என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கிராம இளைஞர்களுக்கு சமூக சேவை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    • மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலகத்தை அணுகலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட அளவில் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத்தொண்டு மற்றும் சமூக சேவை குறித்து 3 மாத சான்றிதழ் 150 பேருக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பானது 6 நாட்கள் நேரடி வகுப்புகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்படும். மேலும் கிராம அளவில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வட்டார அலுலவகங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை பற்றி கள ஆய்வு மேற்கொண்டு (Field Assisgnments) சமர்ப்பிக்க வேண்டும். ஊராட்சிகளுக்கான மாவட்ட வன மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குநரால் கள மையத்துக்கு அழைத்து செல்லப்படும். சான்றிதழ் படிப்பிற்கான பாடபுத்தகம், உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். சான்றிதழ் படிப்பின் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த 3 மாத சான்றிதழ் படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், களப்பணியாளர்கள், கிராம இளைஞர் தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் சேர பயிற்சி கட்டணமாக ரூ.1000 இணைய வழி வாயிலாக ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலரைத் தொடர்பு கொண்டு செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழக்கரை நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள்

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற அவசரக் கூட்டம் நடந்தது. தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான்,ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ், துணைத் தலைவர் ஹமீது சுல்தான்: கடந்த 3 மாதங்களுக்கு முன் பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பெத்ரி தெருவில் பைப்லைன் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் பழனி அதை எடுத்தார். அந்த இடத்தில் பைப் போடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டு 3 மாதங்களாக அப்படியே போட்டு வைத்துள்ளார். இதனால் அங்கு நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள். அது ஏன் அப்படியே போடப்பட்டுள்ளது? ஓவர்சியர்: அந்த ஒப்பந்ததாரரிடம் பலமுறை கூறியும் நாளை பார்க்கிறேன், நாளை பார்க்கிறேன் என்று காலம் தாழ்த்தி வருகிறார்.

    துணைத் தலைவர்: அவ்வாறு பணி செய்ய மறுக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர்கள் பாதுஷா, காயத்ரி மீரான் அலி, நஸ்ருதீன். முஹம்மது ஹாஜா சுஐபு, சித்திக், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் வளைய பூக்குளம் ஊராட்சியில் 53 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்க ளுக்கான குடிநீர் தேவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    இதில் கமுதி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி பேசுகையில், கமுதி யூனியனில் குடிநீர் தேவைக்கான ஆய்வுக் கூட்டம் நடத்திய கலெக்டரை பாராட்டு கிறேன். இந்த யூனியனில் நீர் ஆதாரங்களை தூர்வாரி மழைநீர் கடலில் கலக்காமல் சேமித்தாலே குடிநீர் பிரச்சினை தீரும்.கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    மேலும் ஊராட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். அனை வரும் காவிரி குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் முறையாக மராமத்து செய்வ தில்லை என்றும், உடைப்பு ஏற்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    இதில் பயிற்சி கலெக்டர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, காவிரி குடிநீர் திட்ட பொறியா ளர்கள், கமுதி யூனியன் ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், யூனியன் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தேவர் உள்பட பலரும் தங்களது கருத்து களை தெரிவித்தனர். வளையபூக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை ஏஜெண்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர்அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 -க்குள் இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர்அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் பா.ஜ.க சார்பில் தேசத்தலைவர்கள்-தியாகிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜ.க. மாவட்ட தலைவராக கடந்த சில தினங்களுக்கு முன்பு தரணி முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பா.ஜ.க மாவட்ட தலைவராக கடந்த சில தினங்களுக்கு முன்பு இயற்கை விவசாயி தரணி முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் தீவிர பணியாற்றி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேச தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவிடங்களுக்கு சென்று அவர்களது திருவுருவச்சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் பிரவீன்குமார், மாநில இளைஞரணி செயலாளர் ராம்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பவர் நாகேந்திரன், கணபதி என்.ஆர்.மணிமாறன், ஆத்ம கார்த்திக், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்பாபு, ஒன்றிய தலைவர்கள் கோபால கிருஷ்ணன், ஸ்டாலின், அழகுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மாவட்ட பா.ஜ.க சார்பில் வாகன அணிவகுப்பு நடை பெற்றது.அதனைத் தொடர்ந்து மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசத்தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.

