search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் 1,000 பேர் 8 மணி நேர தொடர் நடனம்
    X

    புதுக்கோட்டையில் 1,000 பேர் 8 மணி நேர தொடர் நடனம்

    • புதுக்கோட்டையில் 1,000 பேர் 8 மணி நேர தொடர் நடனம் நடைபெற்றது
    • செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு

    புதுக்கோட்டை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதுக்கோட்டையில் 1000 பேர் பங்கேற்று விழிப்புணர்வு சாதனைகளுடன் 8 மணி நேரம் இடைவிடாது நிகழ்த்திய நடன நிகழ்ச்சியானது உலக சாதனை பட்டியலில் இடம் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    44 -வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந் தேதி மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இது குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்வாக ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெறும் வகையில் 1000 நபர்கள் பங்கேற்று இடைவிடாது 8 மணி நேரம் நடனமாடிய செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி களைச் சர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று காலை 11 மணி முதல் 8 மணி நேரம் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று நடனம், சதுரங்கா ஒளிரும் முகங்கள் என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சதுரங்கம் போட்டியை நினைவூட்டும் வகையிலான அலங்கார ஆடைகளுடன் வேடமணிந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

    வர்ஷா என்ற திருநங்கை ஆணி பலகை மீது நின்று தலையில் கரகம் வைத்து நடனமாடினார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் நாட்டியாலயா பள்ளிகளைச் சேர்ந்த நபர்கள் இடைவிடாத நடனமாடி செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து 8 மணி நேரமாக நடனமாடிய சாதனை நிகழ்ச்சியை உலக சாதனை நிகழ்வாக ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யும் வகையில் அந்நிறுவனத்தைச் சார்ந்த நபர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×