search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
    X

    ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசினார்.

    பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

    • பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் வளைய பூக்குளம் ஊராட்சியில் 53 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்க ளுக்கான குடிநீர் தேவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    இதில் கமுதி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி பேசுகையில், கமுதி யூனியனில் குடிநீர் தேவைக்கான ஆய்வுக் கூட்டம் நடத்திய கலெக்டரை பாராட்டு கிறேன். இந்த யூனியனில் நீர் ஆதாரங்களை தூர்வாரி மழைநீர் கடலில் கலக்காமல் சேமித்தாலே குடிநீர் பிரச்சினை தீரும்.கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    மேலும் ஊராட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். அனை வரும் காவிரி குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் முறையாக மராமத்து செய்வ தில்லை என்றும், உடைப்பு ஏற்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    இதில் பயிற்சி கலெக்டர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, காவிரி குடிநீர் திட்ட பொறியா ளர்கள், கமுதி யூனியன் ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், யூனியன் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தேவர் உள்பட பலரும் தங்களது கருத்து களை தெரிவித்தனர். வளையபூக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நன்றி கூறினார்.

    Next Story
    ×