என் மலர்
புதுக்கோட்டை
- விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்
- குடும்ப தகராறில் நடந்த விபரீதம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வடகாடு வடக்குபட்டியைச்சேர்ந்த ராஜேந்திரன் மகன் இந்திராஜி (வயது 27). சம்பவத்தன்று குடும்பத்தில் தாயாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவிரக்தியில் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையி ல் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரஜி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக் குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சஞ்சீவ் நகரில் வசித்து வரும் அரசு டாக்டர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்
- கொள்ளை சம்பவம் நடந்த டாக்டரின் வீடானது காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சஞ்சீவ் நகரில் வசித்து வருபவர் ஆசிக் அசன் முகமது. மருத்துவரான இவர் விராலிமலை அருகேயுள்ள முக்கணாமலைப்பட்டி அரசு மருத்துமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்றிரவு புதுக்கோட்டையில் வசித்து வரும் டாக்டர் ஆசிக்கின் சகோதரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பார்த்து வருவதற்காக டாக்டர் ஆசிக் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டை சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் சகோதரியின் வீட்டிலேயே தங்கிவிட்டார்.
இதற்கிடையே நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளையர்கள் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நன்கு உறுதி செய்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ஒவ்வொரு அறையாக சென்ற அவர்கள் பீரோ இருந்த அறைக்குள் நுழைந்தனர். தொடர்ந்து பீரோவில் இருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் வெளியே வந்த கொள்ளையர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றுள்ளனர்.
இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து திரும்பிய டாக்டர் ஆசிக் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை மற்றும் மோட்டார்சைக்கிள் திருடு போயிருந்ததை அறிந்தார். பின்னர் இதுகுறித்து அவர் இலுப்பூர் போலீசில் புகார் அளித்தார்.
கொள்ளை சம்பவம் நடந்த டாக்டரின் வீடானது காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் நள்ளிரவில் டாக்டர் ஆசிக் வீட்டின் அருகில் வசித்து வரும் பீர் முகமது என்பவர் வீட்டிலும் இருசக்கர வாகனமும் திருடு போயுள்ளது. மேலும் வடுகர் தெருவில் வசிக்கும் ஆரோக்கியசாமி வீட்டில் 3.5 சவரன் நகை மற்றும் ரூ.20,000 ஆயிரம் பணமும் கொள்ளை போயுள்ளது.
இலுப்பூர் கண்ணாரத்தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டிலும் 5 பவுன் நகையும், ரூ.30,000 பணமும் கொள்ளை போயுள்ளது. இந்த தொடர் திருட்டு சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள் சம்பவ ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கொள்ளை நடந்த வீடுகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே விசாரணை நடத்தினார்.
அடுத்தடுத்து 4 இடங்களில் திருட்டு சம்பவத்தால் இலுப்பூர் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மருத்துவரின் வீட்டிற்கு அருகில் உள்ள 4 வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
- மாவட்ட கண்காணிபாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். அரசு மருத்துவரின் வீட்டில் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மருத்துவரின் வீட்டிற்கு அருகில் உள்ள 4 வீடுகளின் பூட்டையும் உடைத்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகியிருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மருத்துவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்கின்றனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய ஒரு தனிப்படையும், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தனிப்படை போலீசார், அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக கூட்டுறவு சங்கங்களின் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் 8.1.2020 அன்று நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 8.1.2022 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எம்.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் புதுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கியில் 1.12.2019 ஆம் தேதியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக கூட்டுறவு சங்கங்களின் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் 8.1.2020 அன்று நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு 12.11.2020 அன்று நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு கடிதம் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர நிர்வாக காரணங்களால் நேர்முகத்தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள புதிய காலி பணியிடங்களை கருத்தில்கொண்டு நிர்வாக காரணங்களின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் மேற்குறிப்பிட்ட அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 8.1.2022 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது
