என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு 42 ஆடுகள் மீட்கப்பட்டன.
புதுக்கோட்டை:
ஆடு திருடர்களை விரட்டி பிடித்த போது திருச்சி நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக ஆடு திருடர்களை பிடிக்க போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருச்சி சரகத்தில் ஆடு திருடர்களை பிடிக்க டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு திருடும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தனிப்படையினர் நடத்திய சோதனையில் ஆடு திருடும் கும்பலான மச்சுவாடியை சேர்ந்த ரஞ்சித் (வயது 25), போஸ்நகரை சேர்ந்த கோபி (22), அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தை சேர்ந்த அபுபக்கர் (20), காமராஜ புரத்தை சேர்ந்த புஷ்பராஜ் (20), காந்திநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 42 ஆடுகள் மீட்கப்பட்டன.
ஆடுகளை திருட பயன்படுத்திய சரக்கு வேனும் கைப்பற்றப்பட்டன. மேற்கண்ட ஆடுகளை திருமயம், நமணசமுத்திரம், பனையப்பட்டி, பொன்னமராவதி ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டவை என தெரியவந்தது. இவர்கள் கும்பலாக சென்று ஆடுகளை திருடி வந்துள்ளனர். தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கீரனூரில் கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி முறைகேடு எதிரொலியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உள்ளது. இந்த வங்கியில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் ரூ.1 கோடியே 8 லட்சம் வரைக்கும் முறைகேடு நடந்தது, அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல், நகை மதிப்பீட்டாளர் கனகவேலு ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
நகைகளை அடகு வைத்தது போலவும், அதற்கு கடன் வழங்கியது மாதிரி கணக்கு காண்பித்து பணத்தை மோசடி செய்துள்ளனர். அதிகாரிகள் விசாரணைக்கு பின் வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் கனகவேலு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் முறைகேடு செய்த பணத்தை 3 பேரிடம் இருந்து திருப்பி வசூலித்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் தெரிவிக்கப்படும் என கூறியிருந்தனர்.
நகைக்கடன் வழங்கியதில் முறைகேட்டில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டனின் வீடு கீரனூரில் சிவன்கோவில் தெருவில் உள்ளது. இந்தநிலையில், அவர் நேற்று காலை வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நகைக்கடன் முறைகேடு தொடர்பாக மனவருத்தத்தில் இருந்த நீலகண்டன் விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பாம்பு கடித்து முதியவர் பலியானார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புதுவிடுதி ரெகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 67). இவர் தனது வயலில் வேலை பார்த்தார். அப்போது அவரை விஷபாம்பு கடித்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருப்பையாவின் மனைவி செல்லம்மாள் ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கறம்பக்குடி ஒன்றிய குழு சார்பாக, ஒன்றிய தலைவர் ராமதாஸ் தலைமையில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தொடங்கி வைத்தார்.
வெள்ளம் மழை பாதிப்பிற்கு, தமிழக அரசு கோரியுள்ள ரூ.4.025 கோடி நிதி மற்றும் தற்போதைய பாதிப்பிற்கு கோரும் நிதியையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். முழுமையாக அழிந்துள்ள தாளடி சம்பா நெல் சாகுபடிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். தனியார் உர கடைகளில் தற்பொழுது பொட்டாஷ் யூரியா மற்றும் ரசாயன உரங்கள் விவசாயிகளிடம் அதிகப்படியான விலைக்கு விற்பதை, மாவட்ட நிர்வாகம் நியாயமான விலைக்கு விற்க உத்தரவிட வேண்டும்.
கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பாரபட்சமின்றி துரிதமாக காப்பீடு வழங்க வேண்டும், கால்நடை மருத்துவமனைகளில் கோமாரி தடுப்பூசி போடவும், கோமாரி நோயினால் இறந்த கால்நடை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
கடும் மழை வெள்ளத்திலும் கறம்பக்குடியை சுற்றியுள்ள குளங்கள் நிரம்பாததற்கு வரத்து வாரிகள் வெட்டப்படாததே காரணம் எனில் துரிதமாக வரத்து வாரிகளை மராமத்து செய்திட கோரியும் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி தொழிலாளர் சங்கம் செங்கோடன், ஏ.ஐ.டி.யு.சி. ஆலோசகர் சேசுராஜ் மற்றும் 20க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

நீர்பழனி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை வேடிக்கை பார்த்தனர்.
