என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் மீது வழக்குப்பதிவு
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மழையூர் ஆகிய பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ரெகுநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தேவி ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த சக்திவேல், முகமது இப்ராகிம், ரகமத்துல்லா, பகுருதீன், சலீம் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






