என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    • வீட்டை பூட்டிவிட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே வையாபுரி விளக்கு ரோட்டில் வசித்து வருபவர் லட்சுமணன் மனைவி மல்லிகா(வயது 53) . இவர்அரசமலையில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    மல்லிகா வீட்டை பூட்டிவிட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டார். அப்போது மூத்த மருமகள் நித்தியகல்யாணி என்பவர் மல்லிகாவிடம் சாவியை வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக்கண்டு அதிரச்சிஅடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 7பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ5ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து புகாரின் பேரில் காரையூர் போலீசார் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது
    • விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் வருகிற 28ம் தேதி ஆகும் .

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 

    2022 - 23ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது

    கூட்டுறவு மேலாண்மை பட்டிய பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.

    விண்ணப்பங்களை பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து அல்லது கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் வருகிற 28ம் தேதி ஆகும் .

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர் பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழில் பயிற்சி நிலையம் தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு நாடிமுத்து நகர் பட்டுக்கோட்டை - 614 602 என்ற முகவரிக்கு தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பி வைக்க அனுப்பி வைக்கலாம். 1.8.22 அன்று கடைசி நாளாகும்.

    பயிற்சி சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை 12ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்ட படிப்பு முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் முதல்வரின் அலைபேசி எண்கள் 94860 45666, 97888 25339, 63811 46217 தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறுவை தொகுப்பு திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய மாநாடு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், மாநில செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கறம்பக்குடி வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய கட்டிடம் கட்ட வேண்டும். கறம்பக்குடி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கறம்பக்குடி அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். கறம்பக்குடியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு காவிரியில் குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் பிற டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டங்கள் இம்மாவட்டத்திற்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், குறுவை தொகுப்பு திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பட்டுப்புழு வளர்ப்பில் தொற்று நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
    • அனைத்து கிராமதிட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்

    புதுக்கோட்டை:

    விராலிமலை வட்டாரம் சிங்கதாக்குறிச்சி கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் பட்டுப்புழு வளர்ப்பில் தொற்று நீக்கம் குறித்த விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் பட்டு வளர்ச்சி துறையைச் சேர்ந்த சிலம்பரசன், உதவி ஆய்வாளர்கள் பேசும் போது, பட்டு வளர்ப்பில் நான்கு வகையான பட்டு வளர்ப்பு முறை பின்பற்றபட்டு வருகிறது. அதில் பட்டுப்புழுக்களை வளர்க்க தேவையான குடில் மற்றும் நெற்றிக்கா போன்ற உபகரணங்களை கிருமி நீக்கம் செய்வது குறித்தும்,

    அறுவடை செய்த பட்டுக்கூடுகளை விற்பனை சந்தை நிலவரங்கள், பட்டு வளர்ச்சி துறையில் வழங்கப்படும் பல்வேறு வகையான மானிய விபரங்கள் மற்றும் பட்டு வளர்ப்பு குறித்த விவசாயிகள் பயிற்சிகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    அதனைத்தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்செல்வி, வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானிய விபரங்களை எடுத்துக்கூறினார். இறுதியாக துணை வேளாண்மை அலுவலர், கலைஞரின் அனைத்து கிராமதிட்ட விபரங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேவி வரவேற்புரை வழங்கினார். பயிற்சியின் முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளா; பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் விராலிமலை சார்பாக நன்றி கூறினார்..

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பர்கானா பேகம் செய்திருந்தார்.  

    • குருகுலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
    • கீரமங்கலம் காவல் நிலையத்தில் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள அலஞ்சிரங்காடு. குருகுலம் பள்ளியில் பயிலும் 80 மாணவர்கள், கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று காவல் துறை பற்றியும், காவல் நிலைய பணிகளைப் பற்றியும் அறிந்து கொண்டனர்.

    கீரமங்கல காவல்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார். அப்போது அவர், மாணவர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்வது, செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை பற்றியும்,

    மாணவர்கள் காவல்துறை சார்ந்த படிப்புகளை ப யில்வது, வேலை வாய்ப்பு பெறுவது எப்படி என்றும் போதைப்பொருள் இல்லாத ஒரு மாணவ சமுதாயத்தை உரு வாக்குவது தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை வழங்கினார். இறுதியாக, குருகுலம் பள்ளி சார்பில் காவல் துறையினருக்கு மரக்கன்றுகளை பள்ளி மாணவர்கள் வழங்கினர்.

    • புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கினார்
    • உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவுடை இவரது மகன் சுரேஷ் (வயது30), இவருக்கும் வீரமங்களத்தைச் சேர்ந்த உஷா (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    . இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், ஆடி மாதம் பிறந்ததால், உஷாவை அவருடைய பெற்றோர் சொந்த ஊரான வீரமங்கலத்திற்கு அழைத்து சென்றனனர். அதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று மனைவி உஷாவை பார்க்க சுரேஷ் அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே குடும்பத்தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் சுரேஷ், அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார், விரைந்து வந்து சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து சுரேஷின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அறந்தாங்கி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 45 நாட்களில் வாலிபர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை:

    இலுப்பூர் அருகே பாப்பாங்குடியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி குணா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டுஆகிய நிலையில் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குமார் சேலத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் குணா கடந்த 2 மாதங்களாக தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். பின்னர் கணவர் வீட்டிற்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குணாவிற்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை இரண்டையும் தவறாமல் கொடுக்க வேண்டும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி, அடப்பன்வயல் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாமினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

    தமிழக அரசு 2023 ஆம் ஆண்டிற்குள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 10 ஆக குறைக்க வேண்டும் என்பதே இலக்கு ஆகும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    அதன்படி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பினைத் தடுக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,799 அங்கன்வாடி மையங்களும், 76 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 257 துணை சுகாதார நிலையங்களும், 13 அரசு மருத்துவமனைகளும், ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் என ஆகமொத்தம் 2,146 இடங்களில் இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் 17.07.2022 முதல் 30.07.2022 வரை நடைபெறுகிறது.

