என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் விசைப்படகு மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் வழக்கம் போல் மீன் பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பினர்.
அப்போது மீனவர் ஒருவர் வலையில் சுமார் 100 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் சிக்கியது. இதையடுத்து மீனவர்கள் அதை கரைக்கு கொண்டு வந்தனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பிக்கு சொந்தமான இலுப்பூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள லாட்ஜ், இலுப்பூர் சவுராஷ் டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரர் மகன் இளவரசனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் டாக்டர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.வினர் என இன்று காலையிலேயே ஏராளமானோர் திரண்டனர்.
இதனால் அந்த பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவித சம்பங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் அஜித் (21). இவர் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் தனது நண்பர்களுடன் பொற்க் குடையார் கோவில் அருகே உள்ள ஊற்றுக்குழி ஓரத்தில் மது அருந்தியுள்ளார். பிறகு ஊற்றுக்குழியில் குழித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற அஜித் நீண்ட நேரமாகியும் வர வில்லை. அதனையடுத்து சந்தேகமடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் இறங்கி நீண்ட நேரமாக தேடி, அஜித்தை சடலமாக மீட்டனர். பின்பு உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் அகஸ்டின்ராஜ்(55). இவர் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தற்போது ஓய்வில் உள்ளார்.
இவருக்கு பேஸ்புக்கில் லண்டனை சேர்ந்த ரூத் மங்கார என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லண்டனிலிருந்து அவர், பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக அகஸ்டின்ராஜியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து டெல்லியிலுள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம் என தெரியாத நபர்கள் அகஸ்டின்ராஜியிடம் போன் மூலம் பேசியுள்ளனர்.
அவ்போது அவர்கள், பரிசு பொருள் உள்ளது அதை வெளியே கொண்டு வர பணம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய அகஸ்டின்ராஜ் உடனடியாக அகஸ்டின்ராஜ் வங்கியின் டெல்லி கிளைக்கு ரூ38 ஆயிரமும், அதனை தொடர்ந்து ரூ.99,750ம், இரண்டு முறை செலுத்தியதுடன், உத்தரபிரேதசம் கிளைக்கு ரூ.50 ஆயிரத்தையும் செலுத்தியுள்ளார்.
ஆக மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 750 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால் எந்த பொருளும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அகஸ்டின்ராஜ் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலிசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரை ஏமாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நற்ப்பவளக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் செல்வக்குமார் (35) இவருக்கும் கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகள் கவிதா (25) இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி காலையில் வயலுக்கு செல்வதாகக் கூறி சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், உறவினர், நட்பு வட்டாரங்களில் தேடியும் கவிதா கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கணவர் செல்வகுமார் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, யாராவது கடத்தி இருப்பார்களா? வேறு எங்கும் சென்றிருப்பாரா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி, மாயமான கவிதாவை தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அண்டக்குளத்தை அடுத்த புதுக்குடியான்பட்டியை சேர்ந்தவர்கள் குமாரசாமி-சுசீலா தம்பதியின் மகள் குணவதி (2½ வயது). நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் தண்ணீர் தொட்டிக்குள் அருகே குணவதி விளையாடி கொண்டிருந்தாள். இதையடுத்து அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி கிடந்தாள்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அண்டக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து அறிந்த உடையாளிப்பட்டி போலீசார் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







