என் மலர்
புதுக்கோட்டை
- அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது
- உறுப் பினர் தேர்வுகள் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடப்பு ஆண்டிற்க்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் துணைத்தலைவர் மற்றும் உறுப் பினர் தேர்வுகள் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணன், துணைத்தலைவர் பழனியப்பன் செயலாளர் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர் உறுப்பினர் ரகுநாதன் ஆகியோர் தேர்வு செய்தனர். மேலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக, துரைப்பாண்டி யன் ரவிக்குமார் பாரி இலக்கியா செல்லையா வளர்மதி பாண்டித்து ரை ராஜேஸ்வரி பாஸ்கரன், கலைமணி வீரமணி மகேந்திரன் மேக லா, அறிவழகன், மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- 120 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி கொண்ட கண்மாயை சுத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நோய் தொற்று பரவுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை:
குப்பைத்தொட்டியாக மாறிவரும் கண்மாயை சுத்தம் செய்யும் வரை விவசாய பணிகளை மேற்கொள்ளமாட்டோம் என்று அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராம விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-
எங்கள் ஊரில் உள்ள கண்மாய் மூலம் சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன. மழைக்காலங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அருகன்குளம், நெடுங்குளம், வண்ணான்குளம் ஆகிய குளங்களிலிருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண்மாய்க்கு வந்தடையும்.
இந்நிலையில் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்கடை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடிதண்ணீர் போன்று பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரை படர்ந்து சாக்கடை கண்மாயக மாறிவிட்டது.
அதோடு மட்டுமல்லாது நகர்புறத்திலிருந்து சேமிக்கப்படுகின்ற குப்பைகள் மற்றும் கோழிக்கழிவுகள் இக்கண்மாயில் கொட்டப்படுகிறது. இதனால் கண்மாய் தண்ணீரில் பல்வேறு விதமான தொற்றுக்கிருமிகள் உற்பத்தியாகி, தண்ணீரை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது.
மேலும் விவசாய காலங்களில் கண்மாயிலிருந்து பாய்ச்சப்படுகின்ற தண்ணீரில் நோய் தொற்று கிருமிகள் உள்ளதால்,
- சோழீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- 16 வகையான பொருட்களுடன் அபிஷேகங்கள்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடக்கமாக சிவாச்சாரியார் கணேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு யாக, பூரணாகுதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலபைரவருக்கு பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களுடன் அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, புனுகு மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க அனுமதி கேட்டால் சி.பி.ஐ.க்கு கொடுக்கதான் வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ரூ.14 லட்சம் மதிப்பில் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, நுண்ணறிவுக்கான வரைபடங்கள் உள்ளிட்டவற்றுடன் அமைக்கப்பட்ட உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா, முழு உடற்பரிசோதனை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையம் ஆகியவற்றை மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், இருக்கை மருத்துவர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது :-
முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டுமென சிபிஐ அனுமதி கேட்டால் அனுமதி கொடுத்து தான் ஆக வேண்டும். இது குறிதது தமிழக முதல்வர் உரிய முடிவை எடுப்பார்.
அதே சமயம் குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சரை விசாரிக்க வேண்டுமென சிபிஐ அனுமதி கேட்டுள்ளதாக தகவல் மட்டும் வெளியாகி உள்ளது. இது குறித்து முழு விவரங்கள் இனிமேல் தான் அதிகாரிகளிடம் கேட்டு ஆலோசிக்க உள்ளேன்.
தற்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. நாங்கள் எங்கெல்லாம் சோதனை நடத்தினோமோ அங்கெல்லாம் சோதனை நடத்தப்படுகிறது. நாங்கள் சோதனை நடத்தும் போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியவர்கள் வருவான வரித்துறை சோதனை குறித்து வாய் திறக்கவில்லை.
