என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

    புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு தேவையான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு தேவையான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 280 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.

    வாக்காளர்களை பொறுத்தவரை புதுக்கோட்டை நகராட்சியில் 60,668 ஆண் வாக்காளர்கள், 64,984 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1,25,669 வாக்காளர்களும், அறந்தாங்கி நகராட்சியில் 16,573 ஆண் வாக்காளர்கள், 18,065 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 34,638 வாக்காளர்களும் என நகராட்சிகளில் 77,241 ஆண் வாக்காளர்கள், 83,049 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 1,60,307 வாக்காளர்கள் உள்ளனர்.

    பேரூராட்சிகளில் பொறுத்தவரை ஆலங்குடி பேரூராட்சியில் 4,815 ஆண் வாக்காளர்கள், 4,917 பெண் வாக்காளர்கள் என 9,732 வாக்காளர்களும், அன்னவாசல் பேரூராட்சியில் 3,727 ஆண் வாக்காளர்கள், 3,789 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என 7,517 வாக்காளர்களும், அரிமளம் பேரூராட்சியில் 3,480 ஆண் வாக்காளர்கள், 3,751 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என 7,232 வாக்காளர்களும் உள்ளனர்.

    இலுப்பூர் பேரூராட்சியில் 5,887 ஆண் வாக்காளர்கள், 6,094 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என 11,982 வாக்காளர்களும், கறம்பக்குடி பேரூராட்சியில் 6,447 ஆண் வாக்காளர்கள், 6,546 பெண் வாக்காளர்கள் என 12,993 வாக்காளர்கள் உள்ளனர்.

    கீரமங்கலம் பேரூராட்சியில் 3,828 ஆண் வாக்காளர்கள், 3,952 பெண் வாக்காளர்கள் என 7,780 வாக்காளர்களும், கீரனூர் பேரூராட்சியில் 4,591 ஆண் வாக்காளர்கள், 4,847 பெண் வாக்காளர்கள், என 9,438 வாக்காளர்களும், பொன்னமராவதி பேரூராட்சியில் 5,261 ஆண் வாக்காளர்கள், 5,631 பெண் வாக்காளர்கள், என 10,892 வாக்காளர்களும் என பேரூராட்சிகளில் 38,036 ஆண் வாக்காளர்கள், 39,527 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 77,566 வாக்காளர்கள் உள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8பேரூராட்சிகளில் 1,15,277 ஆண் வாக்காளர்களும், 1,22,576 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,37,873 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 45 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு இந்த பதற்றமான வாக்குசாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கிருஷ்ணமூர்த்தி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×