    • தொண்டி திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திக்கு பால், பழம், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, அரிசிமாவு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பு ஈஸ்வரர் கோவிலில் உள்ள நந்திக்கு பால், பழம், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, அரிசிமாவு, தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி வீதி உலா நடந்தது.

    பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர். இதே போல் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர் கோவில், தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    • பசுமை காலநிலை நடவடிக்கை குழு அமைப்பதற்கான கூட்டம் கீழக்கரையில் நடந்தது.
    • குறுங்காடு சிறப்பாக வளர்க்கும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கீழக்கரை

    பசுமைத் தாயகத்தின் சார்பில் பசுமை காலநிலை நடவடிக்கை குழு அமைப்பதற்கான கூட்டம் கீழக்கரையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் கர்ண மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருஞானம் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாவட்ட செயலாளர் அக்கிம், மாவட்ட தலைவர் சந்தன தாஸ், அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் பேசினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும், அனைத்து ஊரணிகளில் வைகை நீரை கொண்டு வந்து நீர் நிலைகளை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, பசுமை தாயகத்தின் மாவட்டத் துணை தலைவர் புஷ்பராஜ், துணைச்செயலாளர் பசும்பொன் ரமேஷ், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், தலைவர் சரீப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர். குறுங்காடு சிறப்பாக வளர்க்கும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • ராமேசுவரம் கோவிலில் புகுந்த மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழை நீண்ட நேரம் பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டது. குளம் போல் மழை நீர் தேங்கியதால் அதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் விரைந்து வந்து மழைநீரை வெளியேற்றினர். ராமேசுவரத்தில் அதிகளவு மழை பெய்யும் போது கோவிலுக்குள் தண்ணீர் குளம் போல் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய சிரமம் ஏற்படுகிறது. எனவே கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
    • மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெரிய கீரமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.47.06 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வணிகவளாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு அரசு வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டு முறையில் கட்டப்பட்டு வருகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து இந்த பணியை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து பாண்டுக்குடி ஊராட்சி, தினையத்தூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் திருவாடனை மற்றும் பாசிப்பட்டிணம் ஊராட்சியில், 'நம்ம ஊரு சூப்பரு" எங்களது கிராமம் எழில்மிகு கிராமம் என்பது குறித்தும், சுகாதாரத்துடன் வாழ்வது பற்றிய விழிப்பு ணர்வு குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி செயலர் ரகுவீரக கணபதி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் செல்வகுமார், பாலமுருகன், ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரளாதேவி (பெரிய கீரமங்கலம்), இலக்கியாராமு (திருவாடானை), உம்மூர் சலீமா நூர் அமீன் (பாசிப்பட்டிணம்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மண்டபம் பேரூராட்சியில் மதுபோதையில் குடிதண்ணீரை வீணடித்த ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட் டத்தில் 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், 11 ஒன்றியங் களைச் சேர்ந்த 429 ஊராட்சி களில் உள்ள 2 ஆயிரத்து 332 கிராம மக்களின் அன்றாட பயன் பாட்டிற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தையடுத்து 2021-ம் ஆண்டு வரை காவிரி குடிநீர் விநியோகம் பெரும்பாலான இடங்களில் தொய் வடைந்தது. மண்டபம் பேரூ ராட்சியில் உள்ள 18 வார்டு மக்களுக்கு 13.40 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. ஆனால், இந்த அளவு தண்ணீர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையான விநியோக மில்லை என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டினர்.

