என் மலர்
புதுக்கோட்டை
- தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
புதுக்கோட்டை:
புதுக்விகோட்ராடை மாவட்டம் விராலிமலை அருகே தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் அழகர். மனைவி உமாதேவி (வயது 35). இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உமா தேவியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாதேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலங்குடி பா.ஜ.க. ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பாஸ்கர் தலைமையி ல் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், மாவட்ட செயலாளர் மலர்மணி, ஒன்றிய பொதுச் செயலாளர் அரங்குளவன், ஒன்றிய பொதுச்செயலாளர் வெற்றி செழியன், ஒன்றிய பொ ருளாளர் மாரியப்பன் , திருவரங்குளம் ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் பாலமுருகன், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாடியம்மன் கோவில் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்தம், வருகின்ற 18-ந் தேதி மாநில தலைவர் வருகையின்போது திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்திலிருந்து அதிக மான நபர்களை அழைத்து வரவேற்பு அளிப்பது, அனைத்து பூத்துக்களிலும் கிளை கமிட்டி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- குடும்பத்தாரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குயை சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (வயது35). இவர் 14 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுததுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை நான் கூப்பிடும் இடத்திற்கு வரவேண்டும். இல்லை என்றால் உனது குடும்பத்தாரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் ரமேசை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
- கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை பங்கேற்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தக்கூடிய ஐந்தாவது புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு போட்டிகள் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளி–க்கும் விழா கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கந்த–ர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர்தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை சப்னம், மேலாண்மை குழு தலைவர் அகிலா சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமநாதன், தொல்லியல் கழக ஆசிரியர் மணிகண்டன், ஆசிரியர் துரையரசன் , வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர்ரஹ்மத்துல்லா, சின்ன ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.நிறைவாக பள்ளி ஆசிரி–யர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் நே ற்று நடைபெற்றது. கீரமங்கலம் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழு த்து வந்து நிலையை அடைந்தனர். இதில், கீரமங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
- அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது
- பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் ஏன காட்டு அய்யனார் கோயில் ஆடி மாதத்தில் குதிரை எடுப்பு திருவிழாவும் அதனைத்தொடர்ந்து ஏனமாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழாவும் நடைபெறும் கடந்த இரண்டு ஆண்டுகலாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை.
நடப்பாண்டு குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஏன மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா கலை கட்டியது. இதில் காட்டுப்பட்டி,வெள்ளையாண்டிபட்டி, சிவப்பிரகாசம் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்து கும்மியடித்து குழவை இட்டனர்.
பின்னர் ஏனகாட்டு அய்யனார் கோயிலுக்குச் சென்று வழிபட்டு பின்னர் அங்கிருந்து ஏனமாரியம்மன் கோயிலின் முன்பாக கூடையை இறக்கி பொங்கல் வைத்து படையலிட்டு அம்மனை 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வழிபடுவர் .
இதில் அனைத்து சமுதாயத்தினரும் ஜாதி மதம் பாராமல் ஒன்றுகூடி ஆண்டுதோறும் பாரம்பரியமாக இத்தகைய வழிபாடு செய்வதன் மூலமாக விவசாயம் செழிக்கும், நல்ல மழை பெய்யும், திருமண தோஷம் நீங்கும் , குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம் இதனாலேயே இது போன்ற வழிபாடுகளை செய்து வருவதாக காட்டுபட்டி கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
- புதுக்கோட்டையில் 1,000 பேர் 8 மணி நேர தொடர் நடனம் நடைபெற்றது
- செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு
புதுக்கோட்டை:
செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதுக்கோட்டையில் 1000 பேர் பங்கேற்று விழிப்புணர்வு சாதனைகளுடன் 8 மணி நேரம் இடைவிடாது நிகழ்த்திய நடன நிகழ்ச்சியானது உலக சாதனை பட்டியலில் இடம் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
44 -வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந் தேதி மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இது குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்வாக ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெறும் வகையில் 1000 நபர்கள் பங்கேற்று இடைவிடாது 8 மணி நேரம் நடனமாடிய செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி களைச் சர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று காலை 11 மணி முதல் 8 மணி நேரம் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று நடனம், சதுரங்கா ஒளிரும் முகங்கள் என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சதுரங்கம் போட்டியை நினைவூட்டும் வகையிலான அலங்கார ஆடைகளுடன் வேடமணிந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
வர்ஷா என்ற திருநங்கை ஆணி பலகை மீது நின்று தலையில் கரகம் வைத்து நடனமாடினார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் நாட்டியாலயா பள்ளிகளைச் சேர்ந்த நபர்கள் இடைவிடாத நடனமாடி செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து 8 மணி நேரமாக நடனமாடிய சாதனை நிகழ்ச்சியை உலக சாதனை நிகழ்வாக ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யும் வகையில் அந்நிறுவனத்தைச் சார்ந்த நபர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- 328 மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) ஆர்.கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- 2 மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றுவது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் பெருமை என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
- கம்பன் கழக நிறைவு விழாவில் பேசினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் 47-ம் ஆண்டு கம்பன் பெருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று நிறைவு நாள் மற்றும் பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக இசைவாணி மைதிலியின் வீணை இசை அரங்கேறியது.
