன், ஊராட்சி செயலாளர் வேல் முருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி முழுவதும் கூடுதல் மின்விளக்கு அமைத்தல், கருங்குளம் மயானத்திற்கு எரிமேடை மற்றும் காத்திருப்போர் கூடம், தடுப்புச்சுவர் அமைத்தல், புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பது குறித்தும், பாக்குவெட்டி, கருங்குளம் கிராமத்தில் மயானச்சாலை அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதேபோல் ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்காளர் தெய்வ மணிகண்டன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராமநாதன், ஊராட்சி செயலர் ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு ஒப்புதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கீழராமநதி ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் முத்துமாரி முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மைதீன், ஊராட்சி செயலர் முத்துராமு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.
கே.நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
- ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ ஒலிபரப்பு நடந்தது.
- மாவட்ட பா.ஜ.க தலைவர் ஏற்பாடு செய்திருந்தார்.
ராமநாதபுரம்
பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ரேடியோவில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். இதன் 100-வது பகுதியான நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவரது பேச்சை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் அதிகமான இடங்களில் பொதுமக்கள் கேட்கும் வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு பெரிய திரை மூலம் பிரதமரின் உரையை தமிழாக்கம் செய்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தனர்.
மாநில கலை கலாச்சார பிரிவு செயலாளர் தாரணி ராமகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், பவர் நாகேந்திரன், ரமேஷ்பாபு, நிகழ்ச்சி பொறுப்பாளர்- மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமவீரபாகு, 'மனதின் குரல்' ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்திரபாண்டியன், ரமேஷ் பாபு, செய்தி தொடர்பாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பா.ஜ.க மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் ஏற்பாட்டில் தி.மு.க மாநில மருத்துவரணி இணை அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்
அவர்களை பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.






