என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை காந்தி பூங்கா முன்பாக போராட்டம் நடைபெற்றது
- காந்தி பூங்காவில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே நகராட்சி காந்தி பூங்கா உள்ளது. இந்த பூங்காவை நிா்வகிப்பது தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் உணவு திண்பண்ட கடைகளும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காந்திபூங்காவில் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு காந்தி பேரவை மூலம் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காந்தி பூங்காவை மீட்க கோரி அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், நிறுவனர் தினகரன் தலைமையில் திரண்டு பூங்காவை முற்றுகையிட்டனர். மேலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- கந்தர்வகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பு
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ., சின்னத்துரை தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் ஆணையர் பால் பிரான்சிஸ் 'ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.சுதந்திர தின விழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் துணைத் தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள். ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், சிறப்பு பற்றாளர் துணை ஆணையர் பார்த்திபன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பழைய கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டம் தலைவர் ராணி முருகேசன் தலைமையிலும், காட்டு நாவல் கிராம சபை கூட்டம் தலைவர் ஆரஞ்சு பாப்பா குணசேகரன் தலைமையிலும், அரவம்பட்டி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தலைமையிலும் ,அண்டனூர் கிராம சபை கூட்டம் தலைவர் இளங்கோவன் தலைமை யிலும், பல்ல வராயன்பட்டி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் கவிதாமணிகண்டன் தலைமை யிலும்,வி ராலிப்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் ஆர். எஸ். முத்துக்குமார் தலைமை யிலும் நடைபெற்ற து.
- ஆலங்குடி அருகே கள்ள துப்பாக்கி விற்பனை செய்த உத்தரப்பிரதேச இளைஞர்
- பெண்மீது தாக்குதல் தொடுக்க விற்பனை செய்த இளைஞர் கைது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கவிதா (வயது 40). இவர்கள் புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர்.கவிதாவின் அக்கா கணவர் பாலசேகர் (50).இவர் திருச்சி ஏர்போர்ட் அவனியா நகரில் வசித்து வருகிறார்.இதற்கிடையே கவிதா தனது அக்கா கணவரிடம் பணம் கடனாக பெற்றார். அதனை திருப்பி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த பாலசேகர் கடந்த 9-ம் தேதி கருக்கா குறிச்சி தெற்கு தெருவுக்கு அடியாட்களுடன் சென்று கவிதாவின் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் தொடுத்தார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கவிதா காயம் இன்றி தப்பினார்.இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசேகரை கைது செய்து அவரிடமிருந்து உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை கைப்பற்றினர்.அதன் பின்னர் அந்த கள்ள துப்பாக்கி தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் புலன் விசாரணை நடத்தினார். அதில் பால சேகருக்கு உத்தர பிரதேச மாநிலம் பாந்தாம் மாவட்டம் திருப்பாதி சதா கிராமத்தைச் சேர்ந்த நித்திஷ் குமார் (34 )என்பவர் துப்பாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.இதை யடுத்து கும்பகோணத்தில் தற்போது வசித்து வந்த நித்திஷ் குமாரை வடகாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வேறு யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் ஒரு இளம்பெண் உட்பட மூன்று பேர் மாயம்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் ஆன ஒருமாவழக்தத்தில் ஒரு பெண் உட்பட மூன்று இளம்பெண்கள் மாயம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே சங்கீரபட்டியை சேர்ந்தவர் சரவணன்(33). இவருக்கும் கலைவாணி(19) என்பவருக்கும் ஒரு மாதத்திற்கும் முன்பாக திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்தவர் கடந்த 10ம் தேதி மதியம் முதல் காணவில்லை. இந்நிலையில் சரவணன் கொடுத்த புகாரின்போpல் இலுப்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா;.இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே மேலப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் அபிராமி(17). இவர் பனிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரை கடந்த 14ம் தேதி இரவு முதல் காணவில்லை. முத்துசாமி கொடுத்த புகாரின்போpல் மழையூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். அரிமளத்தில் கத்தகுறிச்சியன் தெருவை சேர்ந்தவர் பாலையா மனைவி சத்தியா(50). இவரது மகள் முருகேஸ்வாp(24) இவர் கத்தக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு 14ம் தேதி வந்தவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சத்தியா கொடுத்தப்புகாரின் பேரில் அரிமளம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- மணமேல்குடி கோடியக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பித்ருக்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடைபெற்றது
- 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்
அறந்தாங்கி,
அமாவாசை தினம் என்பது சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் தினமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆண்டில் வருகிகிற ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை முக்கியமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தன்று பித்ருலோகத்திலிருந்து முன்னோர்கள் தங்கள் சந்ததிகளை பார்க்க புறப்படுவதாகவும், புரட்டாசி அமாவாசையன்று பூமியை வந்தடைவதாகவும் பின்பு தை அமாவாசையன்று மீண்டும் பித்ருலோகத்திற்கு சென்று விடுவதாகவும் ஐதீகம் உள்ளது. அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மணமேல்குடி கோடியக்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள் கடலில் நீராடி தங்களது முன்னோர்களை வேண்டி எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்பணம் செய்தனர். நிகழ்வில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.மணமேல்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பொன்னமராவதி அம்மன்குறிச்சியில் ஜல்லிகட்டு காளை கிணற்றில் தவறி விழுந்தது
- தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டனர்
புதுக்கோட்டை,
பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியை சேர்ந்தவர் சின்னு. இவரது 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையா என்பவரின் ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி காளையை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
- .ராசியமங்களம் பகுதியில் நேற்று பெய்த மழையில் வீடு இடிந்து விழுந்தது
- அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கே.ராசியமங்களம் பகுதியில் திடீர் கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி-சித்ரா ஆகியோரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.
