என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
  X

  விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
  • கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை பங்கேற்பு

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தக்கூடிய ஐந்தாவது புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு போட்டிகள் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெற்றது.

  இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளி–க்கும் விழா கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

  விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

  இந்த நிகழ்ச்சியில் கந்த–ர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர்தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை சப்னம், மேலாண்மை குழு தலைவர் அகிலா சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமநாதன், தொல்லியல் கழக ஆசிரியர் மணிகண்டன், ஆசிரியர் துரையரசன் , வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர்ரஹ்மத்துல்லா, சின்ன ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.நிறைவாக பள்ளி ஆசிரி–யர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

  Next Story
  ×