என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை
    • 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல்

    புதுக்கோட்டை,

    அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த முத்துகிருஷ்ணன் (வயது 44), அப்துல்மஜீது (70), ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் வருடம் தோறும் மண்டக படித்தார்களா திருவிழா  கொண்டாடப்படுவது வழக்கம். .அதேபோல் இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பால்குடம் எடுத்தும் தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாலை பூத்தட்டு மற்றும் முளைப்பாரி எடுத்தல் அது விமர்சையாக நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் அம்பாள் திருவீதி உலா அதிர்வேட்டு முழங்க மேலதாளங்களுடன் நடைபெற்றது..விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.


    • காதல் திருமணம் செய்து கொண்ட புதுக்கோட்டையை சேர்ந்த, புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • புதுக்கோட்டையில் உள்ள தாயை பார்க்க முடியாத ஏக்கத்தில் துயர முடிவு

    திருச்சி,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை. இவரது மகள் விஜயலட்சுமி (வயது 20). இவருக்கும் மணப்பாறை புதுமணியாரம் பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு விஜயலட்சுமி பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.பின்னர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து வெளியேறிய விஜயலட்சுமி கடந்த மாதம் 2-ம் தேதி அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் காதலனை திருமணம் செய்தார். அதன் பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கணவர் வீட்டில் குடும்பம் நடத்தினார்.இந்த நிலையில் அவருக்கு தாயாரை பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. ஆனால் காதல் திருமண தகராறு காரணமாக பெற்றோர் வீட்டுக்கு செல்ல இயலவில்லை. இதனால் மனக்குழப்பத்துக்கு ஆளான விஜயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் விஜயலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விஜயலட்சுமியின் தாயார் அமுத ராணி வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் செய்த இளம் பெண் தாயை பார்க்க முடியாத ஏக்கத்தில் ஒரே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ரூ.35 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கந்தர்வகோட்டை பேருந்து நிலைய தரைதளம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது
    • சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தின் தரைத்தளம் சேதமடைந்து குண்டும் குழியுமாகவும் காட்சி அளித்தது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பயணிகளுக்கும் பேருந்து ஓட்டுநர்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து ரூ.35 லட்சம் செலவில் பேருந்து நிலையத்தின் தரைத்தளம் சீரமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் பேருந்துகள் இயங்குவதற்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர்,துணைத் தலைவர் செந்தாமரை குமார்,திமுக நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், அரசு ஒப்பந்தக்கார ராஜ்குமார்,மதிமுக ஒன்றிய செயலாளர் வைர மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்களில் கந்தர்வகோட்டை தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. சிறப்பு முகாமில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை கந்தர்வகோட்டை வட்டாட்சியர் காமராஜ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியின் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் சுகாதார தத்தெடுப்பு களப்பயணம் மேற்கொண்டனர்
    • 365 குடும்பத்தினருக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க முடிவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியின் முதலாமாண்டு பயிலும் 73 மருத்துவ மாணவ-மாணவிகள் சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத்துறை டாக்டர் சரவணன் தலைமையில் சுகாதார தத்தெடுப்புக்காக அண்டகுளம் அருகே உள்ள கடியாம்பட்டி கிராமத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்ற மாணவர்கள் சுகாதாரம் சார்ந்த தகவல்களை சேகரித்து ஒவ்வொரு மாணவரும் சுகாதார தத்தெடுப்புக்காக தலா 5 குடும்பங்கள் வீதம் தத்தெடுத்து குடும்பத்தில் உள்ளவர்களின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டனர். தத்தெடுத்த 365 குடும்பத்தார்களிடமும் தங்களது தொலைபேசி எண்ணை கொடுத்து 5 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்கும் வரை ஒவ்வொரு மாணவரும் அந்த 5 குடும்பத்திற்கு தேவையான மருத்துவ ஆலோசனை தேவைப்படும் நேரங்களில் வழங்கி கண்காணித்து வரவேண்டும். அந்த 5 குடும்பத்தை சேர்ந்தவர்களும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் அந்த மாணவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருந்துகள் எடுத்துக்கொள்வது பற்றியும், அவசரகால நேரங்களிலும் முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடியாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு உடல் நலன் குறித்து டாக்டர் சரவணன் எடுத்து கூறினார்.

    • ராமேசுவரம்- செகந்திராபாத் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது
    • புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை, திருப்பதி, காளஹஸ்தி சென்று வர வசதியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

    புதுக்கோட்டை, 

    தென் மத்திய ரெயில்வே மண்டலம் சார்பாக செகந்திராபாத்- ராமேசுவரம்- செகந்திராபாத் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரெயில் புதுக்கோட்டை, கும்பகோணம், திருவண்ணாமலை, காட்பாடி, திருப்பதி, குண்டூர் வழியாக இயக்கப்பட்டது. செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07685) ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு புதன் இரவு 10.43 மணிக்கு வந்து ராமேசுவரம் அதிகாலை 3.10 மணிக்கு சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07686) ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு வெள்ளி அதிகாலை 3.40 மணிக்கு வந்து செகந்திராபாத் சந்திப்புக்கு சனி அதிகாலை 7.10 மணிக்கு சென்றடைந்தது. இந்த ரெயில் புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை, திருப்பதி, காளஹஸ்தி சென்று வர வசதியாக இருந்தது. இந்த ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதியுடன் இந்த சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை இராணியார்மகளிர்அரசு மேல்நிலைப்பள்ளியில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 250 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றதில், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தொடங்கி வைத்து 22 பயனாளிகளுக்கு ரூ.1,08,500 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர்மாவட்ட கலெக்டர்தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி ஆகிய 3 வட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதே போல 16.09.2023 அன்று திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 23.09.2023 அன்று ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது என்று அவர் தெரிவித்தார். இம்முகாமில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர்திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், நகர்மன்ற துணைத்த லைவர்லியாகத்அலி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்எஸ்.உலகநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்எம்.மஞ்சுளா, வட்டாட்சியர்விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்கலந்துகொண்டனர்.

