என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கோவில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பூங்கா நகரில் ஸ்ரீ ராஜ யோக விநாயகர் கோவிலில் உள்ளது. இக்கோவில் சுவாமிக்கு இரண்டு நேரத்திலும் பூஜைகள் நடைபெறும். இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிர்வாகத்தினர், இன்று காலை வந்து பார்த்த போது கோவில் முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு கோவிலின் உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பார்வையாளர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டார் ராஜகோபால் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு நடந்தது
    • நூற்றுக்கணக்கானோர் நின்று பார்த்தனர்.

    புதுக்கோட்டை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது. அதன் தொடக்க விழா நிகழ்ச்சிகளை அனைத்து தொலைக்காட்சிகளில் எல்.இ.டி.திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் ஆலங்குடி தொகுதியில் பல ஊர்களில் பஸ் நிலையம், கடைவீதிகள் உள்படி பொது இடங்களில் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை நூற்றுக்கணக்கானேர் நின்று பார்த்தனர். இதே போல் திருவரங்குளம் வல்லத்திராகோட்டை கடைவீதி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • குடும்பத்தகராறில் தீக்குளித்த கணவர் உயிரிழந்தார்
    • ஒரு மாதகாலமாக பணி ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கருமங்காடு பகுதியை சார்ந்தவர் அழகப்பன். இவருக்கு நிரோஷா என்ற மனைவியும் இரண்டு ஆண்குழந்தைகளும் உள்ளனர். அழகப்பன் ஈரோட்டில் கூலி வேலை பார்த்துவந்துள்ளார். கடந்த ஒரு மாதகாலமாக பணி ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார். இதனால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அழகப்பன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் 90 சதவீத தீக்காயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகப்பன். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தி.மு.க. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து நடந்தது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்யக் கோரியும், அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தியும் போக்குவரத்து தொழிலாளர் சங்கமான திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் . ஆர்ப்பாட்டத்திற்கு கிளை பொருளாளர் பிச்சை, கிளை துணை செயலாளர் முருகேசன், கிளை துணை தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    புதுக்கோட்டை :

    அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது ஊரக வளர்ச்சி, ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிக்கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நீதிராஜ், உறுப்பினர்கள் லெட்சுமி, வனிதா, வீரதுரை, பரமசிவம், கவிதா, ஊராட்சி செயலாளர் அப்புராஜா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி தெற்குதோப்புபட்டி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வயது முதிர்வு காரணமாக இறந்தவரின் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக எடுத்து சென்றனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி தெற்குதோப்புபட்டி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மயான கரைக்கு செல்லும் சாலை வசதி இல்லாததால் கடந்த பல ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடத்தின் வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்துச் சென்று வருகின்றனர்.இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

    நேற்றைய தினம் கிராமத்தில் வயது முதிர்வு காரணமாக இறந்தவரின் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக எடுத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

    எனவே மயானத்திற்கு செல்ல உடனடியாக தார்சாலை அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குப்பக்குடி, பாத்தம்பட்டி, மேலக்கோட்டை கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் தென்னம்பாலையை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்
    • மது எடுப்புத் திருவிழா மாலை வேளைகளில் நடைபெறு வது வழக்கம். ஆனால் செல்லியம்மன் கோவில் மது எடுப்பு மட்டும் காலை பொழுதில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

    புதுக்கோட்டை :

    நல்ல மழைப்பொழிவு, விவசாயம் செழித்தல் மற்றும் ஊர் மக்களின் நலன் வேண்டி ஆடி மாதத்தில் மது எடுப்புத் திருவிழா நடைபெறுவது வழக்கம்

    ஆலங்குடி அருகே செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் குப்பக்குடி, பாத்தம்பட்டி, மேலக்கோட்டை கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் தென்னம்பாலையை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்.

    மேலும் மது எடுப்புத் திருவிழா மாலை வேளைகளில் நடைபெறு வது வழக்கம். ஆனால் செல்லியம்மன் கோவில் மது எடுப்பு மட்டும் காலை பொழுதில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பேருந்துநிலையம், அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே சென்று காந்திசிலை அருகே நிறைவடைந்தது.
    • மாணவர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் நமது செஸ் நமது பெருமை, நமது குப்பை நமது பொறுப்பு, நெகிழிப்பொருள்களை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.

    புதுக்கோட்டை :

    பொன்னமராவதி பேரூராட்சியில் செஸ் ஒலிம்பியாட் மற்றும் நகரின் தூய்மை இயக்க செயல்பாடுகள் விளக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமைவகித்தார். துணைத்தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பேருந்துநிலையம், அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே சென்று காந்திசிலை அருகே நிறைவடைந்தது.

    பேரணியில் பங்கேற்ற வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் நமது செஸ் நமது பெருமை, நமது குப்பை நமது பொறுப்பு, நெகிழிப்பொருள்களை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.

    பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், இளநிலை உதவியாளர் கேசவன், சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி, பாபு மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் நிகழ்சியில் பங்கேற்றனர்.

    • ஆலவயலில் , பொன்னமராவதி இயற்கை வேளாண்மை கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன உரம், பூச்சி மருந்து மற்றும் விதை விற்பனை நிலைய திறப்பு விழா நடை பெற்றது.
    • இதில் உதவி வேளாண்மை அலுவலர் ரெங்கபாஜுயம்,கூட்டுறவு வங்கிச்செயலர் பழனிச்சாமி, துணை த்தலைவர் சுப்புலெட்சுமி பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை :

    பொன்னமராவதி இயற்கை வேளாண்மை கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன உரம், பூச்சி மருந்து மற்றும் விதை விற்பனை நிலைய தொடக்க விழா ஆலவயலில் நடந்தது.

    விழாவிற்கு வட்டார த்தலைவர் கணேசன் தலைமைவகித்தார். மிராஸ்அழகப்பன்அம்பலம் முன்னிலைவகித்தார். ஊராட்சித்தலைவர் சந்திரா சக்திவேல் வேளாண்மை அலுவலர் ராதாகிருஸ்ணன், முதன்மைச்செயல் அலுவலர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விற்பனையகத்தை தொடங்கிவைத்தனர்.

    இதில் உதவி வேளாண்மை அலுவலர் ரெங்கபாஜுயம்,கூட்டுறவு வங்கிச்செயலர் பழனிச்சாமி, துணை த்தலைவர் சுப்புலெட்சுமி பழனிச்சாமி, உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சண்முகவேல், பொருளாளர் சிவசாமி,

    இயக்குனர்கள் மோகன், கணபதி, ராமலிங்கம், மணி, மலைச்சாமி, வெள்ளைச்சாமி,ஊராட்சி அளவிலான நிர்வாகிகள் முருகேசன், வருங்காலம்அடைக்கன், வடமலை,ஆண்டியப்பன்,அழகப்பன்,செல்லையா உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    • ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    புதுக்கோட்டை :

    அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது ஊரக வளர்ச்சி, ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிக்கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நீதிராஜ், உறுப்பினர்கள் லெட்சுமி, வனிதா, வீரதுரை, பரமசிவம், கவிதா, ஊராட்சி செயலாளர் அப்புராஜா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பெண்ணின் கைப்பையில் 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது.
    • புதிய பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது37). இவர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே நின்ற போது அவரது கைப்பையில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் மல்லிகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
    • ரூ.1.38 கோடி நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 67 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

    2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1000 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 363 பயனாளிகளுக்கு 411 எக்டர் பரப்பளவில் நுண்ணீ ர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1 கோடியே 38 லட்சம் 81 ஆயிரம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநர் (பொ) சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (வேளாண்மை) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    ×