என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி
    X

    பொன்னமராவதியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி

    • பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பேருந்துநிலையம், அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே சென்று காந்திசிலை அருகே நிறைவடைந்தது.
    • மாணவர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் நமது செஸ் நமது பெருமை, நமது குப்பை நமது பொறுப்பு, நெகிழிப்பொருள்களை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.

    புதுக்கோட்டை :

    பொன்னமராவதி பேரூராட்சியில் செஸ் ஒலிம்பியாட் மற்றும் நகரின் தூய்மை இயக்க செயல்பாடுகள் விளக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமைவகித்தார். துணைத்தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பேருந்துநிலையம், அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே சென்று காந்திசிலை அருகே நிறைவடைந்தது.

    பேரணியில் பங்கேற்ற வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் நமது செஸ் நமது பெருமை, நமது குப்பை நமது பொறுப்பு, நெகிழிப்பொருள்களை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.

    பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், இளநிலை உதவியாளர் கேசவன், சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி, பாபு மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் நிகழ்சியில் பங்கேற்றனர்.

    Next Story
    ×