என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கறம்பகுடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் வீதிக்கு வந்து போராட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை கிராமத்தில் குடிநீர் வசதி வேண்டி காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு கோரிக்கை வைத்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தில் உள்ள 4 வது வார்டில் ஆழ்குழாய் கிணறு கடந்த 2 வருடங்களாக செயல்படாமல் உள்ளது.

    இக்கிரமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆழ்குழாய் கிணறு செயல்படாத கரணத்தால் 5 கிலோமீட்டர் தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில்,

    உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசு பொதுமக்களின் இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக ஆழ்குழாய் கிணற்றை சீரமைத்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×