    மேலும் பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாழ்வு, கிராம பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வி ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினை சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை இரண்டையும் தவறாமல் கொடுக்க வேண்டும். துத்தநாக மாத்திரையை 14 நாட்கள் வரை தொடர்ந்து கொடுக்கவும்.

    மேலும் வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில், தாய்ப்பால் மற்றும் நீர் ஆகாரம் தொடர்ந்து கொடுக்கவும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சிகிச்சைக்கு அருகில் உள்ள அரசு துணை சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டடர் அர்ஜூன்குமார், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன், நகராட்சி ஆணையர் நாகராஜன், நகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் கம்பன் கழக பெருவிழாவில் சுகி சிவம் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெற்றது
    • இன்றைய பெண்ணிற்கு கம்பன் நியாயம் வழங்கவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் தொடங்கியது. புதுகை பாரதி வழக்கை மறுத்து ராஜபாளையம் கவிதா ஜவஹர் பேசினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் 47-ம் ஆண்டு கம்பன் பெருவிழா 10 நாட்கள் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான நேற்று முதலில் உரைகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாக்குழு உறுப்பினர் முனைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் முனைவர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மணவாளன், தலைவர் வீரமுத்து, சதாசிவம், பரம்பூர் வர்த்தக சங்கம் தலைர் முகமது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுக்கோட்டை முத்துநிலவன், கோவில்பட்டி சரவணச்செல்வன், லால்குடி ஜோதி உரையாற்றினர். இறுதியாக முத்துபாண்டியன் நன்றி கூறினார்.

    இரண்டாம் அமர்வாக வழக்காடு மன்றம் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    தேசிய இலக்கிய மன்ற தலைவர் ஆரோக்கியசாமி, மேனாள் நகர்மன்ற உறுப்பினர் இப்ராகிம்பாபு, பொன்னமராவதி வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன், விவசாயிகள் சங்கம் தனபதி முன்னிலை வகித்தனர்.

    சொல் வேந்தர் சுகிசிவம் நடுவராக இருக்க, இன்றைய பெண்ணிற்கு கம்பன் நியாயம் வழங்கவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் தொடங்கியது. புதுகை பாரதி வழக்கை மறுத்து ராஜபாளையம் கவிதா ஜவஹர் பேசினார்.

    இறுதியில் பெண்ணிற்கு துரோகம் இழைக்கவில்லை கம்பன் என தீர்ப்பு கூறினார். இறுதியாக ரவி நன்றி கூறினார்.

    47-ம் ஆண்டு கம்பன் பெருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கோவில்பட்டி கம்பன் கழக நிர்வாகிகளான நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் லெட்சுமணப்பெருமாள், செயலாளர் சரவணச்செல்வன், பொருளாளர் வினோத்கண்ணன், துணைத்தலைவர்கள் சிதம்பரம், ராஜாமணி ஆகியோருக்கு புதுக்கோட்டை கம்பன் கழக தலைவர் தொழிலதிபர் ச.ராமச்சந்திரன், செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியங்கள் வரைதல் உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

    விழாவில் பள்ளியின் தாளாளர் வெல்கம் என்.மோகன், மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை மேற்கு மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.சிவசாமி, விராலிமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி நிர்வாக இயக்குனர் அருண் பிரசாத் மோகன் வரவேற்றார். விவேகா மெட்ரிக் பள்ளி தாளாளர் வெல்கம் மோகன் நன்றி கூறினார்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் கல்வி மாவட்டத்திலேயே முதல் இடம் பெற்ற பள்ளி விராலிமலை விவேக மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
    • 222 வீரர்கள் பங்கேற்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி தாலுகா வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதத்திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவினையொட்டி பாய்மரப்படகு போட்டி நடைபெறும்.

    இந்தாண்டு நேற்று நடைபெற்ற படகு போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 37 பாய்மரப் படகுகள் போட்டியில் பங்கேற்றன. ஒரு படகிற்கு 6 வீரர்கள் வீதம் 222 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.ஒரு படகிற்கு ஒரு சொருகு பலகை, ஒரு கடல் பலகை, ஒரு பாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டிருந்தது.

    மேலும் போக,வர 12 கிலோ மீட்டர் தூரம் பந்தைய எல்லை நிர்ணயம் செய்யப்பட் டிருந்தது.போட்டி தூரத்தை கடக்க வீரர்கள் ஒருவரையொருவர் தங்கள் படகை முந்தி செலுத்தியது காண்போருக்கு மிகவும் உற்சாகம் அளிக்கும் விதமாக இருந்தது. போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.படகு போட்டியை ஏராளமான ரசிகர்கள் , பொதுமக்கள் கடற்கரையோரம் நின்று ரசித்தனர்.50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது.
    • 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கிளைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். அனைவரையும் வட்டச் செயலாளர் துரைராஜ் வரவேற்று பேசினார், கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுப்பையா, மாவட்ட செயலாளர் செல்லையா, மாவட்ட பொருளாளர் பழனிமலை மற்றும் அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க கோருதல், பழைய ஓய்வூதியம் வழங்க கோருதல், இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க கோருதல், இரவு காவல் பணியை நிறுத்த கோருதல், கிராம உதவியாளர்கள் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×