என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கியில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி இந்திரா நகரை சேர்ந்தவர் வனிதா (வயது 32). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது அவர் தனது இரு சக்கர வாகனத்தை கடை எதிரே நிறுத்தி இருந்தார். பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனத்தை காணாது திடுக்கிட்டார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அக்ரஹார பகுதியை சேர்ந்த நாடிமுத்து என்பவரை கைது செய்தனர்.
பொன்னமராவதி பகுதியில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி பஸ் நிலைய வளாகத்தில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாக பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இந்தநிலையில் பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே இளம்வயதினருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி பகுதியில் இளம் வயதினரை குறிவைத்து செக்ஸ் எண்ணத்தை தூண்டும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்களை அனுப்பி வருவதாக வந்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவுரி விசாரணை மேற்கொண்டார்.
இதில் ஈடுபட்டது பொன்னமராவதி அருகே வேகுபட்டியை சேர்ந்த வாலிபர் வெங்கட் மகன் அரவிந்தராஜ் என தெரிய வந்தது. அவர் மீது போக்சோ சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 2 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகம் முழுவதும் கஞ்சா, புகையிலை, குட்கா ஒழிப்பில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினமும் வாகனங்களில் குட்கா கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகவே உள்ளது.
குறிப்பாக பல்வேறு குற்ற செயல்களுக்கு குட்கா பயன்படுத்துவது, கஞ்சா புகைப்பது அடிப்படையாக இருப்பதாகவும், அதனை அடியோடு ஒழிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் கஞ்சா பழக்கத்தை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கஞ்சாவை தடுக்க வேண்டிய போலீசாரே அதனை ஊக்குவிக்கும் செயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சந்திரசேகர்.
இவர் புதுக்கோட்டையில் உள்ள சில கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் திருச்சி சரகத்தில் பணியாற்றி வரும் போலீசாரின் செல்போன் எண்கள் டி.ஐ.ஜி. தலைமையிலான கண்காணிப்பு குழு சார்பில் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.
மேலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை சரகத்தில் உள்ள போலீசார் யார், யாரிடமெல்லாம் பேசியுள்ளனர் என்பது குறித்து அந்த தனிக்குழுவினர் பட்டியல் தயாரித்து ஆய்வு நடத்துகிறார்கள்.
அந்த வகையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரின் செல்போனை ஆய்வு செய்தபோது அவருக்கு கஞ்சா வியாபாரிகளுடனான தொடர்பு உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் திருப்புனவாசல் போலீஸ் நிலைய தலைமைக்காவலர் முத்துக்குமார் என்பவரும் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் சஸ்பெண்டு செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 2 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.
அரிமளம் அருகே தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அறந்தாங்கி அருகே உள்ள கடையாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரையா (வயது 40). எலக்ட்ரீசியன். இவர், சம்பவத்தன்று அரிமளம் அருகே உள்ள பொந்துப்புளி கிராமத்தில் ஒருவரது புது வீட்டில் வயரிங் செய்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பகுதியில் இருந்து கீழே இறங்க ஏணி வைத்திருந்தார். அதில் கால் வைத்தபோது வீரையா தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 923 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.
திருவாதிரை தினத்தையொட்டி திருச்சி அருகே உள்ள திருநெடுங்களநாதர், உத்தமர், திருவாசி கோவில்களில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
துவாக்குடியிலுள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன வழிபாடுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்
அதன்படி திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது.
அப்போது உற்சவர்களான நடராஜர், சிவகாமி சுந்தரி, மாணிக்கவாசகர் ஆகியோ ருக்கு பால், தயிர், இளநீர், தேன் பஞ்சாமிர்தம், பழங்கள், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, தேவ வாத்தியம் இசைக்க மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி நடராஜரை வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாக அலுவலர் வெற்றிவேல் மற்றும் அர்ச்சகர்கள் சோமசுந்தர சிவாச்சாரியார், ரமேஷ், கணேஷ் சிவாச்சாரியர் சிறப்பாக செய்திருந்தனர்.
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக விநாயகர் பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து உற்சவர் நடராஜருக்கு பால், தயிர், தேங்காய் துருவல், தேன், இளநீர், மாதுளை, பன்னீர் உள்ளிட்ட 36 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு கண்டு கோவில் பிரகாரத்தை வலம் வந்து நடராஜருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோன்று திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு பால், தயிர், மஞ்சள்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியதாக 3-வது கணவருடன் பெண் கைது செய்யப்பட்டார். மேலும், இவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவூர்:
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மண்டையூர் முருகன் கோவில் அருகே நேற்று முன்தினம் மாத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் இருந்தார். மேலும், அவருடன் வந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர் மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த டிரைவர் ராமு (வயது 32) என்பதும் அவருடன் வந்த பெண் நாகர்கோவில் டவுன் பகுதியை சேர்ந்த லதா (40) என்பதும் தெரியவந்தது. மேலும், லதா திருட்டில் ஈடுபட்டதால் அவரது முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும், திருட்டு வழக்கில் லதா நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு திருட்டு வழக்கில் சிறையில் இருந்த ரெங்கநாதனுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் மற்றொரு வழக்கில் ரெங்கநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைதொடர்ந்து மதுரை நரிமேடு பகுதிக்கு லதா வந்தபோது டிரைவர் ராமுவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளை கண்காணித்து அந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி வந்துள்ளனர்.
அதேபோல் மாத்தூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வில்லாரோடை, சோழியகுடி, மண்டையூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சின்னமூலிப்பட்டி, காரப்பட்டு காலனி மற்றும் விராலிமலை, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிய வந்துள்ளது.
இதனைதொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அறந்தாங்கி மற்றும் திருமயம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை கிராமத்தில் குடிநீர் வசதி வேண்டி காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு கோரிக்கை வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தில் உள்ள 4 வது வார்டில் ஆழ்குழாய் கிணறு கடந்த 2 வருடங்களாக செயல்படாமல் உள்ளது.
இக்கிரமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆழ்குழாய் கிணறு செயல்படாத கரணத்தால் 5 கிலோமீட்டர் தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில்,
உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசு பொதுமக்களின் இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக ஆழ்குழாய் கிணற்றை சீரமைத்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

அரிமளம் அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகின்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மருதம்பட்டியில் மருதுடைய அய்யனார் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கோவில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கு வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பாத்திரங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் டிரஸ்டி ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் அரிமளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

ஆந்திரா வனப்பகுதிகளில் அதிகம் காணப்படும் 13 நட்சத்திரங்களை கொண்ட ஆமை, தமிழகத்தில் நீர் நிலைகள் அல்லாது, தரை பகுதிகளில் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பருத்தினி கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று பிடிபட்டுள்ளது. 13 நட்சத்திரங்களை கொண்ட ஆமை பஞ்சாத்தி கிராம மக்கள் செல்லும் வழியில் ஊர்ந்து சென்றபோது பிடிபட்டுள்ளது.
ஆந்திரா வனப்பகுதிகளில் அதிகம் காணப்படும் இவ்வகையான ஆமை, தமிழகத்தில் நீர் நிலைகள் அல்லாது, தரை பகுதிகளில் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அவ்வாறு பருத்தினி வயல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட நட்சத்திர ஆமை, அறந்தாங்கி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வனச்சரக அலுவலர் சதாசிவம், வனவர் அன்புமணி, வேட்டைத் தடுப்புக் காவலர் சைமன் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்ட ஆமையானது, வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதிகளில் பாதுகாப்பாக விடப்பட்டது.