என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை தாசில்தார் திடீர் ஆய்வு
- மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்களில் கந்தர்வகோட்டை தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
- விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. சிறப்பு முகாமில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை கந்தர்வகோட்டை வட்டாட்சியர் காமராஜ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