- கண்டியாநத்தம் ஊராட்சியில் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி நடந்தது
- கண்டியாநத்தம், கேசராபட்டி,க.புதுப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது
பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சியில் தேசிய கொடிவிழிப்புணர்வு பேரணி நடந்தது. இன்று சுதந்திரதின விழாவை முன்னிட்டு நேற்றுகண்டியாநத்தம், கேசராபட்டி, க.புதுப்பட்டி ஆகிய இடங்களில் சுதந்திர தின தேசியகொடியேந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊராட்சித்தலைவர்செல்வி, தலைமையாசிரியர்கள் சுபத்ராரூப வ்ஜெயஜோதி, மணிமேகலை,ஊராட்சிசெயலாளர்அழகப்பன், ஆசிரியர்கள் சத்யா, கலைவாணி கீதா மற்றும் பள்ளிமாணவ மாணவிகள்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் உட்பட பலர்கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டையில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது
- பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஐ.ஓ.பி மண்டல மேலாளர் சுந்தர கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மழை வேண்டி, விவசாயம் செழிக்க வேந்தன்பட்டி நல்லாண்டி அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்
பொன்னமராவதி,
வேந்தன்பட்டியில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் நல்லாண்டி ஐயனார் பள்ளத்து அய்யனார் ஆகிய இரு வேறு திசைகளளில் உள்ள அய்யனார் கோயில்களில் ஓரே நாளில் நடைபெற்ற ஆடி புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆடி முதல் தேதியன்று குதிரைகள், காளைகள், நாய் உள்ளிட்ட புரவிகள் செய்ய பிடிமண் கொடுக்கப்பட்டு ஊரில் குதிரை பொட்டல் என்னும் இடத்தில் ண்ணை வைத்து புரவிகள் செய்யப்பட்டு அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவுக்கு தயார் செய்யப்பட்டு நிலையில் இரு திசைகளில் உள்ள அய்யனார் கோயியிலுக்கு எடுத்து செல்ல சிலைகள் அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து கிழக்கு திசையில் 2கிலோமீட்டர் தொலைவில் ஊர் எல்லையில் உள்ள பள்ளத்து அய்யனார் கோயிலுக்கு புரவிகளை பக்தர்களும், பொதுமக்களும் தோலில் தூக்கிக்கொண்டு ஊரின் எல்லைக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்கிருந்து வேந்தன்பட்டிக்கு வந்து மீண்டும் அதே போன்று குதிரை பொட்டலில் இருந்து வைக்கப்பட்டிருந்த வேறு புரவிகளை அங்கிருந்து மேற்கு திசையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஊர் எல்லையில் உள்ள நல்லாண்டி அய்யனார் கோயிலுக்கு எடுத்துச்சென்று வைத்து வழிபட்டனர் இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.ஆண்டுதோறும் இவ்வாறு வழிபடுவதன் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஐதீகமாக கொண்டு பல தலைமுறைகளாக இவ்வாறான வழிமுறை இன்றும் நடைபெற்றுவருகிறது. பாதுகாப்பு பபணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம் புதுக்கோட்டையில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்
- விண்ணப்பங்கள் குறித்து சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும் என தகவல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி ஆகிய வட்டங்களில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை முகாம் நடைபெற்றது. தொடர்ந்து 2-ம் கட்டமாக திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய வட்டங்களில் கடந்த 5-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த 2 கட்டமாக நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வருகிற 19, 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண்-04322-295022, வாட்ஸ்-அப் எண்- 94450 45622 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பதாரர்கள் கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது
- அறந்தாங்கி அருகே ஏம்பல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது
புதுக்கோட்டை,
ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமக்கள் போக்குவரத்திற்காக, அரசு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லுகின்ற பேருந்து நிலையத்தின் அருகே 10 மீட்டர் இடைவெளியில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது.இதனால் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பெண்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் அச்சத்துடன் வந்து செல்லுவதாகக்கூறி, பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மேலும் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதியை கண்டித்தும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் மோட்சகுணவழகன், மாநில துணை செயலாளர் கலைமுரசு, மண்டல துணை செயலாளர் திருமறவன் மாவட்ட அமைப்பாளர் சுடர்மணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






