என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்
- 44 ஆவது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது
- போட்டிக்கான நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் மாரிமுத்து, முத்துக்குமார், புவனேஸ்வரி ஆகியோர் செயற்பட்டனர்.
புதுகோட்டை:
கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. 44 ஆவது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. விளையாட்டுப் போட்டிகளை பாரத பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனிதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆசிரியர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு பார்வையாளர்களாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் ஆகியோர் பங்கேற்றனர். போட்டிக்கான நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் மாரிமுத்து, முத்துக்குமார், புவனேஸ்வரி ஆகியோர் செயற்பட்டனர். நிறைவாக பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் சரவணன் நன்றி கூறினார்.






