அதிசய அன்னை ஆலய தேர் திருவிழா

புதுக்கோட்டை ஆலங்குடி அதிசய அன்னை ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றதுஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அதிசய அன்னை  ஆலய தேர் திருவிழா
Published on

ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள புனித அதிசய அன்னை ஆலய திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் ஆலங்குடி பங்கு தந்தை ஆர்.கே. சாமி அடிகளார் கொடியேற்றி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்று வந்தன.விழாவின் முக்கிய நிகழ்வான தேர்ப்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. ஆலங்குடி, கும்மங்குளம், அரசடிபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்,மாதாவின் புகழ் பாடியபடி தேர்பவனியில் கலந்து கொண்டனர். தேர்பவனிக்கு பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com