தூக்கில் பிணமாக தொங்கிய புதுமாப்பிள்ளை

புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கினார்உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தூக்கில் பிணமாக தொங்கிய புதுமாப்பிள்ளை
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவுடை இவரது மகன் சுரேஷ் (வயது30), இவருக்கும் வீரமங்களத்தைச் சேர்ந்த உஷா (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், ஆடி மாதம் பிறந்ததால், உஷாவை அவருடைய பெற்றோர் சொந்த ஊரான வீரமங்கலத்திற்கு அழைத்து சென்றனனர். அதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று மனைவி உஷாவை பார்க்க சுரேஷ் அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே குடும்பத்தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் சுரேஷ், அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார், விரைந்து வந்து சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து சுரேஷின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அறந்தாங்கி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 45 நாட்களில் வாலிபர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com