என் மலர்
புதுக்கோட்டை
கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி உள் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக பசுபதி (வயது 50), முருகேசன் (54) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 17 கட்டு லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,800 கைப்பற்றப்பட்டது.
6 லட்சம் முன்களபணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கிள்ளுக்கோட்டையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
மத்திய அரசு 2 வகையான கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கியது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பு மருந்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை கடந்து தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஒரே நேரத்தில் தமிழகத்திற்கு எத்தனை கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டாலும் உரிய நெறிமுறைகளின்படி வழங்க அரசு தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் முதற்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 6 லட்சம் முன்கள பணியாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தடுப்பு மருந்து வழங்கப்படும் வரை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பு மருந்து வரக் கூடிய இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தமிழக அரசிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
கொரோனா தடுப்பு மருந்து ஒப்புதல் பெறப்பட்டு, உற்பத்தியாகி தொடர்ச்சியாக வரும் பொழுது தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 2½ கோடி எண்ணிக்கையில் தடுப்பு மருந்துகள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கும் வகையில் தமிழக அரசு போதிய கட்டமைப்பு வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து முன்களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு படிப்படியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

திருமயம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம், புத்தாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 60). இவர், மனைவி மற்றும் குடும்பத்தினர் 2 பேருடன் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காலை 4 மணி அளவில் காரில் வந்து கொண்டிருந்தார். திருமயம் அருகே உள்ள மலைகுடிபட்டி வளைவு அருகே வந்து கொண்டிருந்தபோது புதுக்கோட்டையிலிருந்து மதுரை நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த முருகையன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி உள் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக பசுபதி (வயது 50), முருகேசன் (54) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 17 கட்டு லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,800 கைப்பற்றப்பட்டது.
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மழையூர் ஆகிய பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ரெகுநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தேவி ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த சக்திவேல், முகமது இப்ராகிம், ரகமத்துல்லா, பகுருதீன், சலீம் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று புதுக்கோட்டையில் ப.சிதம்பரம் கூறினார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பதன் மூலம் தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது. டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இருந்தாலும், மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. குளறுபடி உள்பட எந்த விஷயத்திலும் அரசு தனது பிடிவாதத்தை தளர்த்திகொள்வது கிடையாது. இந்த அரசுக்கு மக்கள் சொல்வது ஒரு பொருட்டில்லை. நாடாளுமன்றமும், நாடாளுமன்ற விவாதங்களும், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு கேட்டாலும் பொருட்டில்லை. பா.ஜ.க. எந்திரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்தியாவில் தற்போதைய பொருளாதார நிலையில் ஏற்றுமதி மீண்டும் குறைந்திருக்கிறது. நகர்ப்புற வேலையின்மை 9.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் டிசம்பர் மாதத்தில் 2 கோடி மக்களுக்கு வீட்டில் உலை வைக்க பயன்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் தான் பல மாநிலங்களில் ஏழை மக்களை காப்பாற்றுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜ.க. தான் அறிவிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் கூறியிருப்பது நகைப்புக்குரியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சினையும் வராது என்பது எனது கருத்து. கோவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களை சந்தித்த போது சர்ச்சையை செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள்" என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 175 பேர் பலியாகினர். கொரோனா ஊரடங்கால் கடந்த 2019-ம் ஆண்டை விட இறப்பு எண்ணிக்கை குறைந்தது.
புதுக்கோட்டை:
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளை தடுக்க தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. விபத்துகள் எண்ணிக்கையை குறைக்கவும், இறப்பு எண்ணிக்கையை குறைக்கவும் இந்த விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணிதல், கார்களில் சீட் பெல்ட் அணிதல் உள்ளிட்டவை தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அதில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 1, 064 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 165 விபத்துகளில் 175 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல 919 விபத்துகளில் 1, 224 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகள் மொத்தம் 1, 240 பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் 201 விபத்துகளில் 223 பேர் இறந்தனர். 1,039 விபத்துகளில் 1,479 பேர் காயமடைந்திருந்தனர். 2019-ம் ஆண்டுடன் 2020-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டை யாரும் அதிகம் மறந்துவிட முடியாது. இதில் தான் கொரோனா எனும் கொடிய வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, பொதுமக்களின் வாழ்வாதாரமும் சிதைந்து போனது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பிறப்பிக்க முழு ஊரடங்கினால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது. சாலை விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், கொரோனாவால் உயிர்பலியானவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இலுப்பூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள போலம்பட்டியை சேர்ந்தவர் மூக்கையா (வயது 55). கூலித் தொழிலாளியான இவர் வேலையின் காரணமாக இலுப்பூர் சென்றுவிட்டு மீண்டும் போலம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேட்டுசாலை எனும் இடத்தில் சென்றபோது இலுப்பூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூக்கையா தலை நசுங்கி பலியானார். இதுகுறித்த தகவலின் பேரில் இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று மூக்கையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் டிரைவர் இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராமச்சந்திரனை (27) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம் அருகே டவுன் பஸ் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள மெய்யபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72). இவர் நேற்று காலை 5 மணி அளவில் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருமயத்தில் இருந்து கடியாப்பட்டி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரியப்பன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:
கீரனூர் அடுத்த மண்டையூரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 39). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையில் பொருட்கள் வாங்க வந்த பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் ேபரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கந்தர்வகோட்டை கிளை தலைவர் ஷேக் முகமது தலைமை தாங்கினார். உபயதுல்லா கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விரோத மோடியை கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான கட்சி செயல் வீரர்களும், ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கீரனூர் அருகே வயிறு வலி காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீரனூர்:
கீரனூர் அடுத்த நல்லபுடையான் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி சகாயமேரி (வயது 55). இவருக்கு வயிற்று வலி இருப்பதால் பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்து வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சகாயமேரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.