சிறைகளில் கைதிகள் செல்போன்கள் பயன்ப டுத்த அலுவலர்கள் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீது பணியிடை நீக்கம், பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
- ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
புதுக்கோட்டை:
தேசத்தின் எதிர்காலக் கல்வியைச் சீரழிக்கும் தேசியக் கல்விக்கொள்கையை திரும்பப்பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை திரும்பத் தர வேண்டும், ஊக்க ஊதியம், சரண்டர், டிஏ போன்ற பறிக்கப்பட்ட சலுகைகளை உடன் வழங்கிட வேண்டும், ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் இஎம்ஐஎஸ் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ராமகிருஷ்ணன் துவக்கவுரையற்றினார். மாவட்ட துணைச் செயலாளர்அழகு, கல்வி மாவட்ட செயலாளர் புவியரசு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிர்வாகிகள் மணிக்குமார், தேவகுமார், மகாலிங்கம், மீனாட்சி , காத்தாயி, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- வரும் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற உள்ளது
- மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில், கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கபிரதிநிதிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் கவிதா ராமு அழைப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ மாணவியருக்கு மற்றும் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
மேலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்க கூடாது.
இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். என்று தெரிவித்துள்ளார்.
- 44 ஆவது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது
- போட்டிக்கான நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் மாரிமுத்து, முத்துக்குமார், புவனேஸ்வரி ஆகியோர் செயற்பட்டனர்.
புதுகோட்டை:
கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. 44 ஆவது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. விளையாட்டுப் போட்டிகளை பாரத பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனிதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆசிரியர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு பார்வையாளர்களாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் ஆகியோர் பங்கேற்றனர். போட்டிக்கான நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் மாரிமுத்து, முத்துக்குமார், புவனேஸ்வரி ஆகியோர் செயற்பட்டனர். நிறைவாக பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் சரவணன் நன்றி கூறினார்.
- பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர்
புதுக்கோட்டை:
விராலிமலை ஊராட்சி ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ஈஸ்வரி (வயது 32). இவரது சகோதரி விஜயலட்சுமி என்கிற ரோகினி (26). இவருக்கு விராலிமலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மதியழகன் என்பவருடன் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து ேவறுபாடு காரணமாக ஈஸ்வரி வீட்டிற்கு விஜயலட்சுமி வந்துள்ளார். இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈஸ்வரி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கடைவீதியில் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
அரிமளம் ஒன்றியம், ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 50). இவர் தனது மோட்டார் சைக்கிளை ராயவரம் கடைவீதியில் நிறுத்திவிட்டு கடையில் பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து செல்லையா கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது
- விவசாயிகளுக்கு விவசாய காப்பீடு வழங்கவேண்டும்
புதுக்கோட்டை:
பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமைவகித்தார். மாவட்ட செயலர் செங்கோடன், மாநிலக்குழு உறுப்பினர் ஏனாதி ராசு ஆகியோர் பங்கேற்று மாவட்டக்குழுவின் முடிவினை விளக்கிப்பேசினர். கூட்டத்தில் ஒன்றிய அரசின் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் 2021-2022 ஆகிய வருடங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய காப்பீடு வழங்கவேண்டும். காரையூர் காவல்நிலையத்தை பொன்னமராவதி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் செயல்பட தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆகஸ்ட்-7,8,9 தேதிகளில் திருப்பூரில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாட்டில் பொன்னம ராவதியிலிருந்து திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வம், வெள்ளக்கண்ணு, வெள்ளச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய துணை செயலர் கருணாமூர்த்தி நன்றி கூறினார்
- அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடைபெற்றது.
- 29 அரசு பள்ளிகளின் மாணவியர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி பொன்னமராவதி வட்டார அளவிலானஅரசு பள்ளிகளுக்கிடையேயான சதுரங்கப்போட்டிகள் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியை கி.நிர்மலா தலைமைவகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் ராமதிலகம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி காளிதாஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்லநாகு ஆகியோர் போட்டியை தொடங்கிவைத்தனர்.
பயிற்சியாளர் முகமது இக்பால் போட்டியை வழிநடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்மணி, கங்காதேவி மற்றும் வட்டார பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டியை ஒருங்கிணைத்தனர். போட்டியில் பொன்.புதுப்பட்டி, வார்ப்பட்டு, ஆலவயல், மேலைச்சிவபுரி உள்ளிட்ட 29 அரசு பள்ளிகளின் மாணவியர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியை சோம.நாராயணி நன்றி கூறினார்.






