search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்
    X

    திருவாடானை ஊராட்சி ஒன்றியம், தினைபுத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்

    • திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
    • மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெரிய கீரமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.47.06 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வணிகவளாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு அரசு வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டு முறையில் கட்டப்பட்டு வருகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து இந்த பணியை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து பாண்டுக்குடி ஊராட்சி, தினையத்தூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் திருவாடனை மற்றும் பாசிப்பட்டிணம் ஊராட்சியில், 'நம்ம ஊரு சூப்பரு" எங்களது கிராமம் எழில்மிகு கிராமம் என்பது குறித்தும், சுகாதாரத்துடன் வாழ்வது பற்றிய விழிப்பு ணர்வு குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி செயலர் ரகுவீரக கணபதி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் செல்வகுமார், பாலமுருகன், ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரளாதேவி (பெரிய கீரமங்கலம்), இலக்கியாராமு (திருவாடானை), உம்மூர் சலீமா நூர் அமீன் (பாசிப்பட்டிணம்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×