    கடந்த மாதம் நடந்த பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    கிணறுகளில் இருந்து மேல்நிலை தொட்டிகளுக்கு நீர் ஏற்றுவதற்கு ஆன் செய்யும் மின் மோட்டார் சுவிட்சை உரிய நேரத்தில் நிறுத்த தவறியதால் 5-க்கும் மேற்பட்ட மின் மோட் டார்கள் பழுதடைந்தன. இதனால் தண்ணீர் விநியோகம் தடை பட்டு உள்ளதாக பொது மக்களின் குற்றச்சாட்டு குறித்தும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த, 18 வார்டுகளுக்கு தலா 6 வார்டுகள் வீதம் சுழற்சி முறையில் பொது குழாய், வீட்டு இணைப்புகளுக்கு தண்ணீர் திறந்துவிட பேரூராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இப்பணியை முறைப்படுத்த தண்ணீர் திறந்து விடப்படும் நாட்களில், சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கையொப்பம் பெறவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் படி, கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மண்டபம் தென் கடற்கரை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு கடந்த 29-ந் தேதி இரவு மைக்குண்டு பகுதி தொட்டியில் 2மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாக வெளி யேறியது. இதை நிறுத்த சம்பந்தப்பட்ட ஊழியரை அப்பகுதி இளைஞர்கள் தேடிய வந்தபோது பணியில் இருந்த ஊழியர் மதுபோதையில் இருந்தது தெரிந்தது.

    இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மலைராஜ் (45) என்பவரை சஸ்பெண்ட் செய்து செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மருத்துவ உள் ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 70அரசு பள்ளிகள் உட்பட 119மேல்நிலைப்பள்ளிகள் இருப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே உள்ளன.

    ராமநாதபுரத்தில் அரசு இருபாலர் பள்ளியோ அல்லது ஆண்கள் மேல் நிலைப்பள்ளியோ கிடையாது என்பதால் வேறு வழியின்றி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி யிலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட் சிக்குட்பட்ட பகுதியில் இருபாலர் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கை அரசால் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.

    ஒருவேளை இருபாலார் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி நகரில் அமையும் பட்சத்தில் தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    இந்த சூழலில் மருத்துவ கனவு மேலும் ஒரு தலைவலியாக மாறியுள்ளது. மாவட்ட தலைநகரில் வசித்து வரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிரத்தை எடுத்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு அறிவித்துள்ள மருத்துவ உள் இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.

    6முதல் 12-ம்வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5சதவீத உள் இட ஒதுக்கீடு என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை படிக்க வைத்தும் உள் ஒதுக்கீடு பெற முடியவில்லையே? என்று பல பெற்றோர்கள் வேதனையில் உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலமுத்துவிடம் கேட்ட போது, ராமநாதபுரம் மாவட்ட தலைநகரில் அரசு பள்ளி இல்லை என்பதற்கு காரணம் இடம் இல்லை என்று தெரிவித்தார்.

    தற்போது அரசு அறி வித்துள்ள மருத்துவ உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப் பிக்க வேண்டு மெனில் அரசு பள்ளியில் மட்டுமே படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் அரசுமேல்நிலைப்பள்ளியே இல்லாமல் இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தட்சி ணாமூர்த்தி கூறுகையில், வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வா கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு பள்ளி அமைப்பதற்கு உண்டான இடவசதி இல்லை எனக்கூறி வரு கின்றனர்.ஆனால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ளேயே தனியார் பள்ளி இயங்குவதற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் கூறுகையில், கூலித்தொழிலாளியான எனது மகள் ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்து தற்போது கல்லூரியில் பயின்று வருகிறார். என்னுடைய மகள் படிப்பதற்கு அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத தால் 10-ம் வகுப்பு படித்து முடித்த அவரை எங்கு சேர்ப்பது? என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளேன் என்றார்.

    • ராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் மைதானத்தில் பொருட்காட்சி நடந்தது.
    • குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கோடைகால விடுமுறையையொட்டி குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் வடிவ நுழைவு வாயிலுடன் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.

    பொருட்காட்சி அமைப்பாளர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். கவுன்சிலர்கள் வீரசேகர், ராஜகோபால், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த பொருட்காட்சி ஜூன் 4-ந்தேதி வரை 1மாதம் நடைபெற உள்ளது.

    பொருட்காட்சி மேலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.பொருட்காட்சி, ராட்டினம், Exhibition, Ratinam,

    ×