என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கியில் விழிப்புணர்வு பேரணி
    X

    அறந்தாங்கியில் விழிப்புணர்வு பேரணி

    • உலக அமைதி வேண்டி அறந்தாங்கியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • 570 ஜெஆர்சி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்

    அறந்தாங்கி,

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் 88 பள்ளிகளை சேர்ந்த 570 ஜெஆர்சி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கநிலை) சண்முகம் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியானது அரசு பேருந்து நிலையம், அண்ணாசிலை, அரசு மருத்துவமனை வழியாக தனியார் பள்ளியை அடைந்தது. பேரணியின்போது போதை பொருட்களை பயன்படுத்தக் கூடாது, அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் போன்ற உலக அமைதிக்கான வாசங்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 மண்டல ஒருங்கிணைப்பாளர் பீர்சேக், அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×