- பனங்குளம், குலமங்கலம் மற்றும் வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் நகரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு. குதிரைகள் ஆடியவாறே முன்னால் செல்ல பால் குடங்களோடு பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக சென்ற பக்தர்கள் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது. 7-ம் நாள் திருவிழாவாகிய நேற்று கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலரும் தங்கள் பகுதிகளில் இருந்து ஊர்வலமாக தலையில் பால் குடங்களை சுமந்தவாறு கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பேருந்து நிலையம் அருகே திரண்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் 5-க்கும் மேற்பட்ட அலங்கார குதிரைகள் நடனமாட, மேள தாளங்களோடு கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். பனங்குளம், குலமங்கலம் மற்றும் வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் நகரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இன்று 8-ம் நாள் திருவிழாவாக பொங்கல் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) தேரோட்டமும் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:
சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆலங்குடி பேரூராட்சி மாமன்ற தலைவர் ராசி முருகானந்தம் தலைமை தாங்கி, நம் செஸ் நமது பெருமை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தை கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, வட்டங்கச்சேரி திடலில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் கோல போட்டியை மதிப்பீடு செய்து முதல் பரிசு வழங்கினார். பேரூட்ராசி செயல் அலுவலர் பூவேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிக்குமார், ஆலங்குடி நகரச்செய லாளர் பழனிகுமார் மற்றும் துணைத்தலைவர் செங்கோல் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக விழிப்புணர்வு பேரணி ஆலங்குடி, அரசமரம், காமராஜர் சிலை, பஸ் ஸ்டாண்ட், பள்ளிவாசல் தெரு, சந்தப்பேட்டை வழியாக வடகாடு முக்கம் பேரூராட்சியை வந்து அடைந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரேவதி மற்றும் ஆலங்குடி நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கண்ணதாசன், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன்,
பொருத்துனர் குமார், சமூக மேம்பாடு மற்றும் மறு சீரமைப்பு அறக் கட்டளையின் நிறுவனத்தலைவர் அருண்ஜார்ஜ், மணிக்கண்டன் மற்றும் அலுவலக பணியாளர்கள், மாணவிகள் ஆலங்குடி நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, மாவட்ட பிரநிதி கே.வி.சுப்பையா மற்றும் பொதுமக்கள் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
- மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்ட சிறப்பு முகாமை ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தொடங்கி வைத்தார்.
- ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தேதி வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்ட சிறப்பு முகாமை ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தொடங்கி வைத்தார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் லோகநாதன், ஜெகன், முருகன், சிவகுமார், லலிதா, வனிதா ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் தொடங்கியது. முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.
இதில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையிடம் வழங்கினார்.
- முழு கவச உடை ரூ.1,16,435 என ஆகமொத்தம் ரூ.5,56,551 மதிப்பிலான 34 கருவிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டரின் தன்விருப்ப நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையிடம் வழங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இச்சூழ்நிலையில் தீயணைப்பு துறையின் மூலம் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட கருவிகளை கொண்டு பொதுமக்களை பேரிடர்களிலிருந்து மீட்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தன்விருப்ப நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 2 எண்ணிக்கையிலான விபத்து மற்றும் மீட்பு பணியின் பொழுது இரும்பு கம்பிகளை சுலபமாக வெட்டும் கருவி ரூ.2,24,200 மதிப்பீட்டிலும்,
மேலும் 2 எண்ணிக்கையிலான நீர் நிலைகள் மற்றும் கிணற்றுக்குள் மூழ்கி தவிப்பவர்களை தெரிந்துகொள்வதற்கான கேமரா, 2 எண்ணிக்கையிலான வெள்ளம் சூழ்ந்த இடங்களிலிருந்து நீரினை வெளியேற்றும் கருவி ஆகியவை ரூ.1,19,876 மதிப்பீட்டிலும், புகை சூழுந்த நிலையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் கருவி ரூ.75,040 மதிப்பீட்டிலும்,
5 எண்ணிக்கையிலான கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் வகையில் கான்கிரிட் தளங்கள் மற்றும் இரும்புகளை அகற்றும் கருவி ரூ.21,000 மதிப்பீட்டிலும், 11 எண்ணிக்கையிலான பாம்பு பிடிக்கும் கருவி, 11 எண்ணிக்கையிலான முழு கவச உடை ரூ.1,16,435 என ஆகமொத்தம் ரூ.5,56,551 மதிப்பிலான 34 கருவிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்கருவிகளை முழுமையாக பயன்படுத்தி பேரிடர் காலங்களில் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சூரியபிரபு மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- குளத்தூர் நாயக்கர் பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- பள்ளி தலைமை ஆசிரியர்பெரியசாமி தலைமை வகித்தார்
புதுக்கோட்டை :
கந்தர்வகோட்டை அருகே மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புண்ணியமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.பள்ளி தலைமை ஆசிரியர்பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரன் வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார்.
