என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் செஸ் ஒலிம்பியாட் குறித்து கோலப்போட்டி
புதுக்கோட்டை:
சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆலங்குடி பேரூராட்சி மாமன்ற தலைவர் ராசி முருகானந்தம் தலைமை தாங்கி, நம் செஸ் நமது பெருமை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தை கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, வட்டங்கச்சேரி திடலில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் கோல போட்டியை மதிப்பீடு செய்து முதல் பரிசு வழங்கினார். பேரூட்ராசி செயல் அலுவலர் பூவேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிக்குமார், ஆலங்குடி நகரச்செய லாளர் பழனிகுமார் மற்றும் துணைத்தலைவர் செங்கோல் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக விழிப்புணர்வு பேரணி ஆலங்குடி, அரசமரம், காமராஜர் சிலை, பஸ் ஸ்டாண்ட், பள்ளிவாசல் தெரு, சந்தப்பேட்டை வழியாக வடகாடு முக்கம் பேரூராட்சியை வந்து அடைந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரேவதி மற்றும் ஆலங்குடி நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கண்ணதாசன், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன்,
பொருத்துனர் குமார், சமூக மேம்பாடு மற்றும் மறு சீரமைப்பு அறக் கட்டளையின் நிறுவனத்தலைவர் அருண்ஜார்ஜ், மணிக்கண்டன் மற்றும் அலுவலக பணியாளர்கள், மாணவிகள் ஆலங்குடி நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, மாவட்ட பிரநிதி கே.வி.சுப்பையா மற்றும் பொதுமக்கள் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.