    • அறந்தாங்கியில் தே.மு.தி.க சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது
    • குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதியில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி வடக்கு ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் அனைவருக்கும் கிடைத்திட , மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று கூறிவிட்டு தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை என்று பின்பற்றப்படுவது, தேங்காயின் விலை படுவீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கழுத்தில் காய்கறி மாலை அணிவித்தும் ,தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து சாலையில் தேங்காய் உடைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை ஆலங்குடி அதிசய அன்னை ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள புனித அதிசய அன்னை ஆலய திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் ஆலங்குடி பங்கு தந்தை ஆர்.கே. சாமி அடிகளார் கொடியேற்றி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்று வந்தன.விழாவின் முக்கிய நிகழ்வான தேர்ப்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. ஆலங்குடி, கும்மங்குளம், அரசடிபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்,மாதாவின் புகழ் பாடியபடி தேர்பவனியில் கலந்து கொண்டனர். தேர்பவனிக்கு பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    • ஆங்கில மொழி சட்ட வரைவுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்.
    • சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஆண்டு பொருளாதாரம் உயரவில்லை.

    புதுக்கோட்டை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    3 குற்றவியல் சட்டங்களை மறுசீரமைத்து அதற்கு இந்தியில் பெயர் மாற்றம் செய்து புதிய மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். நான் இந்தியில் பெயர் வைப்பது கூடாது என்று சொல்லவில்லை. ஆங்கிலத்தில் சொல்லும்போது ஆங்கில பெயர் இருக்க வேண்டும். இந்தியில் சொல்லும்போது இந்தி பெயர் இருக்க வேண்டும்.

    இந்த சட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தில் இந்த சட்டத்தை எழுதும்போது ஆங்கிலத்தில் தான் எழுதப்படுகிறது. பிறகு இந்தியில் மொழி பெயர்க்கின்றனர். நீதிமன்றங்களில் ஆங்கில கடிதம் தான் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது. இந்தி மொழி பெயர்ப்பை யாரேனும் எடுத்து சொன்னால் கூட அதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல், என்ன பிரிவு என்று நீதிபதிகளே கேட்கின்றனர். அதனால் ஆங்கிலத்தில் இருப்பது தான் எல்லோருக்கும் பழக்கமானது.

    ஆங்கில மொழி சட்ட வரைவுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும். அதனை இந்தியில் மொழி பெயர்த்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் வைக்கின்றனர். அது வாயிலேயே நுழையவில்லை. 'நீட்' தேர்வு விலக்கு தொடர்பாக தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது சாத்தியம் ஆகும். 'நீட்' தேர்வு ஏன் தமிழகத்திற்கு கூடாது என்று நான் பல காரணங்களை சொல்லியிருக்கிறேன். ஆனால் மத்திய அரசு அசைத்து கொடுக்கிற மாதிரி தெரியவில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். அதில் என்ன வியப்பு இருக்கிறது. 2023-ல் இருப்பதை விட 2033-ல் அதிகமாக தான் இருக்கும். 2033-ல் இருப்பதை விட 2043-ல் அதிகமாக தான் இருக்கும்.

    பொருளாதார உயர்வு என்பது எந்த ஆண்டு தான் உயராமல் இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஆண்டு பொருளாதாரம் உயரவில்லை. 2 சதவீதம், 3 சதவீதம், 4 சதவீதம் என உயர்ந்து கொண்டு தான் செல்கிறது. ஆண்டு ஒன்று போனால் வயதொன்று கூடும். அதுபோல் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுக்கோட்டையில் நரிக்குறவர் சமூகத்தினருடன் தேசிய கொடி ஏற்றி, சுதந்திர தின கொண்டாடப்பட்டது
    • நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருச்சி கோட்ட அலுவலத்தின் சார்பாக ரெங்கம்மாள் சத்திரத்தில் விழா நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருச்சி கோட்ட அலுவலத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மலைவாழ் மக்கள், நரிகுறவர்கள் சமூக மாணவ மாணவிகள் மற்றும் அச்சமூக தலைவர், தலைவிகளுடன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ரெங்கம்மாள் சத்திரம் மாணவ மாணவிகளோடு (நரிகுறவர் இனம்) கோட்ட நிர்வாகப் பொறியாளர் த.இளம்பரிதி தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினார். உதவி நிர்வாகப் பொறியாளர் ச.ஷகிலா பீவி, உதவி பொறியாளர்கள் மு.நவனீதகண்ணன் மற்றும் எஸ்.பிரியாங்கா, சமுதாய வளர்ச்சி அலுவலர் செ.வினோதா, கிராமத் தலைவர்சி.மணி, துணை தலைவர் ச.சுரேஷ் உடன் இருந்தனர். மேலும் போட்டிகள் நடத்தி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  

    ×