என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிக்கு  கல்விச்சீர் வழங்கும் விழா
    X

    அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா

    • இருங்களன் விடுதியில் உள்ள அரசு பள்ளிக்கு கிராமப் பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கப்பட்டது
    • ரூ.௩ லட்சம் மதிப்பலான கல்வி சீர் எம்எல்ஏ சின்னத்துரை தலைமையில் ஒப்படைக்கப்பட்டது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சி இருங்களன் விடுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கிராம பொதுமக்களால் சுமார் ரூ.3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கல்விச்சீராக வழங்கப்பட்டது. இந்தக் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சிவ திருமேனிநாதன் ஊராட்சி மன்ற தலைவர் கனகவல்லி அன்பழகன் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி மையத்தின் மேற்பார்வையாளர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள் கிராம பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர் அப்பு தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×