ஆவூர்:
விராலிமலை தாலுகா, நீர்பழனியில் உள்ள பெரியகுளம் சமீபத்தில் பெய்த பருவ மழையால் நிரம்பி அதன் உபரி நீர் கலிங்கி வழியாக வெளியேறி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் தூண்டில் மற்றும் வலைகளை கொண்டு குளத்தின் ஓரப்பகுதியிலும் கலிங்கியில் இருந்து வெளியேறும் தண்ணீரிலும் மீன்பிடித்து வருகின்றனர். அந்தவகையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் குளத்தில் மீன்பிடி வலை ஒன்றை விரித்து கட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை அவர் மீனுக்கு விரித்திருந்த வலையை வெளியே இழுத்த போது அதில் மீன்களுடன் பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்றும் சிக்கியிருந்தது. இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து நீர்பழனி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வலையில் சிக்கிய மலைப்பாம்பை மீட்டு நார்த்தாமலை லிங்கமலை காட்டுப்பகுதியில் விட்டனர்.
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாயியின் கடையில் ரூ.70 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறிகள், கிழங்கு உள்ளிட்ட விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மொத்தம் 104 கடைகள் உள்ளன. இதில் திருமயத்தை சேர்ந்த விவசாயி கண்ணையா, சங்கிலியம்மாள் தம்பதியினரின் கடையும் ஒன்று உள்ளது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கியமான பண்டிகை நாட்கள், விசேஷ நாட்களில் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அதிக அளவில் வருவது உண்டு.
இந்த நிலையில் உழவர் சந்தையில் நேற்று வழக்கம் போல மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் காய்கறி வாங்கிய படி இருந்தனர். இந்த நிலையில் சங்கிலியம்மாள் கடையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர் கடையில் ஓரமாக ஒரு பையில் பணம் மற்றும் கைப்பை, உழவர் சந்தை அட்டை ஆகியவற்றை வைத்திருந்தார்.
இந்த நிலையில் கூட்டத்தை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் சங்கிலியம்மாள் வைத்திருந்த பையில் இருந்த பணத்தை திருடிவிட்டு சென்றார். இதற்கிடையில் பையை காணாது கண்டு சங்கிலியம்மாள் மற்றும் அவரது கணவர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சத்தம் எழுப்பிய நிலையில் பக்கத்து கடை வியாபாரிகளும் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசாரும் வந்து விசாரித்தனர்.
பையில் சீட்டு பணம், காய்கறிகள் விற்பனை பணம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் வைத்திருந்ததாக கண்ணையா போலீசில் புகார் கூறியிருக்கிறார். பணத்தை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நேரங்களில் மர்ம நபர்கள் இதுபோன்ற கைவரிசையில் ஈடுபடுவதாகவும், இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சை கருத்துக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாலா (வயது 35). இவர், குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சை கருத்துக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கீரனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை கண்டித்து கீரனூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணாஜிபட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிருஷ்ணாஜிபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ரபீஸ்கான் (34), இப்ராஹிம் (52), ஜாஹீர் (54). இவர்கள் 3 பேரும் கிருஷ்ணாஜிபட்டினம் கிழக்குக் கடற்கரைசாலையில் முறையே 2 மளிகைகடைகளும், ஒரு காய்கறி கடை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் 10 மணிக்கு 3 பேரும் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து மர்மநபர்கள் இரவு 1 மணி அளவில் கடைகளின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று முதல் மளிகை கடையில் ரூ. 22 ஆயிரம், 2-வது மளிகை கடையில் ரூ. 42 ஆயிரம், காய்கறி கடையில் ரூ.10 ஆயிரம் மற்றும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மளிகை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த கடை உரிமையாளர்கள் சென்று பார்க்கையில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமயம் அருகே பள்ளி வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள செவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 35). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வாழகுறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வாழகுறிச்சியில் இருந்து விராச்சிலை நோக்கி சென்ற தனியார் பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவர் பிச்சமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை காமராஜபுரம் 3ம் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிபின் ராவத் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்து, அனைவரும் மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை:
குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள் டெல்லியில் உள்ள அவர்களின் வீட்டில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்கு பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கண்டோன்மென்ட் பகுதியில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அதேசமயம், பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அவ்வகையில் புதுக்கோட்டை காமராஜபுரம் 3ம் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பிபின் ராவத் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்து, அனைவரும் மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு தேவையான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு தேவையான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 280 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.