விளையாட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர் மாலா, பள்ளி ஆசிரியர்கள் வெள்ளையம்மாள், சாந்தகுமாரி, தர்மா பாய், ராதா, இலக்கியா, குணசேகரன், ஓவியா பூபதி ஆகியோர் செயல்பட்டனர்.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுதந்திர தினத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- சோழீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
- பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கி ழமையையொட்டி 63ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளி நாளில் திருவிளக்கு பூஜை நடைபெறும். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக திருவிளக்கு பூஜை நடைபெறாத நிலையில் நடப்பாண்டுக்கான திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.
சிவாச்சாரியார் வைரவன், கணேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருவிளக்கு மந்திரம் ஒதி பூஜையை வழிநடத்தினர். பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த 1001 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். பூஜையையொட்டி சோழீஸ்வரர் மற்றும் ஆவுடையநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை சோழீஸ்வரர் கோயில் திருவிளக்கு பூஜை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
அதுபோல கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரர் கோயில், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், பாலமுருகன் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதர் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற ஆடிவெள்ளி சிறப்புவழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
- பிரதமந்திரின் பென்சன் திட்ட தொடக்க முகாம் நடைபெற்றது
- 18 முதல் 40வயது உடையவர்களை பதிவு செய்து தொடங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் பிரதமந்திரின் பென்சன் திட்ட தொடக்க முகாம் நடந்தது. கண்டியாநத்தம் கிராம சேவை மையக்கட்டிடத்தில் புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் மூலம் பிரதம மந்திரியின் பென்சன் திட்டத்தில் 18 முதல் 40வயது உடையவர்களை இந்த திட்டத்தில் பதிவு செய்து தொடங்கப்பட்டது. இந்த முகமினை ஊராட்சித்தலைவர் செல்விமுருகேசன் தொடங்கிவைத்தார். ஊராட்சி உறுப்பினர்கள் அழகப்பன், சரோஜாதேவி, ஊராட்சி செயலர் அழகப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தைச்சேர்ந்த அருள் ஆதார் எண், வங்கி கணக்கு எண், கைபேசி ஆகியவைகளுடன் பதிவு செய்து பிரதம மந்திரின் பென்சன் திட்டத்தில் சேர்த்து தொடங்கிவைத்தார்.
- கறம்பக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது
- 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட சுற்று வ ட்டார பகுதிகள் மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகளும் விளையும் பூமி. அதிலும் குறிப்பாக கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட முள்ளங் குறிச்சி, கருவடதெரு, கருதெற்குதெரு, வாணக்கன்காடு திருமணஞ் சேரி, பட்டத்திக்காடு உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் 30க்கும் மேற்பட்ட கி ராமங்களில் வாழை விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொ ண்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் பலத்த காற்றுடன் பெய் த மழையால் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் முழுமையாக சாய்ந்து உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி வாழை விவசாயிகள் கூறும் போது, இன்னும் 20 நாள் முதல் 30 நாட்களுக்குள் பலன் தரக்கூடிய குலை தள்ளிய வாழை மரங்கள் முழுமையாக சாய்ந்துள்ளதால் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பாலாய் போய்விட்டதாகவும் கைக்கு எட்டியது வாய் க்கு எட்டவில்லை என்றும் ஏற்கனவே பல இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் நேற்று இரவு 45 நிமிடம் வீசிய பலத்த காற்றால் வாழை விவசாயிகளி ன் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பரிபொய்விட்டது.
ஒவ்வொரு வாழை மரத்திற்கும் நூறு ரூபாய் வரை செலவு செய்து உள்ளதாகவும், தற்பொழுது சாய்ந்த மரங்களை அகற்ற கூலி ஆட்கள் வைக்க கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் விழுந்த மரங்கள் அனைத்தும் எதர்க்கும் பயன்படாத சூழ்நிலையில் பல லட்சம் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட பணத்தை எப்படி எடுக்க போகிறோம்.
இதற்கு உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உ ரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களி ல் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் சென்று சாய்ந்த மரங்களை ஆய்வு மேற்கொண்டு அப்பபகுதி விவசாயிகளிடம் ஆறுதல் கூறி அவர்களது கோரிக்கையை கேட்டு அறிந்தார்.
இது குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட் சியர் மூலம் தமிழக அரசுக்கு சேத மதிப்பை கணக்கீடு செய்து அனு ப்பி உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தெரிவித்தார்.






