என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
- கறம்பக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது
- 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட சுற்று வ ட்டார பகுதிகள் மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகளும் விளையும் பூமி. அதிலும் குறிப்பாக கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட முள்ளங் குறிச்சி, கருவடதெரு, கருதெற்குதெரு, வாணக்கன்காடு திருமணஞ் சேரி, பட்டத்திக்காடு உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் 30க்கும் மேற்பட்ட கி ராமங்களில் வாழை விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொ ண்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் பலத்த காற்றுடன் பெய் த மழையால் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் முழுமையாக சாய்ந்து உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி வாழை விவசாயிகள் கூறும் போது, இன்னும் 20 நாள் முதல் 30 நாட்களுக்குள் பலன் தரக்கூடிய குலை தள்ளிய வாழை மரங்கள் முழுமையாக சாய்ந்துள்ளதால் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பாலாய் போய்விட்டதாகவும் கைக்கு எட்டியது வாய் க்கு எட்டவில்லை என்றும் ஏற்கனவே பல இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் நேற்று இரவு 45 நிமிடம் வீசிய பலத்த காற்றால் வாழை விவசாயிகளி ன் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பரிபொய்விட்டது.
ஒவ்வொரு வாழை மரத்திற்கும் நூறு ரூபாய் வரை செலவு செய்து உள்ளதாகவும், தற்பொழுது சாய்ந்த மரங்களை அகற்ற கூலி ஆட்கள் வைக்க கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் விழுந்த மரங்கள் அனைத்தும் எதர்க்கும் பயன்படாத சூழ்நிலையில் பல லட்சம் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட பணத்தை எப்படி எடுக்க போகிறோம்.
இதற்கு உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உ ரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களி ல் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் சென்று சாய்ந்த மரங்களை ஆய்வு மேற்கொண்டு அப்பபகுதி விவசாயிகளிடம் ஆறுதல் கூறி அவர்களது கோரிக்கையை கேட்டு அறிந்தார்.
இது குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட் சியர் மூலம் தமிழக அரசுக்கு சேத மதிப்பை கணக்கீடு செய்து அனு ப்பி உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தெரிவித்தார்.