கம்பன் கழக தலைவரும், தொழிலதிபருமான முத்துப்பட்டிணம் ச.ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கம்பன் கழகம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், வெளிநாட்டில் 50 நாடுகளில் செயல்படுகிறது. இருப்பினும் புதுக்கோட்டை கம்பன் கழகம்தான் 10 நாட்கள் விழாவை நடத்துவது சிறப்பாகும். இரு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றும் தமிழிசை சௌந்தரராஜனை புகுந்த வீட்டில் இருந்தாலும் பிறந்த வீட்டிற்கு அழைத்தன்பேரில் கலந்து கொண்டவரை வரவேற்கிறேன்.
தமிழ், தமிழ் இலக்கியங்கள், அறம் கலந்த விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே நான் தலைவர் பதவி ஏற்றுள்ளேன். இந்தமுறை வேகமாக பணிகள் மேற்க்கொண்டதால் சிலரை 10 நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலை. அடுத்த வருடம் இக்குறை போக்கப்பட்டு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றார். மேலும் நான் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டதால்தான் சிறப்பாக அமைந்தது என சிலர் சொன்னாலும் அதில் சிறு அளவு உண்மை இருந்தாலும் கம்பன் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உழைப்பு உள்ளது என்றார்.
நிறைவு நாள் விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:-
கம்பன் விழா ராமனுக்கான விழா. அதை தலைவர் ராமச்சந்திரன் நடத்துவது சிறப்பு. 10 மாதம் சுமந்தால்தான் நல்ல குழந்தையை பெற்றெடுக்கமுடியும். அதனால்தான் கம்பன் விழா புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடக்கின்றன. நான் மிகவும் சிரமப்பட்டே இவ்விழாவிற்கு வந்துள்ளேன். புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்க வந்துள்ளேன். நான்கு நிகழ்ச்சிகள் ஒத்துக் கொண்டதில் மூன்று நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளேன்.
இதை தவிர்க்க முடியாமல் கலந்துக் கொண்டுள்ளேன். எனக்கு இரண்டு மாநிலங்களில் ஆளுராக பணியாற்ற பிரதமர் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. தமிழர் என்பதால் கூடுதல் பணி கிடைத்துள்ளது. தமிழ் ஒலிக்கும் இடத்தில் தமிழிசை இருப்பாள். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற மொழிக்குகேற்ப எனது தந்தை பேச்சை கேட்டு இங்கு பேசுகிறேன் என்றார்.
