என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தே.மு.தி.க சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம்
    X

    தே.மு.தி.க சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம்

    • அறந்தாங்கியில் தே.மு.தி.க சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது
    • குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதியில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி வடக்கு ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் அனைவருக்கும் கிடைத்திட , மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று கூறிவிட்டு தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை என்று பின்பற்றப்படுவது, தேங்காயின் விலை படுவீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கழுத்தில் காய்கறி மாலை அணிவித்தும் ,தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து சாலையில் தேங்காய் உடைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×