மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு மீட்கப்பட்டது. அதனை ஊருக்கு வெளிப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு மீட்பு
Published on

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அய்யனார். இவர் கமுதி பஸ் நிலையம் நோக்கி செல்லும் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையோரத்தில் சிறிய பாம்பு இவரது மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்தது. இதனை கண்ட அய்யனார் உடனே நிதி நிறுவனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன் மற்றும் பார்த்திபன் தலைமையில் வீரர்கள் உடனடியாக வந்து மோட்டார் சைக்கிளின் பாகங்களை பிரித்து உள்ளே இருந்த 3அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை ஊருக்கு வெளிப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் கொண்டு விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com