என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறுவை தொகுப்பு திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
- குறுவை தொகுப்பு திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய மாநாடு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், மாநில செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கறம்பக்குடி வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய கட்டிடம் கட்ட வேண்டும். கறம்பக்குடி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கறம்பக்குடி அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். கறம்பக்குடியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு காவிரியில் குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் பிற டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டங்கள் இம்மாவட்டத்திற்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், குறுவை தொகுப்பு திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