கம்பன் இன்னொரு மொழியை கற்றுக்கொண்டு தமிழில் பாடல்களை கொடுத்தார். இதை வலியுறுத்திதான் புதிய கல்வி கொள்கையில் தேசிய கல்வி முறையில் இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். இதில் தாய்மொழி தமிழ் முதல் மொழியாக இருக்கவேண்டும் என கூறியதை சிலர் திருத்தி கூறி வருகின்றனர். தமிழை வளர்க்கும் கம்பன் கழகத்தை பாராட்டுகிறேன். இளைஞர்கள் அதிகளவில் கம்ப ராமாயணம் படிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
விழாவில் தென்னக ெரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன், சுப்பிரமணியன், முன்னிலை வகித்தனர். காடுவெட்டி குமார் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது. ரேவதி செல்லத்துரை வரவேற்றார். ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகை நடராஜன் முன்னிலை வகித்தார். கம்பனை கவிச்சக்கரவர்த்தியாக்கியது நேர்மறைப் பாத்திரங்களா? எதிர்மறை பாத்திரங்களா? என்ற தலைப்பில் நடைபெற்றது. திருச்சி மாது நடுவராக இருக்க ரவிக்குமார், பத்மா மோகன் ஆகியோர் நேர்மறை பாத்திரங்கள் என்றும், எதிர்மறை பாத்திரங்கள் என்ற தலைப்பில் எழிலரசி, சரவணன் ஆகியோரும் பேசினர்.
- ஆலங்குடி பணிமனையில் தி.மு.க. தொழிற் சங்க தேர்தல் நடைபெற்றது
- நான்கு பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டலம் ஆ லங்குடி கிளையில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் ஆலங்குடி பணிமனை நடைபெற்றது. இதில் பொருளாளர் பதவிக்கு கொத்தமங்கலம் நடத்துனர் சந்திரசேகரன் மற்றும் பாரதி போட்டியிட்டனர். சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரியக சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி, ஐயப்பன், ஆறுமுகம் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் வெற்றி பெற்றவர்கள் பணிமனை எதிரில் வெடி வெடித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர். முன்னதாக தலைவராக நடத்துனர் செல்வம், துணைத் தலைவராக ஓட்டுநர் சுந்தர்ராஜன். செயலாளராக ஓட்டுநர் கணேசன், துணைச் செயலாளராக செபஸ்தியார் மொத்தம் நான்கு பதவிகளுக்கு ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.
- பொன்னமராவதி பகுதிகளில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜனநாயக மாதர் சங்கத்தில் தீர்மானம்
புதுக்கோட்டை:
பொன்னமராவதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆறாவது ஒன்றிய மாநாடு எஸ்.லதா தலைமையில் நடைபெற்றது.
100 நாள் வேலை நேரத்தை காலை 7 மணி என்பதை 9 மணிக்கு மாற்ற வேண்டும்.பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்துவதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிக்கூடங்களை மாநில அரசு ஆய்வு செய்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
பொன்னமராவதி பகுதிகளில் நடைபெறுகிற பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், குழந்தை திருமணங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக ஒன்றிய தலைவராக ஏ.ரோகிணியும் ஒன்றிய செயலாளராக ஆர். மதியரசியும், ஒன்றிய பொருளாளராக கே. கலைச்செல்வியும், துணைத் தலைவர்களாக எஸ்.லதா, அழகு மீனா, ஒன்றிய துணைச் செயலாளர்களாக ரேவதி, சி.தேன்மொழி மற்றும் எட்டு பேர் கொண்ட ஒன்றிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.சலோமி சிறப்புரையாற்றினார்.
சி.பி.எம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன், வாலிபர் சங்க நிர்வாகி கே.குமார், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி.ராமசாமி,ஒன்றிய தலைவர் ஏ.செளந்தரராஜன், விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் விஆர்எம்.சாத்தையா, எஸ்.நல்லதம்பி, சிஐடியு எஸ்.மணிமாறன்,ஏ.தீன், எம்.மாயழகு, அனைத்து துறை ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வட்டார தலைவர் வி.சுப்பிரமணியன், ராமன், பாண்டியன், உள்ளிட்டோர் பங்கேற்று மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர்.
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- தனிப்படை போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள இச்சடி மாதா மளிகை கடையில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலம் விற்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் வந்திதா பாண்டேவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவரின் உத்தரவு படி விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது எஸ் மேலப்பட்டி செம்பட்டிவிடுதியைசேர்ந்த அற்புதசாமி மகன் மரியசூசை (வயது 24) இவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் இருப்பதை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர். இதே போல் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த வடவாளம் முக்காணிபட்டியைசேர்ந்த அருளாந்து மகன் ஆரோக்சியசாமி ஆகியோரை பிடித்து, அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் இருவர் மீது வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.