வாக்காளர்களை பொறுத்தவரை புதுக்கோட்டை நகராட்சியில் 60,668 ஆண் வாக்காளர்கள், 64,984 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1,25,669 வாக்காளர்களும், அறந்தாங்கி நகராட்சியில் 16,573 ஆண் வாக்காளர்கள், 18,065 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 34,638 வாக்காளர்களும் என நகராட்சிகளில் 77,241 ஆண் வாக்காளர்கள், 83,049 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 1,60,307 வாக்காளர்கள் உள்ளனர்.
பேரூராட்சிகளில் பொறுத்தவரை ஆலங்குடி பேரூராட்சியில் 4,815 ஆண் வாக்காளர்கள், 4,917 பெண் வாக்காளர்கள் என 9,732 வாக்காளர்களும், அன்னவாசல் பேரூராட்சியில் 3,727 ஆண் வாக்காளர்கள், 3,789 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என 7,517 வாக்காளர்களும், அரிமளம் பேரூராட்சியில் 3,480 ஆண் வாக்காளர்கள், 3,751 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என 7,232 வாக்காளர்களும் உள்ளனர்.
இலுப்பூர் பேரூராட்சியில் 5,887 ஆண் வாக்காளர்கள், 6,094 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என 11,982 வாக்காளர்களும், கறம்பக்குடி பேரூராட்சியில் 6,447 ஆண் வாக்காளர்கள், 6,546 பெண் வாக்காளர்கள் என 12,993 வாக்காளர்கள் உள்ளனர்.
கீரமங்கலம் பேரூராட்சியில் 3,828 ஆண் வாக்காளர்கள், 3,952 பெண் வாக்காளர்கள் என 7,780 வாக்காளர்களும், கீரனூர் பேரூராட்சியில் 4,591 ஆண் வாக்காளர்கள், 4,847 பெண் வாக்காளர்கள், என 9,438 வாக்காளர்களும், பொன்னமராவதி பேரூராட்சியில் 5,261 ஆண் வாக்காளர்கள், 5,631 பெண் வாக்காளர்கள், என 10,892 வாக்காளர்களும் என பேரூராட்சிகளில் 38,036 ஆண் வாக்காளர்கள், 39,527 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 77,566 வாக்காளர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8பேரூராட்சிகளில் 1,15,277 ஆண் வாக்காளர்களும், 1,22,576 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,37,873 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 45 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு இந்த பதற்றமான வாக்குசாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கிருஷ்ணமூர்த்தி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் பெரியகுளம் சுமார் மூன்று மீட்டர் நீளமும், 15 மீட்டர் சுற்றளவும் கொண்ட மிகப்பெரிய குளமாகும்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்துள்ளது. குறிப்பாக விராலிமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் பெய்த கனமழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது.
இதில் புதுக்கோட்டை அருகேயுள்ள மாவட்டத்தின் முக்கிய நீர்வள ஆதாரமான கவிநாடு கண்மாய் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் போல் காட்சியளித்துவரும் இதனை காண மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதேபோல் விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் பெரியகுளம் சுமார் மூன்று மீட்டர் நீளமும், 15 மீட்டர் சுற்றளவும் கொண்ட மிகப்பெரிய குளமாகும். இந்த குளமும் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையினால் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு நிரம்பி வழிகிறது.
இந்த குளத்தில் இருந்து அப்பகுதி விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் செல்லும் வகையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய ஆங்கிலேய அரசால் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பின்மை காரணமாக அந்த பெரிய குளத்தின் கரைகள், மதகுகள் உள்ளிட்ட பகுதிகள் தொடர் மழையால் சேதமடைந்து உடையும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக வந்த தகவலை தொடர்ந்து அரசு அதிகாரிகள் அப்பகுதியை சோதனையிட்டு பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனர். மழை காலம் முடிந்தவுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மழையினால் நீர் நிரம்பி உள்ள குளத்திற்கு பல்வேறு கிளை வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நீரை தாக்குப்பிடிக்க முடியாமல் குளத்தின் மதகுகள் இன்று உடைந்தது. இதிலிருந்து ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் அருகிலுள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து வருகிறது.
இதனால் நெல், சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் மதகு உடைப்பை சரிசெய்து விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டால் விளை நிலங்களை தொடர்ந்து அருகிலுள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்து கொள்ளும் அபாயமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.